Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
11 Jun 2023 4:56 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#34308

தார் சாலை அமைக்க கோரிக்கை

சாலை

சேலம் சிவதாபுரத்தில் இருந்து ஆண்டிப்பட்டி பகுதிக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இந்த வழியாக இருசக்கர வாகனங்களில் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்பவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-முனுசாமி, ஆண்டிப்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jun 2023 4:56 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#34307

குண்டும், குழியுமான சாலை

சாலை

சேலம் மாவட்டம் ஆத்தூரில் காந்திநகர் செல்லும் ரெயிலடி தெருவில் குடிநீர் குழாய் அமைக்க குழிகள் தோண்டப்பட்டன. ஆனால் மீண்டும் சரிசெய்யாததால் தற்போது இந்த சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-மாதேஸ்வரன், ஆத்தூர், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jun 2023 4:54 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#34304

வணிக வளாகம் பயன்பாட்டுக்கு வருமா?

மற்றவை

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகே மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் விற்பனை செய்வதற்கு ஏதுவாக பூமாலை வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. இந்த வணிக வளாகத்தில் 18 கடைகள். ஒரு பயிற்சி கூடம் உள்ளன. கடந்த 2007-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த பூமாலை வணிக வளாகம் முழுமையாக பயன்பாட்டிற்கு வரவில்லை. இதன் காரணமாக இங்கு சமூக விரோதிகள் மது குடித்துவிட்டு அநத வழியே செல்பவர்களுக்கு தொல்லை கொடுத்து வருகின்றனர். எனவே, பூமாலை வணிக வளாகம் முன்பு சுற்றுச்சுவர் அமைத்தும், 4 புறமும் கண்காணிப்பு...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jun 2023 4:53 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#34301

வீணாகும் ஒகேனக்கல் குடிநீர்

தண்ணீர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை-பாலக்கோடு ரோடு எச்சம்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் ஒகேனக்கல் குடிநீர் குழாய் உடைந்து சில மாதங்களாக தண்ணர் வீணாகி கொண்டிருக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதி அடைகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-முருகன், எச்சம்பட்டி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jun 2023 4:53 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#34300

உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கலாமே!

மின்சாரம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே புனுகன் தொட்டி கிராமத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ளன. இந்த நிலையில் நீண்ட காலமாகவே இந்த பகுதியில் உயர்கோபுர மின்விளக்குகள், தெரு விளக்குகள் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உயர்கோபுர மின்விளக்குகள் அமைத்து தர வேண்டும்.-செல்வகுமாரன் ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jun 2023 4:52 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#34297

எரியாத தெருவிளக்குகள்

மின்சாரம்

கிருஷ்ணகிரி அருகே ஆலப்பட்டி கிராமத்தில் பல தெருக்களில் உள்ள மின்விளக்குகள் ஒரு மாத்திற்கும் மேலாக எரியவில்லை. இதனால் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் பொது மக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். மேலும் திருட்டு சம்பவங்களும் நடக்கிறது. எனவே மின்விளக்குகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-சாய்குமார், ஆலப்பட்டி காலனி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jun 2023 4:51 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#34296

குடிநீர் வசதி

தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் அரூர் பேரூராட்சி 3-வது வார்டில் டாக்டர் பாஷா தெருவில் மருத்துவமனைகள், வணிக நிறுவனங்கள், உள்ளன. இங்கு வரும் பொதுமக்கள் குடிநீர் இல்லாமல் சிரமப்படுகிறார்கள். இங்கு ஏற்கனவே இருந்த அடிபம்பை அகற்றிவிட்டனர். இங்கு மின்மோட்டாருடன் கூடிய குடிநீர் தொட்டி அமைத்து தர வேண்டி பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே குடிநீர் தொட்டி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சிங்கராயன், அரூர், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jun 2023 4:50 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#34295

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

தர்மபுரி மாவட்டம் ஏரியூருக்கு தினமும் அத்தியாவசிய தேவைகளுக்காகவும், பள்ளி, கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள், பொதுமக்கள் வந்து செல்கின்றனர். ஆனால் இந்த வாகனங்களை நிறுத்த போதுமான இட வசதி இல்லாததால் சாலையிலேயே வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே வாகனங்கள் நிறுத்துபவர்கள் மீது போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சண்முகம், ஏரியூர், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jun 2023 4:49 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#34293

சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?

கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் போலீஸ் நிலையம், அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதியில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துாநாற்றம் வீசுவதுடன் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-கணபதி, பென்னாகரம், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jun 2023 4:49 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#34291

சேதமடைந்த குடிநீர் தொட்டி

தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே எம்.செட்டிஅள்ளி ஊராட்சி வெள்ளிச்சந்தை சாலையில் தண்ணீர் தொட்டி உள்ளது. இந்த தண்ணீர் தொட்டி பராமரிப்பின்றி புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். எனவே இந்த தண்ணீர் தொட்டியை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-செல்வம், மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jun 2023 5:02 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#34128

பாதியில் நிற்கும் சாக்கடை கால்வாய் பணி

கழிவுநீர்

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த தும்பிப்பாடி கிராமம், முள்ளிச் செட்டிப்பட்டியில் சாக்கடை கால்வாய் பணி பல நாட்களாக பணி நடைபெறாமல் பாதியில் நிற்கிறது. இதனால் அந்த பகுதி பொதுமக்களுக்கு அடிக்கடி தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. மேலும் வீட்டில் இருந்து வெளியே வரமுடியாமலும் சிரமப்படுகின்றனர். எனவே சாக்கடை கால்வாய் பணியை விரைந்து முடித்து தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-விஷ்ணு, முள்ளிச்செட்டிப்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jun 2023 5:01 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#34127

மேற்கூரையால் விபத்து

சாலை

சேலம் அழகாபுரம் நகர மலை மெயின் ரோட்டின் ஓரம் கடைகள் நிறைய உள்ளன. அந்த கடைக்காரர்கள் மெயின் ரோட்டை ஆக்கிரமித்தபடி மேற்கூரை அமைத்துள்ளனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ேமலும் இரண்டு பள்ளிக்கூடங்கள் நகர மலை அடிவாரத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பிரபா, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick