Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
18 Jun 2023 5:15 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#34750

சேதமடைந்த மின்கம்பம்

மின்சாரம்

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மோளையானூர் ஆதி திராவிடர் காலனியில் உள்ள மின் கம்பம் சேதமடைந்து முற்றிலும் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து காணப்படுகிறது.மழை காலங்களில் வேகமாக காற்று அடித்தால் மின்கம்பம் கீழே விழுந்து விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த இந்த மின்கம்பத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-கண்ணன், பாப்பிரெட்டிப்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jun 2023 5:14 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#34749

குடிநீர் தொட்டியை சீரமைக்க கோரிக்கை

தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சி 4-வது வார்டில் குடிநீர் தொட்டி சுமார் 2 ஆண்டுகளாக பழுதடைந்து உள்ளது. இதனால் இப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் குடிநீருக்காக சிரமப்படுகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அதிகாரிகள் பழுதடைந்த குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-கோவிந்தன், மாரண்டஅள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jun 2023 5:13 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#34748

போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா?

போக்குவரத்து

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு மாநில நெடுஞ்சாலையை ஒட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களும், சாலையின் எதிர் திசையில் உள்ள அண்ணா தொடக்கப்பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளும் பயின்று வருகின்றனர். மாலை நேரங்களில் பள்ளியை விட்டு வீடு திரும்பும் மாணவ- மாணவியர், ஆபத்தான நிலையில் நெடுஞ்சாலையை கடந்து செல்கின்றனர். நெடுஞ்சாலையில் வாகனங்கள் வேகமாக வருவதால் பள்ளி மாணவ, மாணவிகள் சாலையை கடக்க அச்சப்படுகின்றனர். மேலும் விபத்துகள் ஏற்படும் அபாயமும் ஏற்படுகிறது....

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jun 2023 5:12 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#34747

"தினத்தந்தி"க்கு பாராட்டு

ட்ரெண்டிங்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சிகரலப்பள்ளி ஊராட்சி மத்தூர் கூட் ரோட்டில் பயணிகள் நிழற்கூடம் சேதமடைந்து உள்ளது என "தினத்தந்தி" புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியாகி இருந்தது. இதையடுத்து அதிகாரிகள் தற்போது இந்த பயணிகள் நிழற்கூடத்தை சீரமைத்துள்ளனர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்திக்கு உதவிய "தினத்தந்தி"க்கும் அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.-ரவி, பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jun 2023 5:11 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#34746

அடிப்படை வசதிகள்

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகில் ஹவுசிங்போர்டில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு தார்ச்சாலை அமைக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. தற்போது இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாததால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தெரு விளக்கு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால் அப்பகுதி மக்கள் அவதி அடைகின்றனர். எனவே அப்பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சுரேஷ்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Jun 2023 5:32 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#34555

அகற்ற வேண்டிய மின்கம்பம்

மின்சாரம்

சேலம் 4 ரோடு ஹவுசிங் ரோடு பகுதியில் உள்ள மின்கம்பம் பயனற்ற நிலையில் உள்ளது. இதனால் மழை காலங்களில் மின்சார விபத்துகள் ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது. எனவே இந்த மின்கம்பத்தை உடனடியாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.- ராஜா, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Jun 2023 5:32 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#34554

சாக்கடை கால்வாய்

கழிவுநீர்

சேலம் மாநகராட்சி 34-வது வார்டு கார்பெட் தெரு பகுதியில் சுமார் 10 ஆண்டுக்கும் மேலாக சாலை, சாக்கடை கால்வாய் வசதிகள் எதுவும் சரிவர செய்யவில்லை. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அடிப்படை வசதிகள் கூட கிடைக்காமல் அவதியடைகின்றனர். எனவே அதிகாரிகள் உடனடியாக அப்பகுதி மக்களுக்கு சாக்கடை கால்வாய் உள்பட அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.-மனோகரன், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Jun 2023 5:31 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#34553

சாலை அமைக்க கோரிக்கை

சாலை

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ராஜவீதி பகுதியில் பள்ளிபாளையத்தில் இருந்து திருச்செங்கோட்டிற்கு செல்லும் குடிநீர் குழாய் உடைந்து பள்ளம் ஏற்பட்டது. உடைந்த குழாயை சரி செய்து பள்ளம் மூடப்பப்பட்டது. ஆனால் புதிதாக சாலை அமைக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்லும் போது மண் புழுதி பறக்கிறது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்வோர் கண்களில் புழுதிபட்டு கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே இந்த பகுதியில் புதிதாக சாலை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-பாபு, பள்ளிபாளையம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Jun 2023 5:30 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#34551

பள்ளமான சாலை

சாலை

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் இருந்து வளையபட்டி செல்லும் சாலையில் பரளி பிரிவு ரோடு அருகே தார் சாலையில் குடிநீர் குழாய் ெகாண்டு செல்வதற்காக குழி தோண்டப்பட்டது. அதை சரியாக மூடி மீண்டும் தார் போடாததால் சாலை பள்ளமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சின்னப்பன், மோகனூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Jun 2023 5:29 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#34550

ஓடையில் கொட்டப்படும் மாம்பழங்கள்

மற்றவை

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பேரூராட்சி சங்கொலி நிலையம் பகுதியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட மாங்காய் குடோன்கள் இயங்கி வருகின்றன. இங்கிருந்து அழுகிய மாம்பழங்கள் அருகில் உள்ள சோமேஸ்வரர் ஓடையில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அந்த வழியே சென்று வருவோர் துர்நாற்றத்தால் அவதியடைகின்றனர். எனவே அழுகிய மாம்பழங்களை பேரூராட்சி நிர்வாகத்தினர் குப்பை கொட்டும் இடத்திற்கு கொண்டு சென்று கொட்ட வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-நிவாஸ், சேந்தமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Jun 2023 5:29 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#34549

நோய் பரவும் அபாயம்

கழிவுநீர்

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அலங்காநத்தம் பிரிவு சாலையில் செங்கல் சூளைகள் அதிகமாக செயல்பட்டு வருகின்றன. இதிலிருந்து வெளியேறும் புகையால் அந்த வழியே வாகனங்களில் செல்வோர் சிரமப்படுகின்றனர். அப்பகுதியில் வசிக்கும் மக்கள் ஆஸ்துமா, மூச்சுத்திணறல் போன்ற நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இதனை ஒழுங்கப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-மனோகரன், எருமப்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Jun 2023 5:25 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#34547

அபாய குழி

சாலை

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே தொப்பூர் ஊராட்சி தொப்பூர் போலீஸ் நிலையம் முன்பு உள்ள சேதமடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க குழி தோண்டப்பட்டது. ஆனால் மீ்ண்டும் மூடப்படாமல் சாலையோரமாக அபாயக் குழியாக இருந்து வருகிறது. இதனால் இந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த குழியை உடனடியாக மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சூர்யா, நல்லம்பள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick