Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
21 Jun 2023 5:23 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#34960

குண்டும், குழியுமான சாலை

சாலை

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகா பிக்கிலி ஊராட்சி தண்டுகாரனஅள்ளி, குறவன் திண்ணை, எம்.கே.நகர் ஆகிய கிராமங்களுக்குச் செல்லும் தார்சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் அடிக்கடி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே இந்த சாலையை உடனடியாக சீரைமக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-பசுபதி, பென்னாகரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Jun 2023 5:21 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#34958

தாசில்தார் குடியிருப்பு சீரமைக்கப்படுமா?

மற்றவை

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வாரச்சந்தை பகுதியில் தாசில்தார் குடியிருப்பு பங்களா உள்ளது. இந்த தாசில்தார் குடியிருப்பு பங்களா பயன்படுத்தப்படாமல் பூட்டியே உள்ளதால் பங்களா வளாகம் முழுவதும் முட்புதர்கள் மண்டி கிடக்கிறது. மேலும் தாசில்தார் பங்களாவை சுற்றியுள்ள பகுதிகளில் விஷபூச்சிகள் நடமாட்டம் உள்ளது. எனவே இந்த பகுதியில் செல்லவே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே இந்த தாசில்தார் குடியிருப்பு பங்களாவை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-சந்தோஷ், நல்லம்பள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Jun 2023 5:19 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#34956

புதிய குடிநீர் தொட்டி

தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சி வெள்ளிச்சந்தை செல்லும் சாலையில் அங்காளம்மன் கோவில் அருகே குடிநீர் தொட்டி உள்ளது. இந்த குடிநீர் தொட்டி உடைந்து கடந்த சில நாட்களாக தண்ணீர் வீணாகிறது. இதுகுறித்து பலமுறை பேரூராட்சியில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உடைந்த குடிநீர் தொட்டியை மாற்றி புதிய குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-மாதேஷ், மாரண்டஅள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jun 2023 5:25 PM GMT
Mr.Nagarajan | சேலம்-தெற்கு
#34759

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

சேலம் சூரமங்கலத்தில் இருந்து உழவர் சந்தை வழியாக ரங்கா நகருக்கு செல்லும் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இதனால் இந்த வழியாக பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே இந்த சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சதீஷ்குமார், சுப்பிரமணிய நகர், சேலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jun 2023 5:24 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#34758

நோய் பரவும் அபாயம்

குப்பை

சேலம் அங்கம்மாள் காலனி சாமிநாதபுரம் செல்லும் சாலையின் ஓரத்தில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இந்த குப்பைகளை சரிவர அகற்றாததால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. அந்த வழியாக செல்லும் பொது மக்கள் மூக்கை பிடித்து கொண்டு செல்லும் அவல நிலை ஏற்படுகிறது. எனவே இந்த குப்பைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-துரை, அங்கம்மாள் காலனி, சேலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jun 2023 5:23 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#34757

வேகத்தடை அமைக்கப்படுமா?

சாலை

சேலம் மாவட்டம் கெங்கவல்லி தாலுகா ந.பள்ளக்காடு கிராம பஸ் நிறுத்தத்தில் வேகத்தடை எதுவும் இல்லை. இதனால் அப்பகுதியில் இருசக்கர வாகனங்களில் வேகமாக செல்பவர்கள் விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே இந்த பகுதியில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வேகத்தடை அமைப்பார்களா?-பிரவீன், கெங்கவல்லி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jun 2023 5:22 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#34756

பெயர் பலகை வைக்கலாமே!

மற்றவை

சேலம் 56-வது வார்டு கருங்கல்பட்டியில் உள்ள பாண்டுரங்க விட்டல் 3-வது தெருவில் பெயர் பலகை இல்லை. இதனால் தபால்காரர்கள், கால் டாக்சி டிரைவர்கள், புதிதாக அந்த பகுதிக்கு வருபவர்கள் முகவரி தெரியாமல் சிரமப்படுகிறார்கள். எனவே அந்த தெருவிற்கு பெயர் பலகை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சுப்பிரமணியன், கருங்கல்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jun 2023 5:21 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#34755

குப்பைகள் அகற்ற கோரிக்கை

குப்பை

நாமக்கல் மாவட்டம் மோகனூருக்கும், கரூர் மாவட்டம் வாங்கலுக்கும் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட தரைவழி பாலம் உள்ளது. இதில் தினசரி ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் பாலத்தின் இரு ஓரங்களிலும் குப்பைகள் அதிக அளவில் குவிந்து கிடக்கின்றன. காற்று பலமாக அடிக்கும் போது இந்த குப்பைகள் பறந்து இரு சக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகளின் முகத்தில் விழுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் அபாயம் ஏற்படுகிறது. எனவே இந்த குப்பைகளை அகற்ற வேண்டும் வாகன ஓட்டிகள் கோரிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jun 2023 5:21 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#34754

பொதுக்கழிப்பிடம் திறக்கப்படுமா?

கழிவுநீர்

நாமக்கல் மாவட்டம் குமராபாளையம் நகராட்சி 7-வது வார்டு முருங்கைக்காடு பகுதியில் இயங்கி வந்த பொதுக்கழிப்பிடம் கடந்த சில மாதங்களாக மூடப்பட்டுள்ளது. அதனால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இயற்கை உபாதைகளை கழிக்க மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே இந்த பொதுக்கழிப்பிடத்தை சீரமைத்து திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா ?-சுந்தர்ராஜ், முருங்கைக்காடு, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jun 2023 5:18 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#34753

நடவடிக்கை எடுக்க வேண்டும்

போக்குவரத்து

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பள்ளி சாலையில் மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த சாலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக செல்கின்றனர். மேலும் மாணவிகளை கேலி, கிண்டல் செய்து வருகிறார்கள். எனவே இப்பள்ளியின் முன்பு பெண் போலீசாரை பாதுகாப்பிற்காக நிறுத்த வேண்டும், மாணவிகளை கேலி, கிண்டல் செய்பவர்களையும், மோட்டார் சைக்கிள்களில் விதிமுறைகளை மீறி அதிவேகத்தில் அதிக ஒலி எழுப்பிக் கொண்டு செல்பவர்கள் மீதும்...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jun 2023 5:17 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#34752

மதுபிரியர்களின் கூடாரம்

மற்றவை

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சோமேஸ்வரர் ஓடை அருகில் இருந்து காந்திபுரம் வழியாக புறவழிச்சாலை செல்கிறது. அந்த சாலையில் புதிதாக பயணிகள் நிழற்கூடம் கட்டப்பட்டுள்ளது. இந்த நிழற்கூடத்தில் மது பிரியர்கள் மது குடித்துவிட்டு பாட்டில்களை அங்கேயே போட்டு விட்டு செல்கின்றனர். இதனை தடுக்க சமந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-அசாருதீன், சேந்தமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jun 2023 5:16 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#34751

கழிவுநீர் கால்வாய்

கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகா மாதேஅள்ளி துணை சுகாதார நிலையம் முன்பு உள்ள கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்த கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாததால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார நிலையத்திற்கு வரும் நோயாளிகள் துர்நாற்றத்தால் அவதியடைகின்றனர். எனவே இந்த கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.- முனியப்பன், மாதேஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick