Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
21 Jun 2023 5:39 PM GMT
Mr.Nagarajan | சேலம்-தெற்கு
#34979

அறிவிப்பு பலகை

போக்குவரத்து

சேலம் புதிய பஸ் நிலையத்தில் புதியதாக கட்டப்பட்ட மேம்பாலத்தில் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. தற்போது இங்கு உள்ள அறிவிப்பு பலகை கீழே விழுந்து விட்டது. இதனால் புதிதாக வரும் பொது மக்கள் வழி தெரியாமல் அவதியடைகின்றனர். எனவே மீண்டும் அறிவிப்பு பலகையை சீரமைத்து அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-தீபக்குமார், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Jun 2023 5:38 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#34977

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

சேலத்தில் அரசு கலை கல்லூரி, எல்லை பிடாரி அம்மன் கோவில் அருகே அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அந்த பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இப்பகுதியில் போக்குவரத்து போலீசார் கண்காணித்து போக்குவரத்தை சீர் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-தமிழ்வேல், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Jun 2023 5:38 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#34976

மின்விளக்கு பொருத்தப்படுமா?

மின்சாரம்

சேலம் மாவட்டம் தேக்கம்பட்டி கிராமத்தில் ஆதிதிராவிட காலனியில் இருந்து சேனைகவுண்டனூர், ஊத்து ஓடை பகுதிகளுக்கு செல்லும் சாலையில் மின்கம்பத்தில் மின்விளக்குகள் பொருத்தப்படவில்லை. இந்த சாலையில் இரவு நேரங்களில் பாம்பு, விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் பொது மக்கள் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். மேலும் திருட்டு அச்சமும் ஏற்படுகிறது. எனவே இந்த மின்கம்பத்தில் மின்விளக்குகள் பொருத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-தனகோடி, தேக்கம்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Jun 2023 5:37 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#34975

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பேரூராட்சியில் மாரியம்மன் கோவில் தெருவில் நாள்தோறும் 10-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றி திரிகின்றன. காலை, இரவு நேரங்களில் அந்த தெருவில் செல்பவர்களை நாய்கள் துரத்தி கடிக்கின்றன. மேலும் வாகன ஓட்டிகளை துரத்துவதால் அவர்கள் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே இந்த தெருநாய்களை பிடித்து செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சுந்தரேசன், சேந்தமங்கலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Jun 2023 5:36 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#34974

ஏரி தூர்வாரப்படுமா?

மற்றவை

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகே மதியம்பட்டி ஏரியில் தண்ணீர் இல்லாமல் தற்போது வறண்டு காணப்படுகிறது. பொதுப்பணித்துறையினர் ஏரி பகுதியை முறையாக தூர்வாரி ஆழப்படுத்தி மழைக்காலங்களில் பெய்யும் மழை நீரை முறையாக சேமித்து வைத்தால் இந்த பகுதியில் உள்ள கிணறுகள் அனைத்திலும் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து காணப்படும். இந்த பகுதியில் விவசாயம் செழிக்கும். வீணாக மழைநீர் சாக்கடையில் கலக்காமல் சேமிக்க ஏரியை முறையாக பராமரிக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-பழனி, வெண்ணந்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Jun 2023 5:35 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#34973

மூட வேண்டிய குடிநீர் தொட்டி

தண்ணீர்

நாமக்கல் மாவட்டம் மோகனூர் காவிரி ஆற்றில் இருந்து நாமக்கல் நகராட்சி பகுதிக்கு குழாய் மூலம் குடிநீர் செல்கிறது. மோகனூர் பேரூராட்சி பகுதியில் உள்ள பழைய தாலுகா அலுவலகம் அருகில் தரைமட்ட குடிநீர் தொட்டி கட்டப்பட்டு உள்ளது. அதன்மேல் உள்ள சிமெண்டு சிலாப்பு உடைந்து திறந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் தடுமாறி விழும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த குடிநீர் தொட்டியை புதிய சிமெண்டு சிலாப்பு கொண்டு மூட வேண்டும்.-சுப்புலட்சுமி, மோகனூர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Jun 2023 5:35 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#34972

நோய் பரவும் அபாயம்

குப்பை

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் கோம்புபள்ளம் ஓடையில் ஓட்டல் கழிவுகள், இறைச்சி கழிவுகள் மற்றும் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் ஓடையில் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் அடைப்பு ஏற்பட்டு தேங்கி நிற்கிறது. அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் ஏற்படுகிறது. எனவே இந்த ஓடையில் குப்பைகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-ரவி, குமாரபாளையம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Jun 2023 5:30 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#34969

கழிவுநீர் கால்வாய் அமைக்க கோரிக்கை

கழிவுநீர்

கிருஷ்ணகிரியில் உள்ள கட்டிக்கானப்பள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. மேலும் இந்த பகுதியை சுற்றி வங்கிகள், பள்ளிகள் அமைந்துள்ளன. இந்த குடியிருப்பு 2-வது பேஸ் பகுதியில் கழிவுநீர் குளம் போல் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதியில் கொசு தொல்லை அதிகமாகி மலேரியா, டெங்கு போன்ற பல்வேறு நோய் தொல்லை ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Jun 2023 5:29 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#34968

டாஸ்மாக் கடை அகற்றப்படுமா?

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த அச்சமங்கலம் கூட்ரோட்டில் ஒரே இடத்தில் 2 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இங்கு வந்து மது குடிக்கும் மதுப்பிரியர்கள் போதையில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகின்றனர். இதனால் அங்கு வசிக்கும் மக்களும், பஸ் ஏற வரும் வரும் பள்ளி மாணவர்களும் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். எனவே இந்த டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?-தினேஷ், பர்கூர்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Jun 2023 5:27 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#34967

சுகாதார கேடு

குப்பை

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஜெகதேவி ரோட்டில் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் அருகில் சாலையோரம் ஏராளமான குப்பைகள் மற்றும் பல்வேறு கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார கேடு ஏற்பட்டு உள்ளது. எனவே இந்த குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Jun 2023 5:24 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#34964

சாலையில் பள்ளம்

சாலை

ஓசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பத்தலபள்ளி அருகே காய்கறி மார்க்கெட் உள்ளது. இதன் நுழைவாயில் அருகே சாலையில் நீண்ட நாட்களாக பள்ளம் ஏற்பட்டு அதில் கழிவுநீர் தேங்கி உள்ளது. இந்த பகுதியில் நாள் தோறும் வியாபாரிகள், பொது மக்கள் உள்பட ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. இங்கு பள்ளம் இருப்பதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இந்த பள்ளத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- பி.பிரகாஷ், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Jun 2023 5:24 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#34962

குறுகலான சாலை

சாலை

தர்மபுரி மாவட்டம் 27-வது வார்டில் பெரும்பான்மையான தெருக்கள் ஆக்கிரமிப்பால் மிகவும் குறுகலாக உள்ளன. குறிப்பாக நரசிம்மாச்சாரி தெரு, காந்திநகரில் உள்ள சாலைகள் குறுகலாக உள்ளதால் இந்த தெருக்களில் வாகனங்கள் செல்ல முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றன. மேலும் வேகமாக செல்லும் போது விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே இந்த இந்த தெருக்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி சாலையை விரிவுபடுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பாபு, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick