Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
25 Jun 2023 5:12 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#35164

ஆபத்தான பயணம்

போக்குவரத்து

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் அரசு டவுன் பஸ், மினி டவுன் பஸ்களில் பள்ளி மாணவி, மாணவிகள் பள்ளிக்கு வரும் போதும், மாலையில் பள்ளியில் இருந்து வீட்டுக்கு திரும்பும் போதும் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர். இதனால் விபத்துகள் ஏற்பட்டு உயிர் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் இதுபோன்று ஆபத்தான முறையில் மாணவர்களை ஏற்றிச்செல்லும் பஸ் டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சந்தோஷ், பள்ளிபாளையம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Jun 2023 5:12 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#35163

சாலை விரைந்து அமைக்கப்படுமா?

சாலை

நாமக்கல் டவுன் நடராஜபுரம் 4-வது தெரு துறையூரில் இருந்து ரெயில் நிலையம் செல்லும் வழியில் சாலை அமைக்க கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சாலை தோண்டப்பட்டது. ஆனால் இதுவரை சாலை அமைக்கப்படவில்லை. இதனால் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. எனவே இந்த சாலையை விரைந்து அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-மணி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Jun 2023 5:11 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#35162

குண்டும், குழியுமான சாலை

சாலை

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அண்ணா சிலை முதல் நாடார் தெரு வரை உள்ள தார் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் சிறு, சிறு விபத்துகளும் ஏற்படுகிறது. இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ராஜா, வெண்ணந்தூர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Jun 2023 5:10 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#35161

சேதமடைந்த கழிப்பிடம்

கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள ஏலகிரி அரசு மேல்நிலைப்பள்ளியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் உள்ள கழிப்பிட கட்டிடங்கள் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் மாணவ-மாணவிகள் கழிப்பிட வசதிக்காக பள்ளியை விட்டு வெளியே செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே அதிகாரிகள் சேதமடைந்த கழிப்பிடத்தை சீரைமத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பழனி, நல்லம்பள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Jun 2023 5:09 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#35160

நோய் பரவும் அபாயம்

கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே மஞ்சாரஅள்ளி ஊராட்சி ஏர்கோல்பட்டியில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊரின் மையப் பகுதியில் சாக்கடைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே தேங்கி நிற்கும் சாக்கடை நீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.- ஜெயக்குமார், ஏரியூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Jun 2023 5:08 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#35158

சேதமடைந்த அங்கன்வாடி கட்டிடம்

மற்றவை

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே ராமகொண்டஅள்ளி ஊராட்சி புதுசோழபாடியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிடம் சேதமடைந்து உள்ளது. கட்டிடத்தில் சிமெண்ட் பூச்சுகள் ஆங்காங்கே பெயர்ந்து, விழுந்து காணப்படுகிறது. எனவே விபத்துகள் ஏதும் ஏற்படும் முன் இந்த கட்டிடத்தை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ஞான குமரன், ஏரியூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Jun 2023 5:08 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#35157

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சாமனூர் கிராமத்தில் தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தெருநாய்கள் வாகனம் மற்றும் நடந்து செல்பவர்களை துரத்தி சென்று அச்சுறுத்துகிறது. இதனால் அந்த பகுதி பொது மக்கள் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். எனவே இந்த தெருநாய்களை பிடித்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-சிவம், மாரண்டஅள்ளி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Jun 2023 5:07 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#35155

தடுப்புச்சுவர் அமைக்க கோரிக்கை

மற்றவை

ஓசூர் சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவிலுக்கு தேர்பேட்டையில் உள்ள ஹவுசிங் போர்டு பின்புறமாக செல்லும் சாலை தற்போது தார் சாலையாக மாற்றப்பட்டுள்ளது. அந்த வழியாக வாகனங்களில் வந்து செல்பவர்கள் வளைவில் திரும்பும் போது எதிர்பாராத விதமாக விபத்தை சந்திக்கும் வகையில் பாதுகாப்பு இல்லாத வகையில் சாலையோரத்தில் எந்தவித தடுப்பும் இன்றி உள்ளது. எனவே அந்த சாலையோரம் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்.- துரைராஜ், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Jun 2023 5:06 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#35153

ஆப்பத்தான மரக்கிளை

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்சி கல்லாவி சாலை அருகே ஸ்டேட் பேங்க் எதிரில் புளியமரத்தை ஒட்டி உயர் மின்னழுத்த கம்பி செல்கிறது. இது ஊத்தங்கரை முதல் கிருஷ்ணகிரி செல்லும் பிரதான சாலையில் அமைந்துள்ளது. இதனால் விபத்து ஏற்படுவதற்கு முன்னர் மின்சார அதிகாரிகளும் மரக்கிளையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-ரவி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Jun 2023 5:06 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#35152

குண்டும், குழியுமான சாலை

சாலை

கிருஷ்ணகிரி பர்கூர் பேரூராட்சி 15-வது வார்டு கரீம் சாகிப் தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த தெருவில் உள்ள சிமெண்டு சாலை சேதமடைந்து ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் கழிவுநீர் கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்படாததால் கழிவுநீர் தேங்கி தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-ரமேஷ், பர்கூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Jun 2023 5:05 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#35151

சுகாதார கேடு

குப்பை

கிருஷ்ணகிரி பழையபேட்டை 4-வது வார்டு அங்காளம்மன் கோவில் பின்புறம் உள்ள பக்கிரிமஸ்தான் தெருவில் 70-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அங்கு சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் இப்பகுதியில் உள்ள திறந்தவெளியில் கடந்த 5 ஆண்டுகளாக மழைநீர் தேங்கி கழிவுநீராக மாறியுள்ளது. இதனால் விஷப்பூச்சிகள் நடமாட்டமும், கொசு உற்பத்தி ஆவதாலும் சுகாதார கேடு ஏற்படுகிறது. எனவே அந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தேங்கி இருக்கும் கழிவுநீரை அகற்றிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Jun 2023 5:40 PM GMT
Mr.Nagarajan | சேலம்-தெற்கு
#34980

கூடுதல் பேட்டரி கார்

போக்குவரத்து

சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் தினமும் 65-க்கும் மேற்பட்ட ெரயில்கள் வந்து செல்கின்றன. சேலத்தில் இருந்து தினசரி 1000-க்கும் மேற்பட்டோர் வெளி ஊர்களுக்கும், வெளி ஊரில் இருந்து சேலத்திற்கும் வருகின்றனர். சேலம் ஜங்ஷன் ெரயில் நிலையத்தில் 5 நடைமேடைகள் உள்ளன. நுழைவாயிலில் இருந்து நடைமேடைகளுக்கு சென்று வர தற்போது ஒரு பேட்டரி கார் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இதனால் வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிரமப்படுகின்றன. எனவே பயணிகள் நலன் கருதி நடைமேடைகளுக்கு எளிதாக சென்று வரும் வகையில் கூடுதலான...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick