Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
5 July 2023 5:20 PM GMT
Mr.Nagarajan | சேலம்-தெற்கு
#35762

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் பகுதியில் அதிகமான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் ரெயிலுக்கு செல்பவர்கள் மற்றும் பள்ளி கல்லூரி வேலைக்கு செல்பவர்கள் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-ராஜா, சூரமங்கலம், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 July 2023 5:19 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#35759

தார்சாலை அமைக்கப்படுமா?

சாலை

சேலம் சிவதாபுரத்தில் இருந்து ஆண்டிப்பட்டி அண்ணா நகருக்கு செல்லும் பாதை மிகவும் குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் மழைக்காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அந்த வழியாக பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் செல்ல முடியவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் பாதிப்பு அடைந்து வருகின்றனர். எனவே இந்த சாலையில் உடனடியாக தார்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.-ஜேக்கப், ஆண்டிபட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 July 2023 5:19 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#35758

நோய் பரவும் அபாயம்

கழிவுநீர்

ஓமலூர் அடுத்த பச்சனம்பட்டி கிராமத்தில் ஏராளமான குடும்பங்கள் வசிக்கின்றன. அந்த பகுதியில் சிலர் கோழி கழிவுகளை கொட்டுகின்றனர். மேலும் அந்த இடத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் மக்களுக்கு டெங்கு காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி அங்கு குப்பைகளை கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுப்பார்களா?-இளவரசன், பச்சனம்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 July 2023 5:18 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#35757

விபத்தை தடுக்க வேகத்தடை

போக்குவரத்து

சேலம் மாவட்டம் கோழிகாட்டனூர் கணக்குப்பட்டி சுற்று பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. கணக்குப்பட்டி பஸ்நிறுத்தம் பகுதியில் சாலையானது வளைவு பகுதியாகவும் பிரிவு சாலையாகவும் உள்ளது. இந்த இடத்தில் வேகத்தடை இல்லை. எனவே வேகத்தை தடுக்கும் வகையிலும், விபத்துகளை தடுக்கும் வகையிலும் வேகத்தடை அவசியம் அமைக்க வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.-குமார், தாரமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 July 2023 5:18 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#35756

புதிய தார்சாலை

சாலை

நாமக்கல் தேவேந்திரபுரம் 14-வது வார்டில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்தநிலையில் அந்த பகுதியில் சாலை அமைத்து 13 ஆண்டுகள் ஆகிறது. இதனால் மழைக்காலங்களில் பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுபற்றி பலமுறை புகார் அளித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தார்சாலை அமைத்து தர வேண்டும்.-ஜெகன், தேவேந்திரபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 July 2023 5:17 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#35755

கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

மற்றவை

ராசிபுரம் அருகே வடுகம் முனியப்பம்பாளையம் ஊராட்சி உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சிக்கு உட்பட்ட மயானம் சீராப்பள்ளி செல்லும் வழியில் உள்ளது. தற்போது இந்த மயானத்தில் சீமை கருவேல மரங்களும், முட்புதர்களும் நிறைந்து காணப்படுகின்றன. இதனால் கிராம மக்கள் இறந்தவர்களின் உடலை இந்த மயானத்தில் ரூ.2 ஆயிரத்திற்கு மேல் செலவு செய்து மயானத்தில் உள்ள சீமைக் கருவேல மரங்களையும் முட்செடிகளையும் அகற்றிவிட்டு அடக்கம் செய்ய வேண்டிய நிலை இருந்து வருகிறது. இதனால் ஏழை எளிய மக்கள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 July 2023 5:17 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#35754

எரியாத மின்விளக்குகள்

மின்சாரம்

நாமக்கல் மாவட்டம் மோகனூருக்கும்,கரூர் மாவட்டம் வாங்கலுக்கும் இடையில் காவிரி ஆற்றின் குறுக்கே தரைவழி பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் ஒரு பகுதியில் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த மின் விளக்குகளில் ஒரு சிலவற்றை மட்டும் எரிகின்றன. இதனால் அந்த பகுதியில் காலையில் நடை பயிற்சி செய்பவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். எனவே எரியாத மின்விளக்குகளை உடனடியாக எரிய வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ராமசாமி, மோகனூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 July 2023 2:41 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#35682

ஆபத்தான பயணம்

போக்குவரத்து

தா்மபுரி மாவட்டம் ஏரியூர், பெரும்பாலை, சின்னம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் கோவில் விழாக்கள் மற்றும் சுப, துக்க நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பொதுமக்கள் டெம்போ வாகனத்தில் பயணிக்கின்றனர். இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள் பாதுகாப்பு கருதி பெரும் விபத்து நேரும் முன்பு காவல்துறை அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சார்லஸ், பெரும்பாலை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 July 2023 2:40 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#35681

குப்பைகள் அள்ளுவதில்லை

குப்பை

ஏரியூரில் ஏராளமான கடைகளும், குடும்பத்தினரும் வசித்து வருகின்றனர். மேலும் அத்தியாவசிய பொருட்களை வாங்கவும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தினமும் ஏரியூர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் ஏரியூரில் பஸ் நிலையம், ரேஷன் கடை, வங்கி உள்ள பகுதியில் 2 குப்பை தொட்டிகளில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. மேலும் ஆங்காங்கே சாலையோரம் குப்பைகள் கொட்டப்படுகிறது. குப்பைகள் தினமும் அள்ளப்படுவதில்லை. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. -விஜயகுமார், ஏரியூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 July 2023 2:40 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#35680

பயணிகள் அவதி

மற்றவை

தர்மபுரி மாவட்டத்தில் முக்கிய ரெயில் நிலையத்தில் ஒன்றாக திகழ்வது பொம்மிடி ரெயில் நிலையம் தான். கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக பொம்மிடி ரெயில் நிலையம் நுழைவுவாயில் பகுதியில் மழைநீர் தேங்குகிறது. இது சம்பந்தமாக சட்டமன்ற உறுப்பினர்கள், தென்னக ரெயில் பயணிகள் நல சங்கம், வணிகர் சங்கம் மற்றும் பொ. மல்லாபுரம் பேரூராட்சி சார்பில் பலமுறை நெடுஞ்சாலைத்துறைக்கு கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இதனால் தினமும் தேங்கும் மழை நீரில் பெண்கள், வயதானவர்கள் சிறுவர்கள் ரெயில் நிலையம் செல்லும்போது தடுமாறி...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 July 2023 2:39 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#35679

இருள்சூழ்ந்த மருத்துவமனை

மின்சாரம்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அரசு மருத்துவமனையில் செவிலியர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள மின்விளக்கு நீண்ட நாட்களாக இரவு நேரங்களில் எரிவதில்லை. இதனால் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இது பற்றி பலமுறை மருத்துவமனை அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் இந்த துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எரியாத மின்விளக்கை சரி செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சாமிக்கண்ணு, மாரண்டஅள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 July 2023 2:39 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#35678

டவுன் பஸ்சை தள்ளும் மக்கள்

போக்குவரத்து

ஓசூரில் இருந்து சூளகிரி வழியாக பெத்தசிகரலபள்ளிக்கு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. தினமும் பொதுமக்கள், மாணவ, மாணவியர் அதிகளவில் பயணம் செய்து வருகின்றனர். கடந்த ஒரு மாத காலமாக இந்த பஸ் அடிக்கடி பழுதடைந்து நடுரோட்டிலும், சாலையோரங்களிலும் நின்று விடுவதாக பொதுமக்கள் தரப்பில் புகார் எழுந்துள்ளது. இதனால் பயணிகள் பஸ்சை தள்ளி செல்லும் அவலமும் இருந்து வருகிறது. இதனால் பொதுமக்களும், தொழிலாளர்களும், மாணவர்களும் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர். எனவே அந்த வழித்தடத்தில் மாற்று பஸ்சை இயக்க வேண்டும் என்று...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick