Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
5 July 2023 2:38 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#35677

சீரமைக்க வேண்டிய சாலை

சாலை

பர்கூர்-திருப்பத்தூர் மாநில நெடுஞ்சாலையில் உள்ள மல்லப்பாடியில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு குழாய் அமைக்க சாலையின் குறுக்கே தோண்டினர். பின்பு அந்த சாலையை முறையாக சீரமைக்கவில்லை. இதனால் இப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பும், விபத்துகளும் அடிக்கடி நடக்கிறது. எனவே இச்சாலையை சீரமைக்க இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.-சிவா, மல்லப்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 July 2023 2:38 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#35676

சுற்றுச்சாலை அமைக்கப்படுமா?

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வழியாக கர்நாடகாவில் இருந்து தினமும் கார், லாரி, பஸ் என ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரில் ஏற்படுகிறது. மேலும் விபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தேன்கனிகோட்டையில் வெளிவட்ட சுற்றுச்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-சீனிவாசன், தேன்கனிக்கோட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 July 2023 2:37 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#35675

மின்விளக்கு இல்லாத கம்பம்

மின்சாரம்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தொகுதி ஒரப்பம் ஊராட்சியில் புதிய உயர்கோபுர மின்விளக்கு 3 மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. அந்த உயர் கோபுர மின்விளக்கு கடந்த சில வாரங்களுக்கும் மேலாக எரியாமல் காட்சி பொருளாகவே காணப்படுகிறது. அந்த கம்பத்தில் தற்போது மின்விளக்கும் இல்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த உயர்கோபுர மின்விளக்கு பொருத்தி எரிய செய்ய வேண்டும்.-பாண்டியன்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 July 2023 5:02 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#35566

கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை

போக்குவரத்து

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை தாலுகா ஆர்.புதுப்பட்டி பேரூராட்சியின் சுற்றுப்பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு செல்லும் பஸ்கள் குறைக்கப்பட்டுள்ளன. இதனால் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதிகளுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா ?-ரகுபதி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 July 2023 5:01 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#35561

சேதமடைந்த கான்கிரீட் தளம்

மற்றவை

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஒன்றிய அலுவலக நுழைவாயில் வளாகத்தில் அமைக்கப்பட்ட கான்கிரீட் தளம் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் அவற்றை தாண்டி செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே இந்த கான்கிரீட் தளத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சந்திரமோகன், செம்மேடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 July 2023 5:00 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#35555

சாலை அமைக்கப்படுமா?

சாலை

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியம் செம்மாண்டப்பட்டி பஞ்சாயத்து அலுவலகம் பகுதியில் இருந்து காணாம்பாளையம் குடிதெரு பகுதிக்கு செல்லும் சாலையில் பல ஆண்டுகளாக ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு கிடக்கின்றன. இதுவரை சாலை அமைக்கப்படவில்லை. இதனால் இந்த சாலையில் வாகனங்களில் செல்லும் பொது மக்கள் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த சாலையை உடடினயாக அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா ?-கண்ணன், செம்மாண்டப்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 July 2023 5:00 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#35552

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பேரூராட்சி பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து உள்ளது. சாலைகளில் செல்லும் பொது மக்களை தெருநாய்கள் துரத்தி அச்சுறுத்தி வருகிறது. மேலும் வாகனங்களில் செல்வோரை துரத்துவதால் அவர்கள் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே இந்த தெரு நாய்களை பிடித்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-பிரபு, வெண்ணந்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 July 2023 4:59 PM GMT
Mr.Nagarajan | சேலம்-தெற்கு
#35550

குண்டும், குழியுமான சாலை

சாலை

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் டி.வி.ஆர். நகர் செல்லும் பகுதியில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். சில சமயங்களில் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைத்து தார்சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-விமல்ராஜ், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 July 2023 4:56 PM GMT
Mr.Nagarajan | சேலம்-தெற்கு
#35546

அகற்ற வேண்டிய செடி, கொடிகள்

மற்றவை

சேலம் ஆண்டிப்பட்டி பகுதியில் இருந்து சேலத்தாம்பட்டிக்கு செல்லும் சாலையில் குடிநீர் தொட்டி உள்ளது. இதனை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த குடிநீர் தொட்டியை சுற்றி குப்பைகள் கொட்டப்பட்டு உள்ளன. மேலும் செடி, கொடிகள் முளைத்து புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் சுகாதாரமற்ற நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்றி, செடி, கொடிகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்,-மூர்த்தி, ஆண்டிப்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 July 2023 4:55 PM GMT
Mr.Nagarajan | சேலம்-தெற்கு
#35540

இருக்கை வசதி வேண்டும்

மற்றவை

சேலம் கந்தம்பட்டியில் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இங்கு தினசரி நூற்றுக்கணக்கானோர் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்காக வந்து செல்கின்றனர். அங்கு வரும் பொது மக்களுக்கு இருக்கை வசதி எதுவும் இல்லை. இதனால் அவர்கள் நீண்ட நேரம் நிற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே இந்த அலுவலகத்தில் பொதுமக்கள் அமரும் வகையில் இருக்கை வசதி செய்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-சதீஷ்குமார், சூரமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 July 2023 4:54 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#35537

சுற்றுச்சூழல் அரங்கு பயன்பாட்டுக்கு வருமா?

மற்றவை

சேலம் புதிய பஸ் நிலையத்தில் அம்மா சுற்றுச்சூழல் அரங்கு சில ஆண்டுகளுக்கு முன்பாக பொதுமக்களின் வசதிக்காக அமைக்கப்பட்டது. சில காலமே பயன்பாட்டில் இருந்த இந்த அரங்கு கொரோனா காலத்திற்கு பின்னர் பூட்டியே உள்ளது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இதனை உடனடியாக திறந்து பொது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுமா?-ரவிசந்திரன், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 July 2023 4:52 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#35535

குப்பைகள் அகற்றப்படுமா ?

குப்பை

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகா மாதேஅள்ளி ஊராட்சி ஸ்ரீராகவேந்திரா நகரில் தெருமுனையில் கொட்டப்படும் குப்பைகள் நீண்ட நாட்களாக அகற்றப்படாமல் குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. எனவே இந்த குப்பைகளை தினமும் அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-சரவணன், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick