Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
2 July 2023 4:48 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#35531

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு புறநகர் பஸ் நிலையத்தில் இருந்து தனியார் மற்றும் அரசு பஸ்கள் என 200-க்கும் மேற்பட்ட பஸ்கள், ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது புறநகர் பஸ் நிலைய சீரமைப்பு பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் பஸ்கள் அனைத்தும் நகர பஸ் நிலையத்தில் நின்று செல்கின்றன. பஸ் நிலையம் முன்பு சாலையோர நடைபாதை கடைகள், சாலையை ஆக்கிரமித்து நிற்கும் இருசக்கர வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சதீஷ்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 July 2023 4:47 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#35530

கழிவுநீர் கால்வாய் அமைக்க கோரிக்கை

கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சிக்கமாரண்டஅள்ளி ஊராட்சியில் கழிவு நீர் கால்வாய் அமைக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் சாலையிலே கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. எனவே இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-முருகன், மாரண்டஅள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 July 2023 4:34 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#35515

"தினத்தந்தி"க்கு பாராட்டு

ட்ரெண்டிங்

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வாரச்சந்தை பகுதியில் உள்ள தாசில்தார் குடியிருப்பு பங்களா சேதமடைந்து முட்புதர்கள் முளைத்து புதர் மண்டி உள்ளது என "தினத்தந்தி" புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியாகி இருந்தது. இதனை தொடர்ந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் தற்போது இந்த குடியிருப்பு பங்களாவை சுத்தப்படுத்தி உள்ளனர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு உதவிய "தினத்தந்தி"க்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.-சந்தோஷ், நல்லம்பள்ளி.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 July 2023 4:33 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#35513

கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படுமா ?

கழிவுநீர்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த அச்சமங்கலம் கிராமத்தில் அனைத்து தெருக்களிலும் சாலைகள் சேதமடைந்து உள்ளன. மேலும் கழிவுநீர் கால்வாயும் சேதமடைந்து உள்ளது. இதனால் அப்பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே இந்த பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா ?-ரவி, பர்கூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 July 2023 4:32 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#35511

சேதமடைந்த சாலை

சாலை

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் செல்லும் சாலை சேதமடைந்து உள்ளது. இதனால் இந்த சாலைகளில் வேகமாக வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-சபரீஷ்வரன், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 July 2023 4:31 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#35510

குண்டும், குழியுமான சாலை

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பேரூராட்சி 12-வது வார்டில் ஜெகதேவி ரோட்டில் இருந்து துரைஸ் நகருக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் வாகனங்களில் செல்லும் பொது மக்கள் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-தினேஷ், பர்கூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 July 2023 4:30 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#35509

எரியாத மின்விளக்குகள்

மின்சாரம்

ஓசூர்- தளி சாலையில் ராமநாயக்கன் ஏரி அருகே மாநகராட்சி பூங்கா உள்ளது. இங்கு தினமும் ஏராளமானோர் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பொழுதுபோக்கு இடமாகவும் இந்த பூங்கா இருந்து வருகிறது. இந்தநிலையில் பூங்கா பகுதியில் உள்ள மின் விளக்குகள் எரியாததால் மாலை நேரங்களில் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே இந்த மின்விளக்குகளை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- முரளி, ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Jun 2023 4:44 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#35329

பாதியில் நிற்கும் பணிகள்

பாதியில் நிற்கும் பணிகள்கழிவுநீர்

சேலம் 41-வது வார்டு குஞ்சான் 3-வது தெருவில் பல மாதங்களாக சாக்கடை கால்வாய், சாலை பணிகள் சரிவர முடிக்காமல் பாதியிலேயே கிடக்கிறது. இதனால் அந்த பகுதி மக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இதுறித்து பலமுறை புகார் அளித்தும் மாநகராட்சி எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது. சாக்கடை அடைப்பை சரிவர எடுக்காத காரணத்தால் இங்கு கொசு தொல்லை அதிகரித்து நோய்களால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே பாதியில் நிற்கும் பணிகளை முடிக்க அதிகாரிகள் முன் வருவார்களா?-மோகன், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Jun 2023 4:43 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#35328

பாழடைந்த சமுதாயக்கூடம்

பாழடைந்த சமுதாயக்கூடம்மற்றவை

சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகா சித்தூர் ஊராட்சியில் சமுதாயக்கூடம் பாழடைந்து உள்ளது. மேலும் கழிவறை பீங்கான்கள் உடைந்தும், கழிவுநீர் தேங்கி விஷப்பூச்சிகள் வசிக்கும் இடமாக சமுதாயக்கூடம் மாறி உள்ளது. எனவே சமுதாயக்கூடத்தை புதுப்பித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். -புதியவன், சித்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Jun 2023 4:43 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#35327

ஜல்லிகற்கள் பரப்பிய சாலை

ஜல்லிகற்கள் பரப்பிய சாலைசாலை

சூரமங்கலம் ஆண்டிபட்டி காலனியில் உள்ள சாலையில் தார்சாலை அமைப்பதற்காக ஜல்லி கற்கள் கொட்டப்பட்டுள்ளன. ஆனால் ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு இரண்டு மாதம் ஆகியும் இன்னும் தார்சாலை போடவில்லை. இதனால் இந்த சாலை வழியாக சென்று வர வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தார் சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.-ஜோன்ஸ், ஆண்டிபட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Jun 2023 4:42 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#35326

கோவிலுக்கு பஸ் வசதி

போக்குவரத்து

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அடுத்து மாட்டுவேலம்பட்டி பகுதியில் இருந்து அளவாய்மலை பாலசுப்பிரமணியர் கோவிலுக்கு விசேஷ தினங்களில் நூற்றுக்கணக்கானோர் படிகளில் நடந்து செல்கின்றனர். எனவே கோவிலுக்கு செல்ல பஸ் வசதி ஏற்படுத்தி கொடுத்தால் முதியவர்கள், கர்ப்பிணிகள் சிரமம் இன்றி சென்றுவர சவுகரியமாக இருக்கும். இதுகுறித்து அறநிலையத்துறையினர் கவனத்தில் கொண்டு அளவாய்மலை பாலசுப்பிரமணியர் கோவிலுக்கு பஸ் வசதி ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சண்முகம், அளவாய்ப்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Jun 2023 4:41 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#35325

சாக்கடை வசதி தேவை

கழிவுநீர்

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரை அடுத்த அறமத்தாம்பாளையத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அந்த பகுதியில் சாக்கடை வசதி இல்லாததால் கழிவுநீர் சாலையில் ஓடி, குடியிருப்புகளில் புகுந்துவிடுகிறது. சிலர் சாலையோரம் பள்ளம் வெட்டி, சாக்கடை நீரை தேக்கி வைத்துள்ளனர். அதனால் துர்நாற்றம் வீசுவதோடு, கொசு உற்பத்தி அதிகமாக உள்ளது. தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதால் சாக்கடை வசதி செய்து கொடுக்க வேண்டும்.-விஜய், வெண்ணந்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick