Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
9 July 2023 5:11 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#35970

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா ?

மற்றவை

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஆட்டையாம்பட்டி பிரிவு சாலையிலிருந்து சப்பையாபுரம் வரை உள்ள சாலையின் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. இதனால் இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சிலசமயங்களில் விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே இந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-தனபால், வெண்ணந்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 July 2023 5:11 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#35969

இறைச்சி கழிவுகளால் சுகாதார சீர்கேடு

மற்றவை

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அத்தனூர் பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளில் இருந்து கோழி இறைச்சி கழிவுகளை ஆங்காங்கே சாலையோரம் கொட்டி செல்கின்றனர். இதனால் இந்த வழியே செல்லும் பொது மக்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் அவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த இறைச்சி கழிவுகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா ?-சிவா, அத்தனூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 July 2023 5:10 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#35968

சேதமடைந்த சாலை

சாலை

நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை தாலுகா சோழசிராமணி ஊராட்சியில் வெய்யகஞ்சான்புதூர் பஸ் நிறுத்தத்தில் இருந்து தேவம்பாளையம் செல்லும் தார் சாலை சேதமடைந்துள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர். மேலும் விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சுதர்சன், சோழசிராமணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 July 2023 5:09 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#35966

விபத்து அபாயம்

போக்குவரத்து

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பிரிவு சாலையில் உள்ள மேம்பாலத்தில் இருந்து துறையூர் சாலை செல்ல குறுக்கு பாதை உள்ளது. இந்த பகுதியில் அடிக்கடி குப்பைகளுக்கு நெருப்பு வைப்பதால் சாலை புகை மூட்டத்துடன் காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மூச்சு திணறல் போன்ற பிரச்சினைகளால் அவதியடைகின்றனர். மேலும் அவர்கள் விபத்துகளில் சிக்கும் அபாயமும் உள்ளது. எனவே இதனை தடுக்க சமந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சந்திரசேகர், கொசவம்பட்டி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 July 2023 5:08 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#35965

சேதமடைந்த சாலை

சாலை

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே கெங்கலாபுரம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் பிரிவு சந்திப்பு சாலையில் இருந்து, சிவாடி ரெயில் நிலையம் வரை உள்ள தார்சாலை சேதமடைந்து ஜல்லிக்கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடைகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பசுபதி, நல்லம்பள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 July 2023 5:07 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#35964

ஆபத்தான மின்கம்பம்

மின்சாரம்

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் முள்ளுவாடி பஸ் நிலையத்தில் அமைந்துள்ள மின்கம்பம் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அங்கு வரும் பொதுமக்கள் அச்சத்துடனே செல்கின்றனர். எனவே அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு ஆபத்தான மின்கம்பத்தை அகற்றி, புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்,-சேட்டு, பென்னாகரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 July 2023 5:06 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#35963

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட 4 ரோடு பகுதியில் உள்ள குடிநீர் குழாய் உடைந்து சுமார் ஒரு ஆண்டுக்கும் மேலாக குடிநீர் வீணாக சாலையில் செல்கிறது. இது குறித்து பலமுறை பேரூராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உடைந்த குடிநீர் குழாயை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-சரவணன், மாரண்டஅள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 July 2023 5:05 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#35962

குண்டும், குழியுமான சாலை

சாலை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா எர்ரணஹள்ளி ஊராட்சியில் மூங்கப்பட்டி, ரெட்டியூர், சமத்துவபுரம், வி.செட்டிஏரிபள்ளம் வரை உள்ள தார்சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பழனிவேல், பாலக்கோடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 July 2023 5:03 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#35961

குடிநீர் வழங்க வேண்டும்

தண்ணீர்

ஓசூர் மாநகராட்சி 6-வது வார்டில் குடிநீர் சீராக கிடைப்பதில்லை. இதனால் இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் போதுமான குடிநீர் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். மேலும் அப்பகுதியில் கண்காணிப்பு கேமரா இல்லாததால் பொதுமக்களுக்கு திருட்டு அச்சமும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒகேனக்கல் குடிநீர் வழங்கவும், கண்காணிப்பு கேமரா அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ஆனந்த், ஓசூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 July 2023 5:01 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#35960

கால்நடைகளால் இடையூறு

போக்குவரத்து

ஓசூர் உழவர் சந்தைக்கு தினமும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். அங்கு 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கால்நடைகள் கூட்டம், கூட்டமாக உழவர்சந்தைக்குள் புகுந்து காய்கறி, பழங்களை தின்றும், உழவர் சந்தைக்கு வரும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடமாடி வருகின்றன. இதனால் உழவர் சந்தைக்கு வரும் பொதுமக்களும், வியாபாரிகளும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.- அஜித், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 July 2023 5:00 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#35958

தாமதமாகும் சாலை பணிகள்

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா பி.ஆர்.ஜி.மாதேப்பள்ளி ஊராட்சி சிவாஜி நகரில் சாலை, சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிகள் கடந்த 4 மாதங்களாக ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. இதனால் அந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-சிவபாரத், பர்கூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 July 2023 5:00 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#35957

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

மின்சாரம்

கிருஷ்ணகிரி ரவுண்டானா 5 ரோட்டில் சென்னை செல்லும் சாலையில் பஸ் நிற்கும் இடத்தில் மின் கம்பிகள் தாழ்வாக செல்கின்றது. இதனால் சரக்கு லாரிகள் இந்த வழியாக செல்லும்போது மின்கம்பியில் உரசும் அபாயம் உள்ளது. எனவே விபத்துகள் ஏற்படும் முன்பு தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சரி செய்ய மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ஷாஜகான், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick