Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
3 Sep 2023 5:58 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#39272

பயணிகள் நிழற்கூடம்

மற்றவை

நாமக்கல் மாவட்டம் வாழவந்திநாடு ஊராட்சி ஊர்புறம் கிராமத்தில் பயணிகள் நிழற்கூடம் உள்ளது. இந்த நிழற் கூடம் தற்போது சேதமடைந்து செடி, கொடிகள் முளைத்து புதர் மண்டி காணப்படுகிறது. அங்கு விஷபூச்சிகள் நடமாட்டமும் அதிகமாக உள்ளது. இதனால் பயணிகள் நிழற்கூடத்தில் நிற்க அச்சப்படுகின்றனர். எனவே இந்த பயணிகள் நிழற்கூடத்தை சீரமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -முருகேசன், வாழவந்தி நாடு, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Sep 2023 4:52 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#39251

சேதமடைந்த வீடுகள்

மற்றவை

தர்மபுரி மாவட்டம் பூதநத்தம் ஊராட்சியில் பூதநத்தம் காலனி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு 50 தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது. தற்போது இந்த தொகுப்பு வீடுகள் சேதமடைந்து உள்ளன. மேற்கூரையில் மழை காலங்களில் தண்ணீர் ஒழுகுவதால் தார் பாய் போட்டு மூடி உள்ளனர். எனவே இந்த வீடுகளை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -சந்தோஷ், பூதநத்தம், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Sep 2023 4:47 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#39249

பழுதடைந்த மின்பெட்டி

மின்சாரம்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சி கவுனூர் செல்லும் சாலையில் மின் இணைப்பு பெட்டி உள்ளது. இந்த பெட்டி கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பழுதடைந்து உள்ளது. இதனால் மழை காலங்களில் மின் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த மின்பெட்டியை மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சுரேஷ், மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Sep 2023 4:44 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#39247

குண்டும், குழியுமான சாலை

சாலை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே வாழைத்தோட்டம் மண்டு நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் வாகனங்களில் செல்வோர் சிரமப்படுகிறார்கள். மேலும் விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -சிவன், பாலக்கோடு, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Sep 2023 4:41 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#39245

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

கிருஷ்ணகிரி நகரில் பல்வேறு இடங்களில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. தெருநாய்கள் சாலைகளில் வாகனங்களில் செல்வோரை துரத்துவதால் அவர்கள் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே தெருநாய்களை பிடித்து செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுரேஷ், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Sep 2023 4:40 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#39242

குண்டும், குழியுமான சாலை

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்- பாகலூர் சாலையில் பஸ்தி பிரிவு சாலை அருகே மாலூர் தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான வணிக வளாகங்கள், தனியார் பள்ளி மற்றும் குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இந்த சாலை தற்போது குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் சாலையில் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? - எம்.சீனிவாசன், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Sep 2023 4:39 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#39240

சேதமடைந்த சாலை

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா பட்டலப்பள்ளி ஊராட்சி சின்ன கொண்நம்பட்டி, கோடியூர், தெள்ளபண்டா, மாமரத்துகொட்டாய், கொங்கன் தெரு ஆகிய கிராமங்களுக்கு செல்லும் தார் சாலை சேதமடைந்து உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் சில சமயங்களில் கீழே விழுந்து காயமடைகின்றனர். இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பிரகாஷ், பர்கூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Sep 2023 4:37 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#39237

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை மைய பகுதியான ரவுண்டானா 4 ரோடு வழியாக தினமும் 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அவசர வேலைக்காக செல்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். -சதீஷ், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Aug 2023 4:39 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#39075

குப்பைகள் கொட்டப்படுவது தடுக்கப்படுமா?

குப்பை

சேலம் ஜாகிர் சின்ன அம்மாபாளையம் கல்யாணசுந்தரம் காலனியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி அருகே அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் அள்ளப்படும் குப்பைகளை இங்கு கொட்டுகின்றன. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் பள்ளி குழந்தைகளுக்கு நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை பள்ளி அருகே கொட்டாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர், -அருணாசலம், ஜாகிர் சின்னஅம்மாபாளையம், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Aug 2023 4:39 PM GMT
Mr.Nagarajan | சேலம்-தெற்கு
#39074

சுரங்கபாதையில் தேங்கும் கழிவுநீர்

கழிவுநீர்

சேலம் சூரமங்கலத்தில் இருந்து திருவாக்கவுண்டனூர் வழியாக போடிநாயக்கன்பட்டி, ஆண்டிப்பட்டி, சிவதாபுரம் செல்லும் பாதையில் யில்வே குறுகிய தரைப்பாலம் உள்ளது. இந்த தரை பாலத்தின் வழியாக பள்ளி குழந்தைகள், கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என தினசரி ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்த சுரங்கபாதையில் 24 மணி நேரமும் சாக்கடை கழிவுநீர் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே பாலத்தில் தேங்கும் சாக்கடை கழிவு நீரை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Aug 2023 4:36 PM GMT
Mr.Nagarajan | சேலம்-தெற்கு
#39073

பூங்கா பராமரிக்கப்படுமா?

பூங்கா

சேலம் மாநகராட்சி, சூரமங்கலம் மண்டலம் 19-வது வார்டில் தர்மநகர் பசுமைவெளி பூங்கா உள்ளது. இந்த பூங்கா பல மாதங்களாக பராமரிக்கப்படாமல் அங்குள்ள ஊஞ்சல் உள்ளிட்ட விளையாட்டு சாதனங்கள் சேததடைந்து உள்ளன. ஊஞ்சல் இல்லாததால் சிறுவர்கள் கயிறு கட்டி விளையாடும் அவல நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த பூங்காவை பராமரிப்பார்களா ? -சதீஷ்குமார், சுப்பிரமணிய நகர், சேலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Aug 2023 4:36 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#39072

ஆபத்தான மின்கம்பம்

மின்சாரம்

சேலம் அமானி கொண்டலாம்பட்டி அரசுமரத்துகரட்டூர் பகுதியில் அங்கன்வாடி பள்ளி அருகில் மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பம் தற்போது சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. இந்த வழியே செல்லும் பொது மக்கள் அச்சத்துடன் செல்கின்றனர். இதுகுறித்து மின்சாரத்துறை அலுவலகத்தில் பலமுறை புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இந்த மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -முத்துசாமி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick