Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
6 Sep 2023 2:54 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#39413

தடுப்பு சுவர்கள் அவசியம்

போக்குவரத்து

பாலக்கோடு நகருக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தினமும் பல்வேறு வேலைகளுக்கு வந்து செல்கின்றனர். பிரதான மையமாக உள்ள பாலக்கோடு நகரில் தற்போது பஸ் நிலைய புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால், தற்காலிக பஸ் நிலையம் தக்காளி மண்டி அருகே அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான வாகனங்கள் புறவழி சாலையை பயன்படுத்தி வருகின்றன. மேலும் புறவழிச்சாலை பகுதியில் அரசு பள்ளி, மருத்துவமனை, வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவைகளுக்கு பொதுமக்கள் சாலையை கடக்கும் சூழலில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. எனவே இப்பகுதியில்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Sep 2023 2:54 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#39412

சுகாதார கேடு

குப்பை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த சிக்கமாரண்டஅள்ளி கிராமத்தில் துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை சாலையோரத்தில் கொட்டி தீ வைத்து எரிக்கிறார்கள். அதனால் சுகாதார கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கும், பொதுமக்களுக்கும் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தூய்மை பணியாளர்கள் குப்பைகளை எரிக்காமல் தினமும் அள்ளி செல்ல வேண்டும். -மணி, சிக்கமாரண்டஅள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Sep 2023 2:53 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#39411

தண்ணீர் பிடிக்க மக்கள் சிரமம்

தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட 3-வது வார்டு கவுனூரில் குடிநீர்தொட்டி அமைந்துள்ளது. தற்போது அந்த குடிநீா் தொட்டியின் தடுப்பு சுவர் இடிந்த நிலையில் காணப்படுகிறது. மேலும் குடிநீர் தொட்டி அருகே குடம் வைத்து பிடிக்க வசதி இல்லாமல் அந்த பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இது பற்றி பலமுறை பேரூராட்சியில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் உடைந்த குடிநீர் தொட்டியின் சுவரை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த பகுதி மக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Sep 2023 2:52 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#39410

வாகன ஓட்டிகள் கோரிக்கை

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் இருந்து ஆந்திரா மாநில குப்பம் செல்லும் சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. இதனால் சாலை முழுவதும் பெயர்ந்து குண்டும், குழியுமாக மாறி மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக உள்ளது. மேலும் விபத்துகளும் அதிகரித்து வருகிறது. இந்த சாலையை சீரமைத்து புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். -குணால், வேப்பனப்பள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Sep 2023 2:51 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#39409

குண்டும், குழியுமான சாலை

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில் இருந்து காரகுப்பம் செல்லும் இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலை குண்டும், குழியுமாக பராமரிப்பு இல்லாமல் கிடக்கிறது. இதில் செல்லும் வாகனங்களும், பொதுமக்களும் அடிக்கடி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். எனவே தாமதம் இன்றி தார்சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?. -மணி, பர்கூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Sep 2023 6:03 PM GMT
Mr.Nagarajan | சேலம்-தெற்கு
#39279

உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்படுமா ?

மின்சாரம்

சேலம் மாவட்டம் எடப்பாடியில் இருந்து தாதாபுரம் செல்லும் வழியில் போடிநாயக்கன்பட்டி புற வழிச்சாலையில் இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாததால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. மேலும் திருட்டு அச்சமும் ஏற்படுகிறது. எனவே இந்த பகுதியில் உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -ரஞ்சித், போடிநாயக்கன்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Sep 2023 6:02 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#39278

எரியாத மின்விளக்குகள்

மின்சாரம்

சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா புளியம்பட்டி ஊராட்சியில் பெருமாள் கோவில் முதல் பம்பைகார்வட்டம் வரை உள்ள தெரு விளக்குகள் பல மாதகாலங்களாக எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் இந்த வழியே நடந்து செல்லும் பொதுமக்களுக்கு மிகவும் சிரமம் ஏற்படுகிறது. மேலும் திருட்டு அச்சமும் ஏற்படுகிறது. எனவே எரியாத மின்விளக்குகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பழனிவேல், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Sep 2023 6:02 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#39277

சுகாதார கேடு

மற்றவை

சேலம் மாவட்டம் சித்தர் கோவில் மெயின் ரோடு பனங்காட்டில் இந்திய உணவு கழகம் சேமிப்பு கிடங்கு எதிரில் சாலையோரம் கோழி இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் அப்குதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியே செல்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த இறைச்சி கழிவுகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -பிராசந்த், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Sep 2023 6:01 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#39276

சாலைகளில் தேங்கும் தண்ணீர்

தண்ணீர்

சேலம் அம்மாபேட்டை காந்தி மைதானம் முதல் புகைஇலை மண்டி வரை உள்ள சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இந்த சாலையில் வாகனங்களில் நடந்து செல்பவர்கள் மீது தண்ணீர் படுகிறது. மேலும் வாகனங்கள் விபத்துகளில் சிக்குகின்றன. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுந்தர், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Sep 2023 6:00 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#39275

கண்காணிப்பு கேமரா

மற்றவை

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் போலீஸ் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அந்த கண்காணிப்பு கேமரா பழுதாகி செயல்படாமல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு முழு நேரமும் கண்காணிப்பு கேமரா செயல்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -தனபால் வெண்ணந்தூர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Sep 2023 5:59 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#39274

"தினத்தந்தி"க்கு பாராட்டு

ட்ரெண்டிங்

நாமக்கல்- திருச்சி ரோடு பொன்விழா தெற்கு 1-வது வீதியில் மின்கம்பத்தில் செல்லும் மின்கம்பி கீழே தொங்குவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என "தினத்தந்தி" புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியாகி இருந்தது. இதனை தொடர்ந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் தற்போது இந்த மின்கம்பத்தை சீரமைத்துள்ளனர். இதற்க்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், "தினத்தந்தி"க்கும் அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். -சுந்தர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Sep 2023 5:59 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#39273

குப்பைகள் அகற்றப்படுமா?

குப்பை

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு செல்லும் சாலையில் கிளைநூலகம், ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம், வேளாண்மை அலுவலகம் மற்றும் பரமத்தி யூனியன் அலுவலகங்கள் உள்ளன. ஆனால் இந்த பகுதியில் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. எனவே இதனை சுத்தப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -லோகநாதன், பரமத்திவேலூர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick