Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
10 Sep 2023 12:13 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#39577

நோய் பரவும் அபாயம்

கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் பழைய ஒட்டுப்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் அங்கன்வாடி மையம் அருகே உள்ள செப்டிக் டேங்க் நிரம்பி வழிகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா? ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Sep 2023 12:13 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#39576

ஆபத்தான மின்சாரபெட்டி

ஆபத்தான மின்சாரபெட்டிமின்சாரம்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட 3-வது வார்டு கவுனூர் செல்லும் சாலையில் மின்சார மீட்டர் பெட்டி உள்ளது. இது சுமார் 2 ஆண்டுகளுக்கும் மேலாக பழுதடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. மழைக்காலங்களில் மின் விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இந்த மின்சாரபெட்டியை சீரமைக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -சுரேஷ், மாரண்ட‌அள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Sep 2023 12:11 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#39575

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்மின்சாரம்

தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி ஊராட்சி சின்னார்அணை மதகிற்கு கீழ் சாலையை உயர்த்துவதற்காக மண் கொட்டப்பட்டது. இதனால் சாலை உயரம் அதிகரித்து மின்சார கம்பிகள் மிகவும் தாழ்வாக தரையில் இருந்து ஒரு அடி உயரத்தில் ஆபத்தான நிலையில் செல்கிறது. அந்த வழியாக மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள், பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதனை சரி செய்ய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். -விமலன், பஞ்சப்பள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Sep 2023 5:25 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#39473

பள்ளி மைதானத்தில் மதுபாட்டில்கள்

மற்றவை

மோகனூர் அடுத்த அணியாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் விளையாட்டு மைதானத்தின் ஒரு பகுதியில் சுற்றுச்சுவர் இல்லாத காரணத்தினால் இரவு நேரங்களில் மதுபிரியர்கள் மது அருந்திவிட்டு பாட்டிலை அங்கேயே உடைத்து போட்டு விட்டு செல்கின்றனர். இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள் முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே மாணவர்களின் நலன் கருதி விளையாட்டு மைதானத்திற்கு சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். -சாமிநாதன்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Sep 2023 5:24 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#39472

ஆபத்தான இரும்பு தடுப்பு

சாலை

கொல்லிமலையில் உள்ள மூலக்கடையில் இருந்து செம்மேட்டிற்கு செல்லும் பிரதான சாலை உள்ளது. அந்த சாலையின் ஓரத்தில் வைக்கப்பட்டுள்ள இரும்பு தடுப்பு வாகனங்கள் மோதி பழுதாகி ஆபத்தான நிலையில் இருக்கிறது. இதனால் அந்த இரும்பு தடுப்பு அருகில் சாலையும் சேதமாக கிடக்கிறது. இதனால் அங்கு விபத்துக்கள் நேரிடும் முன்பு அவற்றை சீரமைக்க வேண்டும் என மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். -சந்துரு, கொல்லிமலை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Sep 2023 5:24 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#39471

பாதியில் நிற்கும் சாலைபணி

சாலை

வெண்ணந்தூர் ஒன்றியம் செம்மாண்டப்பட்டி பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்து காணாம்பாளையம் வரை செல்லும் தார்சாலை சேதமடைந்து இருந்தது. இந்தநிலையில் புதிய தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுத்து பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவை பாதியில் நிறுத்தப்பட்டு பல ஆண்டுகள் ஆகி உள்ளது. இதனால் சாலையில் ஜல்லிகற்கள் கொட்டிய நிலையில் உள்ளதால் போக்குவரத்துக்கு பெரும் இடையூறாக உள்ளது. எனவே அதிகாரிகள் உடனடியாக சாலையை சீரமைத்துக் கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். -பழனிவேல், செம்மாண்டப்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Sep 2023 5:23 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#39470

சேதமான ரேஷன்கடை

மற்றவை

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் கீழ்முகம் காளிப்பட்டி கிராமத்தில் ரேஷன்கடை உள்ளது. அந்த ரேஷன் கடையின் படிக்கட்டுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் சாய்வு தள கான்கிரீட் பாதைகள் உடைந்து காணப்படுகிறது. இதனால் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் தடுமாறுகிறார்கள். எனவே படிக்கட்டுகள் மற்றும் சாய்வு தள பாதையை சீரமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மணி, காளிப்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Sep 2023 5:20 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#39467

காவிரி குடிநீர் வீணாகிறது

தண்ணீர்

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சி ரெயில்வே (ஓலப்பாடி) ரோட்டில் ஸ்டூடியோ முன்பு 15 நாட்களாக ஓலப்பாடி செல்லும் காவிரி குடிநீர் குழாய் உடைந்து வீணாக சாக்கடையில் செல்கிறது. இதுகுறித்து பேரூராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாயை சரிசெய்தால் தண்ணீர் வீணாவதை தவிர்க்கலாம். -ராமலிங்கம், ஆரியூர்தெரு, பெத்தநாயக்கன்பாளையம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Sep 2023 5:19 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#39466

பஸ் வசதி தேவை

போக்குவரத்து

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் ஒன்றியத்தில் ஏரிபுதூர் உள்ளது. இந்த பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் பஸ் வசதி வேண்டி கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம். இதுவரை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பஸ் வசதி இல்லாமல் பள்ளி, கல்லூரி மற்றும் பணிக்கு செல்ல கூடியவர்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் பஸ் வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சிவானந்தம், ஏரிபுதூர், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Sep 2023 5:19 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#39465

ஆபத்தான மின்சாரபெட்டி

ஆபத்தான மின்சாரபெட்டிமின்சாரம்

சேலம் 4 ரோடு அவுசிங்போர்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஆழ்துளை குடிநீர் தொட்டி மின்மோட்டாருடன் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு மின்இணைப்பு பொருத்தி மின்சாரபெட்டி உள்ளது. தற்போது அந்த பெட்டி பழுதடைந்து காணப்படுகிறது. மேலும் மின்சாரபெட்டியில் இருந்து ஓயர்கள் வெளியே தெரிகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை சீரமைத்து தரவேண்டும் என்பதே இந்த பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆபத்தாக உள்ள மின்சாரபெட்டியை சரிசெய்து தரவேண்டும். -இனியவர்மன், பெரமனூர்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Sep 2023 5:16 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#39461

விபத்து அபாயம்

போக்குவரத்து

சேலம் குரங்குச்சாவடியில் இருந்து 4 ரோடு வரை வாகனங்கள் சென்று வர பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பாலத்தில் வரும் வாகனங்கள் குறிப்பிட்ட வேகத்தில்தான் வர வேண்டும். ஆனால் ஒரு சில வாகன ஓட்டிகள் அதிகவேகத்தில் வருகின்றனர். இதன் காரணமாக விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் மற்ற வாகன ஓட்டிகள் அச்சத்துடனே பயணிக்க வேண்டி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஜெகதீஷ்வரன், குரங்குச்சாவடி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Sep 2023 2:55 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#39414

அதிகரிக்கும் தெருநாய்கள் தொல்லை

மற்றவை

தர்மபுரி மாவட்டத்தில் தினமும் வெளியூரில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் தெருநாய்கள் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. அந்த தெருநாய்கள் வாகன ஓட்டிகளை துரத்துவதால் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். அதிகரித்து வரும் தெருநாய்களால் சாலையில் நடந்து செல்லவே மக்கள் அச்சப்படும் சூழ்நிலை நிலவுகிறது. எனவே நகராட்சி அலுவலர்கள் நடவடிக்கை எடு்த்து தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும். -சதீஷ். தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick