30 Aug 2023 4:36 PM GMT
#39072
ஆபத்தான மின்கம்பம்
சேலம்-வடக்கு
தெரிவித்தவர்: Mr.Nagarajan
சேலம் அமானி கொண்டலாம்பட்டி அரசுமரத்துகரட்டூர் பகுதியில் அங்கன்வாடி பள்ளி அருகில் மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பம் தற்போது சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. இந்த வழியே செல்லும் பொது மக்கள் அச்சத்துடன் செல்கின்றனர். இதுகுறித்து மின்சாரத்துறை அலுவலகத்தில் பலமுறை புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இந்த மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-முத்துசாமி, சேலம்.