Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
24 Sep 2023 4:49 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#40489

பழுதடைந்த குடிநீர் தொட்டி

தண்ணீர்

சேலம் ஆண்டிப்பட்டி 20-வது வார்டில் தண்ணீர் தொட்டி உள்ளது. கடந்த சில மாதங்களாக அந்த தொட்டி பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் நீண்ட தூரம் சென்று தண்ணீர் எடுத்து வருகின்றனர். எனவே அப்பகுதி மக்களின் நலன் கருதி இந்த குடிநீர் தொட்டியை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். -தனசேகர், ஆண்டிப்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Sep 2023 4:48 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#40488

பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்படுமா?

மற்றவை

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரை அடுத்து ஆட்டையாம்பட்டி பிரிவு சாலையில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தில் நிழற்கூடம் இல்லை. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் வெயில், மழை காலங்களில் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இந்த பகுதியில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சண்முகம், அத்தனூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Sep 2023 4:45 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#40487

வாகன ஓட்டிகள் அவதி

போக்குவரத்து

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பஸ் நிலைய ரோட்டில் கடந்த சில மாதங்களாக மேம்பால பணிகள் நடந்து வருகிறது. சாலையில் வாகனங்கள் செல்லும் போது புழுதி பறக்கிறது. இதனால் வாகனங்களில் செல்பவர்கள், நடந்து செல்பவர்கள் கண்களில் தூசி விழுவதால் சிரமப்பட்டு செல்கின்றனர். மேலும் எதிரே செல்லும் வாகனங்கள் தெரியாமல் அதில் மோதி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே வாகன ஓட்டிகள் நலன் கருதி சாலைகளில் நீர் ஊற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Sep 2023 4:45 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#40486

பஸ் வசதி தேவை

போக்குவரத்து

நாமக்கல்லில் இருந்து எருமப்பட்டி தா.பேட்டை வழியாக என்.கருப்பம்பட்டி, காவேரிப்பட்டி, நாகமநாயக்கன்பட்டி, சேனப்பநல்லூர், மெய்யம்பட்டி, கலிங்ஞமுடையின்பட்டி, வெங்கடேசப்புரம், பாலக்கரை வழியாக துறையூருக்கு செல்ல பஸ் வசதி இல்லை. இந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வோர் உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதியடைகின்றனர். எனவே இந்த வழியே புறநகர் பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -ஸ்ரீதர், எருமப்பட்டி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Sep 2023 4:44 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#40485

சாலைகளில் தேங்கும் மழைநீர்

சாலை

நாமக்கல் மாவட்டம் உத்திரகிடி காவல் ஊராட்சியில் மலை வேப்பன்குட்டையில் பால் கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது. அதன் அருகில் ராசிபுரம் மெயின் ரோட்டிற்கு செல்லும் சாலை மேடும் பள்ளமாக உள்ளதால் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -நாராயணன், மலைவேப்பன் குட்டை, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Sep 2023 4:28 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#40482

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை- பாலக்கோடு சாலையில் தனியார் திருமண மண்டபம் அருகில் ஒகேனக்கல் குடிநீர் குழாய் சேதமடைந்து குடிநீர் சாலையில் வீணாக செல்கிறது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்லும் பொது மக்கள் மீது தண்ணீர்படுகிறது. மேலும் சாலை சேதமடைந்து வருகிறது. எனவே இந்த குடிநீர் குழாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -வெங்கடேசன், ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Sep 2023 4:28 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#40481

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பஸ் நிலையம் எதிரில் கிருஷ்ணகிரி- பெங்களூரு செல்லும் பஸ்கள் நிற்கும் இடத்தில் வணிக வளாகங்கள் உள்ளன. இங்கு வரும் வாடிக்கையாளர்கள், பொது மக்கள் தங்களது வாகனங்களை சாலையிலேயே நிறுத்தி விடுகின்றனர். இதனால் இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இந்த போக்குவரத்து நெரிசலை சரி செய்ய போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். -ரவி, பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Sep 2023 4:26 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#40480

சேதமடைந்த சாலை

சாலை

ஓசூர் 5-வது வார்டுக்கு உட்பட்ட ஆனந்தாநகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. மேலும் நாள்தோறும் புதிய புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு இந்த பகுதி விரிவடைந்து வருகிறது. இங்குள்ள சாலைகள் சேதமடைந்து மோசமான நிலையில் காணப்படுகின்றன. எனவே அதிகாரிகள் இந்த பகுதியில் சிமெண்டு சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். - குணசேகர், ஓசூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Sep 2023 4:25 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#40479

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

தர்மபுரி நகரில் பல்வேறு இடங்களில் தெருநாய்கள் சுற்றி திரிகின்றன. இந்த தெருநாய்கள் சாலைகளில் செல்லும் பொதுமக்களை துரத்தி அச்சுறுத்துகிறது. மேலும் வாகனங்களில் செல்வோரை துரத்துவதால் அவர்கள் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே இந்த தெரு நாய்களை பிடித்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுந்தர், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Sep 2023 4:24 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#40478

குண்டும், குழியுமான சாலை

சாலை

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே மூக்கனஅள்ளி கிராமத்திற்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. தொடர்ந்து புதிய சாலை அமைக்க ஜல்லிகற்கள் கொட்டி கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சந்தோஷ், நல்லம்பள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Sep 2023 4:22 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#40477

குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் வெங்கடசமுத்திரம் ஊராட்சியில் ஒன்றிய அலுவலகம், தாலுகா அலுவலகம், விடுதிகள், போலீஸ் நிலையம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் உள்ளன. இந்த கிராமத்தில் வசிக்கும் மக்கள் பெரும்பாலும் உப்பு தண்ணீர்தான் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அவர்கள் பல்வேறு நோய்களால் அவதி அடைகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக அரசு மாணவர் விடுதி அருகில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படாமல் உள்ளது. எனவே இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Sep 2023 4:20 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#40474

மின்விளக்குகள் அமைக்கப்படுமா?

மின்சாரம்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே அகரத்தில் இருந்து மாரண்டஅள்ளி செல்லும் சாலையோரம் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு மின்விளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் இந்த பகுதியை கடந்து செல்ல அந்த பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் அச்சப்படுகின்றனர். மேலும் திருட்டு சம்பவங்கள் நடக்கும் அபாயமும் உள்ளது. எனவே இந்த சாலையில் மின்விளக்குகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -கதிர்வேல், மாரண்டஅள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick