Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
27 Sep 2023 5:18 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#40706

மின்விளக்கு சரி செய்யப்படுமா?

மின்சாரம்

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரை அடுத்து பழந்தின்னிப்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் கடந்த சில மாதங்களாகவே தெருவிளக்கு எரியாமல் இருக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பெண்கள், முதியவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு உடனடியாக எரியாத மின் விளக்கை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். -ஜீவஜோதி பழந்தின்னிப்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Sep 2023 2:37 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#40666

மின்வாரியம் கவனிக்குமா?

மின்சாரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாலையோரங்களில் அதிக அளவில் மரங்கள் வளர்ந்து காணப்படுகிறது. இந்தநிலையில் அந்த மரங்களில் இருந்து மரக்கிளைகள் அந்த வழியாக செல்லும் மின் ஒயர்களில் உரசியபடி செல்கின்றன. தற்போது மழைக்காலம் தொடங்கி உள்ளதால் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலர்கள் அந்தந்த பகுதிகளில் சாலையோரம் உள்ள மரக்கிளைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -காந்திமதி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Sep 2023 2:36 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#40663

பராமரிக்க வேண்டிய குடிநீர் தொட்டிகள்

தண்ணீர்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக கிராம பகுதிகளில் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்தநிலையில் அந்த குடிநீர் தொட்டிகள் போதிய பராமரிப்பு இன்றி சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால் தண்ணீரில் கிருமிகள் உருவாகி நோய் பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் தொட்டிகளை ஆய்வு செய்து பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராம்கி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Sep 2023 2:35 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#40662

இரவில் பஸ் வசதி அவசியம்

போக்குவரத்து

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் இருந்து மாலை 6 மணிக்குமேல் பேரிகை செல்வதற்கு தனியார் மற்றும் அரசு பஸ்கள் ஏதும் இல்லை. 6 மணிக்கு மேல் பேரிகை செல்லவேண்டும் என்றால் ஓசூர் பாகலூர் வழியாகத்தான் மக்கள் செல்கிறார்கள். சூளகிரியில் இருந்து 16 கி.மீ. தொலைவில் இருக்கும் பேரிகைக்கு ஓசூர் பாகலூர் வழியாக சுமார் 46 கி.மீ. சுற்றிக்கொண்டு செல்லும் நிலைமை உள்ளது. எனவே பேரிகை செல்வதற்கு அரசு பஸ் ஏற்பாடு செய்தால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், போக்குவரத்து...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Sep 2023 2:28 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#40658

சாலையின் நடுவே குழி

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் காரக்குப்பம் ரோட்டில் சின்ன பர்கூர் 3 புளிய மரம் அருகே வளைவு பகுதியில் நடுரோட்டில் அபாயகரமான 2 அடி ஆழம் குழி உள்ளது. சாலை குறுகிய வளைவு என்பதால் அந்த குழியை யாரும் கவனிக்காமல் செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே இச்சாலையை சீரமைத்து தரும்படி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுக்கின்றனர். -பிரகாஷ், பர்கூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Sep 2023 2:27 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#40656

வாகன ஓட்டிகள் அவதி

சாலை

தா்மபுாி மாவட்டம் ஏரியூர் அருகே தொண்ண குட்ட அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட மணியக்காரன் கொட்டாய் பகுதியில் சாலையில் மழைநீா் தேங்குகிறது. இதனால் நடந்து செல்பவர்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் சாலையும் சேதமாகுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கோபால், ஏரியூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Sep 2023 2:26 PM GMT
Mr.Nagarajan | பாலக்கோடு
#40655

குண்டும், குழியுமான சாலை

சாலை

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே அதியமான்கோட்டையில் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இந்த சாலையில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் செல்லும்போது சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். அவசிய தேவைக்குகூட செல்ல முடியாத வகையில் இந்த சாலை உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்து தரவேண்டும். -கண்ணன், அதியமான்கோட்டை, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Sep 2023 2:25 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#40652

கழிவுநீர் கால்வாய் தேவை

கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சிக்கமாரண்டஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நீண்ட நாட்களாக கழிவுநீர் கால்வாய் இல்லை. இதனால் அந்த பகுதியில் சாலையோரம் குழி வெட்டி வீட்டின் உட்பகுதியில் இருந்து குழாய் அமைத்து கழிவுநீரை சாலையோரம் உள்ள குழியில் நிரப்பும் நிலை உள்ளது. அதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் அதிகம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து கழிவுநீர் கால்வாய் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -முருகன், மாரண்டஅள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Sep 2023 2:24 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#40651

தெருநாய்களை கட்டுப்படுத்தலாமே!

மற்றவை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி 18 வார்டுகளிலும் தெருநாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. குறிப்பாக மாலை நேரங்களில் கூட்டம் கூட்டமாக வரும் தெருநாய்கள் திடீரென சாலையில் செல்வோரை துரத்தி சென்று கடிக்கின்றன. இதனால் பொதுமக்கள் சாலையில் நடமாடவே பயப்படுகின்றனர். மேலும் பள்ளி முடிந்து வரும் மாணவர்கள் மற்றும் பெண்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். கடந்த ஆண்டு தெருநாய்களை கட்டுப்படுத்த அவற்றை பிடித்து குடும்ப கட்டுப்பாடு செய்தனர். அதேபோல் தெருநாய்களை கட்டுப்படுத்த மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Sep 2023 4:52 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#40492

அகற்ற வேண்டிய ஆக்கிரமிப்புகள்

மற்றவை

சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகராட்சி எல்லைக்குட்பட்ட விநாயகபுரத்தில் ஆத்தூர்-சேலம் செல்லும் உட்புற சர்வீஸ் சாலையில் வடபுறம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மாணவர் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் ஆத்தூர், பெத்தநாயக்கன்பாளையம், கெங்கவல்லி மற்றும் வாழப்பாடி பகுதியிலிருந்து பள்ளி மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இவ்விடுதிக்கு முன்புறம் உள்ள பகுதியை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்து கடை நடத்தி வருகிறார்கள். எனவே இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Sep 2023 4:51 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#40491

இடிந்து விழும் நிலையில் இ-சேவை மையம்

மற்றவை

சேலம் மாவட்டம் வாழப்பாடி இ-சேவை மையம் உள்ளது. இந்த மையத்திற்கு வாழப்பாடி பகுதியில் உள்ள சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு சான்றிதழ்கள் பெற வருகிறார்கள். இநத் மையத்தின் மேற்கூரை இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பே இந்த இ-சேவை மைய மேற்கூரையை சரிசெய்து தரவேண்டும். -சுரேஷ், வாழப்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Sep 2023 4:50 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#40490

சுகாதார கேடு

குப்பை

சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சி 4-வது வார்டில் சடையன்செட்டி ஏரி உள்ளது. இந்த ஏரியில் தினமும் பேரூராட்சி பணியாளர்கள் குப்பை வண்டியில் மருத்துவமனையில் உள்ள மருத்துவ கழிவுகளை கொட்டி எரிக்கிறார்கள். இதனால் அருகில் உள்ள பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் பகுதியில் நோய் பரவும் வாய்ப்பு உள்ளதால் அங்கு குப்பைகளை கொட்டி எரிக்க கூடாது என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜா, வாழப்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick