Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
16 Jun 2024 5:03 PM GMT
Mr.Nagarajan
#47551

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வேண்டும்

தண்ணீர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட காமராஜர் காலனியில் பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டது. ஆனால் கடந்த சில மாதங்களாக சுத்திகரிப்பு குடிநீர் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் தேவைக்காக மிகவும் சிரமமடைகின்றனர். எனவே மீண்டும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் சேவை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜா, ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Jun 2024 5:01 PM GMT
Mr.Nagarajan
#47550

கிராமங்களுக்கு பாலம் அமைக்கலாமே!

போக்குவரத்து

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா ஜெகதேவி ஊராட்சி ஜிடடோபனப்பள்ளி ஜூஜி வகுத்தன் கொட்டாய், தண்ணீர் பள்ளம் வேடர்கொட்டாய் கிராமங்கள் காலனூர் ஆற்றின் எதிர்புறமும் அமைந்துள்ளது. இந்த வெவ்வேறு கிராமங்களிலும் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த 2 பகுதிகளையும் தனித்தனியே காலனூர் ஆறு பிரிக்கிறது. இதனால் இந்த பகுதியை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆற்றை கடக்க மிகவும் சிரமமடைகின்றனர். எனவே ஆற்றின் குறுக்கே பாலம் அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -அருண்,...

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Jun 2024 5:03 PM GMT
Mr.Nagarajan
#47549

குண்டும், குழியுமான சாலை

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா குட்டூர் ஊராட்சி ஜிஞ்ஜம்பட்டியில் இருந்து ஆம்பள்ளி வரை செல்லும் சாலையில் நகர, புறநகர மற்றும் தனியார் கல்லூரி வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையை பிரதான போக்குவரத்து சாலையாக 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். எனவே சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ள சாலையை முழுமையாக அகற்றி விட்டு தார்சாலை அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -முருகன், பர்கூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Jun 2024 6:11 PM GMT
Mr.Nagarajan
#47434

வேகத்தடை வேண்டும்

சாலை

சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா அலுவலகம் அருகில் வேகத்தடை அமைக்கப்பட்டு இருந்்தது. சமீபத்தில் நடைபெற்ற சாலை விரிவாக்க பணியின் போது வேகத்தடை அகற்றப்பட்டது. ஆனால் சாலை விரிவாக்க பணிகள் முடிவடைந்தும் இன்னும் வேகத்தடை அமைக்கப்படவில்லை. இதனால் இந்த பகுதியில் வாகனங்கள் தாறுமாறாக செல்வதால் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே இந்த பகுதியில் வேகத்தடை அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -குமார், தாரமங்கலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Jun 2024 6:10 PM GMT
Mr.Nagarajan
#47433

போலீசார் கண்காணிப்பார்களா?

மற்றவை

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை காந்தி நகரில் நாகர்கோவில் எதிர்வீதியில் கார் நிறுத்தும் இடம் உள்ளது. இந்த பகுதியில் இரவு நேரங்களில் சிலர் மது அருந்திவிட்டு சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். மேலும் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றச்செயல்கள் அடிக்கடி நடக்கிறது. இதனால் இரவு நேரத்தில் அந்த பகுதி வழியாக செல்ல பெண்கள் அச்சப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -சங்கர், இளம்பிள்ளை.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Jun 2024 6:07 PM GMT
Mr.Nagarajan
#47432

தடுப்புச்சுவர் அமைக்கலாமே!

போக்குவரத்து

தேவூர் அருகே கல்லம்பாளையம் பகுதியில் மேட்டூர் கிழக்கு கரை கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயை பொதுமக்கள் கடந்து செல்ல பல ஆண்டுகளுக்கு முன்பு பாலம் கட்டப்பட்டது. இந்த கால்வாய் பாலத்தின் வழியாக பள்ளி, கல்லூரி, மாணவ- மாணவிகள் தினமும் எடப்பாடி, குமாரபாளையம், பவானி உள்ளிட்ட நகர பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக பாலத்தின் ஒருபுறம் தடுப்புச்சுவர் உடைந்து விட்டது, இதனால் இரவு நேரத்தில் இரு சக்கர வாகனங்களில் பயணம் செல்வோர் தவறி கால்வாயில் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Jun 2024 6:06 PM GMT
Mr.Nagarajan
#47431

கழிவுநீர் கால்வாய் வசதி

கழிவுநீர்

கெங்கவல்லியில் உள்ள ஒரு சினிமா தியேட்டர் பஸ் நிறுத்தத்தையொட்டி தார்சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் ஆத்தூர் பிரதான சாலையில் சாக்கடை கால்வாய் இல்லாததால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடை கழிவுநீர் வெளியேறும் வகையில் கால்வாய் வசதியை ஏற்படுத்த வேண்டும். மேலும் இந்த சாலையை அகலப்படுத்த வேண்டும் என்றுபொதுமக்கள் தரப்பில் கோரிக்கை இருந்து வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Jun 2024 5:51 PM GMT
Mr.Nagarajan
#47429

கழிவுநீர் கால்வாய் வேண்டும்

கழிவுநீர்

திருச்செங்கோடு சின்ன எலச்சிபாளையத்தில் பெரியார் சமத்துவபுரம் உள்ளது. இந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்தபகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதிகள் இல்லாததால் மக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் சமத்துவபுரத்தை சுற்றியும் கம்பி வேலி இருந்தது. ஆனால் தற்போது அவை சேதமடைந்து காணப்படுகிறது. எனவே ேசதமடைந்த கம்பி வேலியை நீக்கி விட்டு சமத்துவபுரத்தை சுற்றி சுற்றுச்சுவர் கட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கழிவுநீர் கால்வாய் அமைத்து தரவும் வேண்டும். -ராஜ்,...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Jun 2024 5:50 PM GMT
Mr.Nagarajan
#47428

சுகாதார சீர்கேடு

குப்பை

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே கொண்டமநாயக்கன்பட்டி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையோரங்களில் குப்பைகளை கொட்ட கூடாது என்று ஊராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதையும் மீறி சிலர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் அங்கு துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே அதிகாரிகள் குப்பைகளை கொட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஜெயராம், கொண்டமநாயக்கன்பட்டி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Jun 2024 5:48 PM GMT
Mr.Nagarajan
#47427

பஸ்கள் நின்று செல்லுமா?

போக்குவரத்து

பஸ்கள் நின்று செல்லுமா? ராசிபுரம் டவுனில் பிரசித்தி பெற்ற நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் உள்ளது. ஈரோடு, திருச்செங்கோடு, நாமக்கல் போன்ற பகுதிகளில் இருந்து வரும் அனைத்து பஸ்களும் இக்கோவில் வழியாகத்தான் சென்று வருகின்றன. இந்த நிலையில் வெளியூர்களில் இருந்து ராசிபுரம் நகருக்கு வரும் பஸ்களும், ராசிபுரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து நாமக்கல் செல்லும் பஸ்களும் மாரியம்மன் கோவில் பஸ் நிறுத்தத்தில் நிற்பது இல்லை. எனவே அரசு, தனியார் பஸ்கள் அனைத்தும் மாரியம்மன் கோவில் அருகே நின்று சென்றால்...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Jun 2024 5:47 PM GMT
Mr.Nagarajan
#47426

குண்டும், குழியுமான சாலை

சாலை

மோகனூரில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில் தோப்பூர் உள்ளது. இந்த பகுதியில் இருந்து ஆரியூர் செல்லும் தார்சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் அந்தபகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு தீவனங்களை எடுத்து செல்லவும், முட்டைகளை கொண்டு செல்லவும் முக்கிய சாலையாக இருந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான இந்த சாலையை சீரமைத்து தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -குப்புராஜ்,...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Jun 2024 4:28 PM GMT
Mr.Nagarajan
#47408

பூட்டியே கிடக்கும் நூலகம்

மற்றவை

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே அத்திமுட்லு ஊராட்சிக்குட்பட்ட அகரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள அண்ணா மறுமலர்ச்சி நூலகம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்ட இந்த நூலகம் தற்போது புதுபிக்கும் பணி முடித்தும் பூட்டியே கிடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நூலகத்தை திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். -கதிர்வேல், அகரம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick