9 Jun 2024 5:47 PM GMT
#47426
குண்டும், குழியுமான சாலை
நாமக்கல்
தெரிவித்தவர்: Mr.Nagarajan
மோகனூரில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில் தோப்பூர் உள்ளது. இந்த பகுதியில் இருந்து ஆரியூர் செல்லும் தார்சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் அந்தபகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு தீவனங்களை எடுத்து செல்லவும், முட்டைகளை கொண்டு செல்லவும் முக்கிய சாலையாக இருந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான இந்த சாலையை சீரமைத்து தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குப்புராஜ், மோகனூர்.