Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
23 Jun 2024 5:07 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#47762

குண்டும், குழியுமான சாலை

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் இருந்து உத்தனப்பள்ளி செல்லும் சாலையில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் இருந்து நாள்தோறும் பொதுமக்கள் பல்வேறு பணி நிமித்தமாக சூளகிரி, கிருஷ்ணகிரி, ஓசூர் பகுதிகளுக்கு வந்து செல்கிறார்கள். சூளகிரி - உத்தனப்பள்ளி சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். மேலும் வாகன ஓட்டிகள் பலர் கீழே விழுந்து காயம் அடைகிறார்கள். எனவே சாலை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பிரபு, சூளகிரி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Jun 2024 5:05 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#47761

தெருநாய் தொல்லை

மற்றவை

கிருஷ்ணகிரி நகரில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளன. குறிப்பாக கிருஷ்ணகிரி சப்-ஜெயில் சாலை, பெங்களூரு சாலை, சேலம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் பள்ளிக்கு செல்ல கூடிய மாணவ, மாணவிகள் அச்சமடைகிறார்கள். தெருநாய் கடியால் நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இரவு நேரத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகள் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். -தர்ஷன், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Jun 2024 5:03 PM GMT
Mr.Nagarajan | பர்கூர்
#47758

மேம்பாலம் அமைக்கலாமே!

போக்குவரத்து

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகாவில் எமக்கல்நத்தம் கிராமத்தின் சுற்று வட்டார பகுதிகளான பாறையூர், சாலிநாயனப்பள்ளி, கோதியழகனூர், நேரலகோட்டை, கொல்லபள்ளி உட்பட பல கிராம புற பகுதிகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள கிராம மக்கள் பாம்பாற்றை கடந்து தான் தங்கள் கிராமங்களுக்கு செல்ல வேண்டும். மேலும் இந்த கிராமங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் ஆற்றை கடந்து செல்ல சிரமம் அடைகின்றனர். எனவே பாம்பாற்றின் குறுக்கே மேம்பாலம் அமைத்து தர வேண்டும். -குமார், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Jun 2024 5:44 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#47581

நதியை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரைகள்

தண்ணீர்

சேலம் மாவட்டம் தேவூர் அருகே அண்ணமார் கோவில் பகுதியில் சரபங்காநதி காவிரி ஆற்றில் கலக்கிறது. இந்த பகுதியில் ஆகாயத்தாமரைகளால் நதி ஆக்கிரமிக்கப்பட்டு காணப்படுகிறது. இந்நிலையில் தேவூர் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் புனித நீராடி தீர்த்தம் எடுத்து செல்ல சரபங்காநதிக்கு வருவது வழக்கமாக உள்ளது. இதனால் கடந்த சில ஆண்டுகளாக ஆகாயத்தாமரைகள் நதியை சூழ்ந்துள்ளதால் பக்தர்கள் புனித நீராட முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே சரபங்கா நதியில் சூழ்ந்து காணப்படும் ஆகாயத்தாமரைகளை அகற்ற முன் வரவேண்டும். -நாராயணன்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Jun 2024 5:42 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#47580

டிரான்ஸ்பார்மர் பயன்பாட்டிற்கு வருமா?

மின்சாரம்

சேலம் மாவட்டம் தலைவாசல் அடுத்த புனல்வாசல் கிராமத்தின் கிழக்கு பகுதியில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. இந்த டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு 2 ஆண்டுகளாகியும் பயன்படுத்தப்படாமல் உள்ளது. பயனற்று கிடக்கும் இந்த டிரான்ஸ்பார்மரை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் அந்த பகுதி விவசாயிகளுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். எனவே டிரான்ஸ்பார்மரை பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மணிகண்டன், தலைவாசல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Jun 2024 5:29 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#47569

குண்டும், குழியுமான சாலை

சாலை

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர்-ஆட்டையாம்பட்டி செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை மற்றும் நாச்சிப்பட்டி பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பகுதிகளுக்கு இடையே செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் மழைநீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு செல்கின்றனர். இந்த சாலையை தண்ணீர் தேங்காத வண்ணம் சீரமைத்து தர வேண்டும். -பவித்திரன், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Jun 2024 5:27 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#47568

சுகாதார சீர்கேடு

குப்பை

மோகனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஓலப்பாளையம் ஊராட்சி பகுதிகளின் எல்லைக்கு இடையில் சாலையோரங்களில் குப்பை தொட்டிகள் இருந்தும் குப்பை தொட்டிகளில் குப்பைகளை போடாமல் சாலையோரம் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். இந்த பகுதிகளில் சாலையோரம் குப்பைகள் கொட்டி செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாலையோரம் குப்பைகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜேஷ்கண்ணன், பாலப்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Jun 2024 5:25 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#47567

போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள்

போக்குவரத்து

ராசிபுரம் நகரத்தில் சாலைகள் குறுகிய அளவில் இருந்து வருவதால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக ராசிபுரம் கடைவீதிகள், கச்சேரி தெரு, பூக்கடை வீதி போன்ற இடங்களில் வர்த்தக நிறுவனங்களுக்கு வருவோர் போக்குவரத்துக்கு இடையூறாக வணிக நிறுவனங்களின் முன்பு வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் குறிப்பாக காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சாலையோரம் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க...

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Jun 2024 5:22 PM GMT
Mr.Nagarajan | சேந்தமங்கலம்
#47565

வேகத்தடை வேண்டும்

சாலை

கொல்லிமலைக்கு செல்ல அடிவாரத்தில் இருந்து 65 கொண்டை ஊசி வளைவுகளை கடந்த பின்பு சோளக்காடு வளைவு பகுதியில் நாச்சியம்மன் கோவில் உள்ளது. புகழ்பெற்ற இந்த கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அவர்கள் வழியிலேயே வாகனத்தை நிறுத்தி சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். இந்த பகுதி பிரதான சாலையாக இருப்பதால் கோவிலுக்கு செல்லும்போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அந்த கோவில் வளைவு பகுதியில் வேகத்தடை அமைத்தால் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பாக இருக்கும். -சுந்தரம்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Jun 2024 5:13 PM GMT
Mr.Nagarajan | அரூர்
#47558

வாகன ஓட்டிகள் அவதி

போக்குவரத்து

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் முதல் சேலம் மாவட்டம் மேச்சேரி வரை செல்லக்கூடிய பிரதான சாலையில் பூச்சூர் முதல் பழையூர் வரையிலான தார்சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பயணம் செய்யவே முடியாத அளவிற்கு சாலை பெயர்ந்து ஜல்லிக்கற்களாக இருக்கிறது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்வோரும், நடந்து செல்வோரும் அவதியடைகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -தமிழ்செல்வன், இண்டூர்.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Jun 2024 5:09 PM GMT
Mr.Nagarajan | பாப்பிரெட்டிப்பட்டி
#47554

அபாய மின்கம்பம்

மின்சாரம்

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள காளிகொட்டாய் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தபகுதியில் கேத்துரெட்டிப்பட்டி- பொம்மிடி செல்லும் சாலையில் சாலையோரம் அமைக்கப்பட்ட மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் மின் கம்பம் எந்த நேரத்திலும் சாய்ந்து விழும் அபாயம் உள்ளது. எனவே சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை சீரமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -தங்கராஜ், பாப்பிரெட்டிப்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Jun 2024 5:07 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#47552

மரண கிணறு

சாலை

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே கே.குள்ளாத்திரம் பட்டியில் ஏரியூர்- பென்னாகரம் பிரதான சாலையோரம் ஆபத்தான நிலையில் கிணறு உள்ளது. எனவே சாலையை ஒட்டி உள்ள இந்த கிணற்று பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே மரணம் ஏற்படுத்த காத்திருக்கும் சாலையோர கிணற்றுக்கு தடுப்புசுவர்கள் அமைக்க வேண்டும். -கார்த்திக், பென்னாகரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick