16 Jun 2024 5:13 PM GMT
#47558
வாகன ஓட்டிகள் அவதி
அரூர்
தெரிவித்தவர்: Mr.Nagarajan
தர்மபுரி மாவட்டம் ஏரியூர் முதல் சேலம் மாவட்டம் மேச்சேரி வரை செல்லக்கூடிய பிரதான சாலையில் பூச்சூர் முதல் பழையூர் வரையிலான தார்சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பயணம் செய்யவே முடியாத அளவிற்கு சாலை பெயர்ந்து ஜல்லிக்கற்களாக இருக்கிறது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்வோரும், நடந்து செல்வோரும் அவதியடைகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தமிழ்செல்வன், இண்டூர்.