Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
9 Jun 2024 4:25 PM GMT
Mr.Nagarajan
#47407

சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?

கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் தொப்பூரில் 4 வழி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையின் இருபுறமும் சாக்கடை கால்வாய் உள்ளது. தற்போது பெய்த மழைநீர், வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சாலையின் இருபுறமும் செல்லும் வகையில் இருந்து வந்தது. இந்த சாக்கடை கால்வாய்கள் தூர்வாரப்படாமல் இருப்பதால் புதர்மண்டியும், மண் நிரம்பியும் கிடக்கிறது. தொப்பூரில் உள்ள 4 வழி தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் உள்ள சாக்கடை கால்வாயினை தூர்வாரி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். -கண்ணன், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Jun 2024 4:22 PM GMT
Mr.Nagarajan
#47406

குண்டும், குழியுமான சாலை

சாலை

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள நாகமரை ஊராட்சிக்குட்பட்ட குருக்கலையனூர், சாம்பள்ளிக்காடு, மத்தாளபள்ளம் ஆகிய ஊர்களுக்கு செல்லக்கூடிய சாலை அந்த பகுதியின் பிரதான சாலையாக உள்ளது. இந்த சாலை வாகன ஓட்டிகள் பயணம் செய்யவே முடியாத அளவிற்கு சாலை சேதமடைந்து பெயர்ந்து ஜல்லிகற்களாக கிடக்கிறது. எனவே சேதமடைந்த தார்சாலையை சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -நந்து, ஒட்டனூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Jun 2024 4:21 PM GMT
Mr.Nagarajan
#47405

குளம்போல் தேங்கும் தண்ணீர்

தண்ணீர்

பர்கூர் அடுத்த காரகுப்பம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த கிராமத்திற்கு முறையான கழிவுநீர் கால்வாய்கள், சிமெண்டு சாலை வசதிகள் இன்றி உள்ளது. இதனால் கழிவு நீர் அங்கன்வாடி மையம், வி.ஏ.ஓ. அலுவலகம் மற்றும் ஊராட்சி அலுவலகம் பகுதிகளில் குளம் போல் தேங்கி விடுகிறது. இதனால் இப்பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காரகுப்பம் கிராமத்திற்கு கழிவுநீர் கால்வாய் மற்றும் சிமெண்டு சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Jun 2024 4:19 PM GMT
Mr.Nagarajan
#47402

அபாய நிலையில் மின்கம்பிகள்

மின்சாரம்

கிருஷ்ணகிரி மாவட்டம் பி.ஆர்.ஜி. மாதேப்பள்ளியில் இருந்து சென்னை, கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் சாலையில் மிகவும் தாழ்வான நிலையில் மின் கம்பிகள் உள்ளது. மேலும் அந்த சாலையில் செல்லும் வாகனங்களின் மேல் பகுதி உரசும் வகையில் மின்கம்பிகள் உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். எனவே தாமதமின்றி மின்கம்பிகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜமுத்து, பர்கூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Jun 2024 4:14 PM GMT
Mr.Nagarajan
#47399

தடுப்பு சுவர் சீரமைக்கப்படுமா?

தண்ணீர்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா புளியம்பட்டி ஊராட்சியில் உள்ள பாரூர் ஏரியின் உபரிநீர் பெனகுண்டாபுரம் ஏரிக்கு செல்லும் கால்வாய் உள்ளது. இதில் திருவயளூர் கிராமத்தின் அருகே கால்வாயின் பக்கவாட்டு சுவர் மண் அரிப்பு ஏற்பட்டு இடிந்து மோசமான நிலையில் உள்ளது. எனவே அரிகாரிகள் இதனை ஆய்வு செய்து பருவமழை தொடங்குவதற்கு முன்பு உடனடியாக கால்வாயின் தடுப்பு சுவரை சீரமைக்க வேண்டும். -பரணி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Jun 2024 6:02 PM GMT
Mr.Nagarajan
#47248

ஆபத்தான பஸ் நிறுத்தம்

போக்குவரத்து

சேலம் நான்கு ரோடு - பழைய பஸ் நிலையம் இடையே அண்ணா பூங்கா பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு புதிய பஸ் நிலையத்தில் இருந்து பழைய பஸ்நிலையத்திற்கு வரும் ஒரு சில பஸ்கள் சாலையின் நடுவே நின்று செல்கிறது. இதனால் பயணிகள் பஸ்சை விட்டு இறங்குவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் சாலையில் செல்லும் வாகனங்களால் பயணிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் அனைத்து பஸ்களும் சாலையோரம் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். -சரண், அரிசிபாளையம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Jun 2024 6:01 PM GMT
Mr.Nagarajan
#47247

வேகத்தடை வேண்டும்

சாலை

தேவூர் அருகே கொட்டாயூர் பகுதியில் எடப்பாடியில் இருந்து கல்வடங்கம் செல்லும் சாலையும், கோனேரிப்பட்டியில் இருந்து குமாரபாளையம் செல்லும் சாலையும் கொட்டாயூரில் சந்திக்கிறது. இந்த பகுதியில் நான்கு ரோடுகளும் சந்திக்கும் இடத்தில் வேகத்தடை இல்லாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இந்த பகுதியில் வேகத்தடை அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -கோவிந்தராஜ், கொட்டாயூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Jun 2024 5:58 PM GMT
Mr.Nagarajan
#47246

தெருவிளக்கு சரிசெய்யப்படுமா?

மின்சாரம்

சேலம் மாவட்டம் புளியம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட 4-வது வார்டு பகுதியில் பெருமாள் கோவில் முதல் பம்பைகாரர் வட்டம் செல்லும் வழியில் பல மாதங்களாக தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால் இப்பகுதி வழியாக இரவு நேரம் வரும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் இந்த பகுதியில் இரவு நேரத்தில் விஷ பூச்சிகள், பாம்புகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. எனவே மின்விளக்குகளை சரிசெய்ய வேண்டும் என இந்த பகுதியை சேர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -பழனிவேல், புளியம்பட்டி.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Jun 2024 5:56 PM GMT
Mr.Nagarajan
#47245

தெருநாய் தொல்லை

மற்றவை

சேலம் பெரமனூரில் 40 அடி ரோடு உள்ளது. இந்த பகுதியில் காலை மற்றும் இரவு நேரங்களில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இரவு நேரங்களில் இந்த வழியாக வேலை முடிந்து வாகனங்களில் செல்பவர்களையும் மற்றும் நடந்து வருபவர்களையும் துரத்தி சென்று கடிக்கின்றன. இதனால் இந்த பகுதி வழியாக பொதுமக்கள் வரவே அச்சப்படுகின்றனர். எனவே தெருநாய் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். -பூபதி, சேலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Jun 2024 5:54 PM GMT
Mr.Nagarajan
#47244

விபத்து அபாயம்

சாலை

வெண்ணந்தூர் தாலுகா செம்மாண்டப்பட்டி ஊராட்சி அலுவலகத்தில் இருந்து காணாம்பாளையம் செல்லும் சாலை பல ஆண்டுகளாக தார்ச்சாலை இல்லாததால் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அடிக்கடி இந்த பகுதியில் விபத்துகள் ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிய தார்சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். -செந்தில், காணாம்பாளையம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Jun 2024 5:52 PM GMT
Mr.Nagarajan
#47243

உயர்மின் கோபுர விளக்கை சரி செய்யலாமே!

மின்சாரம்

நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட எஸ்.வாழவந்தி பஸ் நிறுத்தத்தில் உயர்கோபுர மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த உயர் கோபுரத்தில் 6 மின்விளக்குகள் உள்ளன. கடந்த மூன்று மாதங்களாக 6 விளக்குகள் உள்ள நிலையில் 2 மின் விளக்குகள் மட்டும் எரிந்து கொண்டிருக்கிறது. இந்த மின் விளக்குகள் எரியும் பட்சத்தில் சந்தை வளாகம், பள்ளி வளாகம், பஸ் நிறுத்தம் உட்பட பல்வேறு பகுதிகள் வெளிச்சமாக பொதுமக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Jun 2024 5:50 PM GMT
Mr.Nagarajan
#47242

சுகாதார சீர்கேடு

கழிவுநீர்

பள்ளிபாளையம் பழைய போலீஸ் நிலையம் அருகே நடேஷ் செட்டியார் தெரு உள்ளது. தற்போது பஸ் நிலைய மேம்பால பணிகள் நடைபெறுவதால் அனைத்து இரு சக்கர, சரக்கு வாகனங்களும் இந்த சாலையை பயன்படுத்துகின்றன. இந்த பகுதியில் சாலையில் சாக்கடை கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு தேங்கி நிற்பதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரும் சிரமம் அடைகின்றன. மேலும் இந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடை கழிவுநீர் தேங்காத வகையில் கழிவுநீர் கால்வாயை சீர அமைத்து தர...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick