9 Jun 2024 4:14 PM GMT
#47399
தடுப்பு சுவர் சீரமைக்கப்படுமா?
பர்கூர்
தெரிவித்தவர்: Mr.Nagarajan
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா புளியம்பட்டி ஊராட்சியில் உள்ள பாரூர் ஏரியின் உபரிநீர் பெனகுண்டாபுரம் ஏரிக்கு செல்லும் கால்வாய் உள்ளது. இதில் திருவயளூர் கிராமத்தின் அருகே கால்வாயின் பக்கவாட்டு சுவர் மண் அரிப்பு ஏற்பட்டு இடிந்து மோசமான நிலையில் உள்ளது. எனவே அரிகாரிகள் இதனை ஆய்வு செய்து பருவமழை தொடங்குவதற்கு முன்பு உடனடியாக கால்வாயின் தடுப்பு சுவரை சீரமைக்க வேண்டும்.
-பரணி, கிருஷ்ணகிரி.