Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
14 July 2022 5:18 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#1767

வீணாகும் குடிநீர்

வீணாகும் குடிநீர்தண்ணீர்

சேலம் மாவட்டம் தாரமங்கலம் 9-வது வார்டு அருணாசலம் புதூர் தெருவில் குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாக தெருவில் ஆறாக ஓடுகிறது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இரண்டு வாரங்களாக இதேநிலையில் உள்ளது. இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட துறையினர் விரைவில் நடவடிக்கை எடுத்து உடைந்த குடிநீர் குழாயை சரி செய்தால் குடிநீர் வீணாவதை தவிர்க்கலாம். -மணிமன்னன், தாரமங்கலம், சேலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 July 2022 5:10 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#1766

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரின் முக்கிய பகுதியான பள்ளி சாலை, அரசு மருத்துவமனை, பழைய பைபாஸ் சாலை, பஸ்நிலையம் மற்றும் திருவள்ளுவர் சாலை பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் காலையில் நடைபயிற்சி செல்பவர்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். தெருநாய்களை பிடிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். -குமார், பரமத்திவேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 July 2022 5:09 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#1764

வேகத்தடை அமைக்கப்படுமா?

சாலை

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரில் இருந்து ராசிபுரம் செல்லும் பிரதான சாலையில் வெண்ணந்தூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகே சாலை மிகவும் குறுகலாக உள்ளதாலும், அங்கு வேகத்தடை இல்லாத காரணத்தாலும் எதிரே வரும் வாகனம் தெரியாமல் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் அச்சத்துடன் செல்கின்றனர். எனவே வருவாய் அலுவலகம் அருகே குறுகலான பகுதியில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுப்பிரமணியன், வெண்ணந்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 July 2022 5:06 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#1762

ஜல்லி கற்கள் சாலை

ஜல்லி கற்கள் சாலைசாலை

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள ஆமப்பாறையில் இருந்து எஸ்.வாழவந்தி- ஆரியூர் இணைப்பு வரை செல்லும் சாலை சேதமடைந்துள்ளது. இதனால் சாலை ஜல்லி கற்களாக காட்சி அளிக்கிறது. வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுபற்றி புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. சாலையை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும். -ராமசாமி, ஆமப்பாறை, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 July 2022 4:54 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#1754

பகலிலும் எரியும் கோபுர விளக்கு

பகலிலும் எரியும் கோபுர விளக்குமின்சாரம்

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் 3 மாநிலங்கள் இணையும் குப்பம் ஜங்ஷனில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. இந்த மின் விளக்கு 24 மணி நேரமும் எரிந்து கொண்டிருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பகல்-இரவு நேரம் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது. உயர்மின் கோபுர விளக்கு உரிய நேரத்தில் மட்டும் எரிய செய்யஎநடவடிக்கை எடுக்க வேண்டும். -பொதுமக்கள், வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 July 2022 4:51 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#1752

மழைநீரால் மக்கள் அவதி

மற்றவை

ஓசூர் ராயக்கோட்டை சாலையில் பண்டாஞ்சநேயர் கோவில் அருகே மழைக் காலங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்லவும், வாகன ஓட்டிகள் ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் இதில் கவனம் செலுத்தி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். - எம்.ராமச்சந்திரன், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 July 2022 4:50 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#1750

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

ஓசூர் மாநகரில் அனைத்து பகுதிகளிலும் தெருநாய்கள் தொல்லை அதிகளவில் இருந்து வருகிறது. சாலைகளில் நடந்து செல்லும் போதும், வாகனங்களில் செல்லும்போதும் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக துரத்தி செல்கின்றன. இதனால் பொதுமக்கள், சிறுவர்கள் அச்சப்படுகின்றனர். எனவே மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். -ஜி.ரமேஷ், காமராஜ் காலனி, ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 July 2022 4:48 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#1748

வாகனங்களை அப்புறப்படுத்தலாமே!

போக்குவரத்து

ராயக்கோட்டையில் ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் மெயின் ரோட்டின் இருபுறமும் கடைகளின் முன்பு இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்துக்கு மிகவும் இடையூறாக உள்ளது. சாலையில் வாகனங்கள் செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். -கண்ணபிரான். ராயக்கோட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 July 2022 4:40 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#1743

ஜல்லி கற்களாக காட்சியளிக்கும் சாலை

ஜல்லி கற்களாக காட்சியளிக்கும் சாலைசாலை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பூர்காலன்கொட்டாய் கிராமத்தில் தார்சாலை அமைக்க பணிகள் தொடங்கப்பட்டன. ஜல்லி கற்கள் பரப்பி பல மாதங்கள் ஆகியும் இதுவரை சாலை அமைக்க பணிகள் தொடங்கப்படவில்ைல. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுபற்றி புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டுெகாள்ளவில்லை. எப்போதுதான் புதிய சாலைக்கு தீர்வு கிடைக்குமோ என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கிறார்கள். -சரவணன், பாலக்கோடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 July 2022 4:29 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#1741

கிணற்றுக்கு வேலி அமைக்கப்படுமா?

கிணற்றுக்கு வேலி அமைக்கப்படுமா?மற்றவை

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே மஞ்சாரஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட சித்திரைப்பட்டியில் விளையாட்டு மைதானம் உள்ளது. அதன் அருகே கிணற்றின் சுற்றுச்சுவர் இடிந்த நிலையில் பாதுகாப்பு வளையங்கள் இல்லாமல் ஆபத்தாக உள்ளது. இப்பகுதியில் இளைஞர்களின் விளையாடும் கிணற்றில் அடிக்கடி விழுகிறது. விளையாட்டு மைதானத்தின் அருகே பாதுகாப்பற்ற நிலையில் உள்ள கிணற்றுக்கு இரும்பு வேலி அமைக்க அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா? -சதீஷ், மஞ்சாரஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 July 2022 4:27 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#1740

ஆபத்தான மின்கம்பம்

ஆபத்தான மின்கம்பம்மின்சாரம்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சீதிகானஅள்ளி கிராமத்தில் விவசாய நிலத்தில் மின்கம்பம் உள்ளது. அந்த மின்கம்பம் சேதமடைந்து சிமெண்டு பூச்சுகள் விழுந்து இரும்பு கம்பிகள் தெரிந்தபடி உள்ளன. வேகமாக காற்று அடித்தால் எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விழும் நிலையில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து மின் கம்பம்த்தை அகற்றி புதிய மின் கம்பம் அமைக்க வேண்டும். -பொதுமக்கள், சீதிகானஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 July 2022 4:21 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#1739

பாழடைந்த சுகாதார வளாகம்

பாழடைந்த சுகாதார வளாகம்மற்றவை

தா்மபுாி மாவட்டம் ஏரியூர் அருகே ராமகொண்ட அள்ளியில் கட்டி முடிக்கப்பட்டு 15 ஆண்டுகளாகியும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வராமலேயே பாழடைந்த மகளிர் சுகாதார வளாகம் உள்ளது. இந்த வளாகத்தின் அருகிலேயே குப்பைகளை கொட்டி தீ வைத்து எரிக்கின்றனர். இதன் காரணமாக இந்த கட்டிடம் அதிக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாரீசன், ராமகொண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick