Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
15 July 2022 5:33 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#1952

வீணாகும் குடிநீர்

வீணாகும் குடிநீர்தண்ணீர்

நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஒன்றியம் எஸ்.வாழவந்தி வடக்கு தெருவில் உள்ள கிணற்றில் இருந்து குடிநீர்தொட்டிக்கு குழாய் மூலம் தண்ணீர் செல்கிறது. தற்போது குடிநீர்குழாய் உடைந்து 2 மாதமாக அதிகளவில் தண்ணீர் கிணற்றுக்குள் வீணாக செல்கிறது. இதனால் குடிநீர் தொட்டிக்கு தண்ணீர்செல்வதும் குறைந்து பொதுமக்கள் குடிநீர் இன்றி தவிக்கின்றனர். இதற்கு விரைவில் நடவடிக்கை எடுத்தால் தண்ணீர் வீணாவதை தவிர்க்கலாம். -வீரன், எஸ்.வாழவந்தி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 July 2022 5:30 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#1951

நோய் பரவும் அபாயம்

குப்பை

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையை அடுத்த தொப்பப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட வேலம்பாளையம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. அந்த பள்ளி எதிரே நோய்தொற்று ஏற்படும் வகையில் கழிவு பொருட்கள் பள்ளி வளாகத்துக்கு எதிரிரே தேங்கி கிடக்கின்றன. துர்நாற்றம் அதிகம் வீசுகிறது. மாணவர்களின் நலன்கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -.ரகோதரபாண்டியன், தொப்பப்பட்டி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 July 2022 5:29 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#1950

ஆபத்தான செல்பி

ஆபத்தான செல்பிமற்றவை

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக்கு சுற்றுலா செல்பவர்கள் பல்வேறு இடங்களில் செல்பி எடுத்து மகிழ்கின்றனர். அதேபோல அடிவாரத்தில் இருந்து மலைக்கு செல்ல 70 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து செல்ல வேண்டும். அவ்வாறு மலைச்சாலை வளைவுகளில் செல்லும்போது சிலர்் ஆர்வ மிகுதியால் ஆபத்தை உணராமல் தடுப்பு சுவரின் ஓரமான பகுதிக்கு சென்று செல்பி எடுக்கின்றனர். எனவே கொல்லிமலை சாலையில் அபாய பகுதியில் செல்பி எடுப்பதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். -முரளி, கொல்லிமலை, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 July 2022 4:41 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#1944

குடிநீர் பிரச்சினை

தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த கெரகோடஅள்ளி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த கிராமத்தில் போதிய அளவு குடிநீர் வினியோகம் முறையாக செய்யப்படுவதில்லை. இதுபற்றி பல முறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் முறையான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். -சொக்கலிங்கம், கெரகோடஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 July 2022 4:40 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#1942

ஆக்கிரமிக்கப்பட்ட குடிநீர்தொட்டி

ஆக்கிரமிக்கப்பட்ட குடிநீர்தொட்டிதண்ணீர்

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள மஞ்சாரஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட செல்லமுடி பஸ் நிறுத்தத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. அந்த பொது குடிநீர் தொட்டி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள், பொதுமக்கள் குடிநீர் இன்றி அவதிப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை அகற்றி குடிநீர் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். -சிவா, மஞ்சாரஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 July 2022 4:38 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#1940

செடி, கொடிகள் அகற்றப்படுமா?

குப்பை

தர்மபுரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த சந்தாபுரம் ஊராட்சி 4-வது வார்டுக்கு உட்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு பகுதி, தெருக்கள், விளையாட்டு மைதானம், மசூதி சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து புதர்போல் காட்சி அளிக்கிறது. இதனால் விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. மேலும் குப்பைகளும், கழிவு நீர்யும் தேங்கி நிற்கிறது. சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து அந்த பகுதியை தூய்மையாக வைக்க செய்ய வேண்டும். -மகேந்திரன், சந்தாபுரம், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 July 2022 4:34 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#1935

வீணாகும் குடிநீர்

வீணாகும் குடிநீர்தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட பூதநத்தம் கிராமத்தில் பொம்மிடி-அரூர் பிரிவு ரோட்டில் வாணியாறு அணையில் இருந்து கோபாலபுரம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு குழாய் மூலம் தண்ணீர் செல்கிறது. பல மாதங்களாக இந்த குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறிக் கொண்டிருக்கிறது. இது குறித்து அதிகாரிகள் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாயை சரிசெய்தால் தண்ணீர் வீணாவதை தவிர்க்கலாம். -மாது, மோளையானூர், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 July 2022 4:32 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#1933

சுகாதார சீர்கேடு

மற்றவை

கிருஷ்ணகிரியில் திருவண்ணாமலை சாலை அக்ரகாரம் முல்லை நகர் பகுதியில் பன்றிகள் அதிகளவில் உள்ளன. பன்றிகள் சாக்கடை கழிவுகளை கிளரி விடுவதால் துர்நாற்றம் அதிகம் வீசுகிறது. மேலும் பொதுமக்களுக்கு தொல்லையாக இருப்பதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. நடவடிக்கை எடுத்து பன்றிகளை அப்புறப்படுத்த வேண்டும். -முகேஷ், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 July 2022 4:31 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#1932

குரங்குகள் தொல்லை

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் தேர்பேட்டை சாலைடீச்சர்ஸ் காலனியில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. கூட்டம் கூட்டமாக அந்த பகுதி வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை எடுத்து செல்கின்றன. மேலும் மின்சார வயர்களிலும், கேபிள் வயர்களிலும் ஆபத்தான முறையில் தொங்குகின்றன. எனவே அட்டகாசம் செய்து வரும் குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும். -கிருஷ்ணன், தேன்கனிக்கோட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 July 2022 4:28 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#1929

சாலைகள் சீரமைக்கப்படுமா?

சாலை

ராயக்கோட்டையை அடுத்த முத்தம்பட்டியில் இருந்து பிரிந்து திம்ஜேப்பள்ளி, சொரகுறுக்கை, பாளையம் போகும் தார்சாலை திம்ஜேப்பள்ளியிலிருந்து தர்மபுரி மாவட்ட எல்லைவரை உள்ள தார்சாலை சேதமடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக மோசமாக காட்சி அளிக்கிறது. இந்த சாலையில் நகர பஸ்கள், தினந்தோறும் பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுதொடர்பாக பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தார்சாலையை புதுப்பிக்க முன் வருவார்களா? -மணி, பாளையம், கிருஷ்ணகிரி.ஓசூர் மாநகராட்சி...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 July 2022 4:15 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#1917

எலும்பு கூடான டிரான்ஸ்பார்மர்

எலும்பு கூடான டிரான்ஸ்பார்மர்மின்சாரம்

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே சிலேப்பள்ளி கிராமத்தில் டிரான்ஸ்பார்மர் அமைத்து பல ஆண்டுகள் ஆகிறது. இந்தநிலையில் மின் கம்பங்களில் இருந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிந்து எலும்புக்கூடாக காட்சியளிக்கிறது. இதனால் பலத்த காற்று வீசும்போது டிரான்ஸ்பார்மர் அங்கும் இங்குமாக ஆடுவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். எலும்புக்கூடாக உள்ள டிரான்ஸ்மார்பாரை அகற்றி புதிய டிரான்ஸ்பார்மார் அமைக்க வேண்டும். -நிலவன், சிலேப்பள்ளி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 July 2022 5:19 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#1768

சாலையோரத்தில் குழந்தைகள் மையம்

சாலையோரத்தில் குழந்தைகள் மையம்மற்றவை

மேச்சேரி-பென்னாகரம் ஒகேனக்கல் மெயின் ரோட்டில் திப்பரத்தாம்பட்டி பகுதியில் 30 குழந்தைகளுடன் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. மையத்தின் அருகே உள்ள சாலையானது போக்குவரத்து அதிகம் உள்ள பரபரப்பான சாலை ஆகும். மையத்திற்கு சுற்றுச்சுவர் இல்லாததால் வெட்ட வெளியில் உள்ளதால் குழந்தைகள் மெயின் ரோட்டிற்கு வரும் சூழ்நிலை உள்ளது. இதனால் விபத்து ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது. மேலும் மாலை நேரங்களில் மதுபிரியர்களின் கூடாரமாக மாறி உள்ளது. குழந்தைகள் பாதுகாப்பு கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அங்கன்வாடி...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick