Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
24 July 2022 4:15 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#3767

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மிகவும் குறுகலான சாலைகளாக உள்ளன. ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் ஏராளமான பள்ளி, கல்லூரி உள்ளதால் ஏராளமான வாகனங்கள் ராசிபுரம் வழியாக சென்று வருகின்றன. இதனால் ஆத்தூர் சாலையில் பெரும்பாலான நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் ஒருவழி பாதையிலும் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. காலை மாலை நேரங்களில் நூற்றுக்கணக்கான பள்ளி கல்லூரி வாகனங்கள் சென்று வருகிறது. எனவே அந்த நேரங்களில் போக்குவரத்து பிரிவு போலீசார்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 July 2022 4:13 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#3764

மயான வசதி

மற்றவை

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே அலங்காநத்தம் பிரிவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு மயான வசதி இல்லாததால் சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் நாமக்கல்லில் உள்ள எரிவாயு தகன மேடைக்கு இறந்தவர்களின் உடல்களை கொண்டு செல்லும் நிலை உள்ளது. எனவே பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மாவட்ட நிர்வாகம் அலங்காநத்தம் பிரிவு பகுதியில் மயான வசதி செய்து கொடுக்க வேண்டும். -கோபால், எருமப்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 July 2022 4:11 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#3763

இருக்கைகள் அமைக்க வேண்டும்

மற்றவை

சேலம் அஸ்தம்பட்டி மண்டல அலுவலகத்தில் வரி பணம் செலுத்த வரும் மக்கள் அமரும் இருக்கைகள் உடைந்தும், துருப்பிடித்தும் காணப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் இருக்கை வசதி இல்லாமல் சிரமப்படுகின்றனர். அதுவும் முதியவர்களின் நிலை சொல்லி மாளாது. எனவே அஸ்தம்பட்டி மண்டல அலுவலகத்தில் சேதமடைந்த இருக்கைகளை உடனே சீரமைக்க வேண்டும். இல்லையென்றால் அங்கு புதிய இருக்கைகள் அமைக்க வேண்டும். -செல்வன், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 July 2022 4:10 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#3762

பயணிகள் நிழற்கூடம்

மற்றவை

சேலம் ஏற்காடு சாலையில் சின்னகொல்லப்பட்டியில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இதற்கு அருகில் பஸ் நிறுத்தம் உள்ளது. அங்கு பயணிகள் நிழற்கூடம் இல்லை. இதனால் சுகாதார நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் மிகவும் அவதியடைகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி இங்கு பயணிகள் நிழற்கூடம் அமைத்து தர வேண்டும். -மஹமூத், சின்னகொல்லப்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 July 2022 4:02 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#3758

திறப்பு விழா காணாத குடிநீர் மையம்

தண்ணீர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பஸ் நிலையத்தில் பயணிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2018-2019-ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை அதனை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை. இதனால் பஸ் நிலையத்துக்கு வரும் பொதுமக்கள் குடிநீருக்காக அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பயணிகளின் நலன் கருதி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தை திறந்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 July 2022 4:00 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#3757

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் தர்மபுரி சாலை, திருப்பத்தூர் சாலை, கல்லாவி சாலை, காவேரிப்பட்டணம் சாலை, சந்தூர் சாலை ஆகிய 5 சாலைகளிலும் இருபுறமும் ஏராளமானவர்கள் கடைகள் வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் சிப்காட் பகுதிக்கு காலை, மாலை நேரங்களில் வரும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி காலை மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் போக்குவரத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜ், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 July 2022 3:59 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#3756

ஆபத்தான அங்கன்வாடி மையம்

மற்றவை

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உராமகொண்ட அள்ளி ஊராட்சி புதுச்சோளபாடியில் அங்கன்வாடி மையம் மிகவும் பழுதடைந்து உள்ளது. இந்த மையத்தில் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். அந்த கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விடும் நிலையில் உள்ளது. எனவே ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடக்கும் முன் அதிகாரிகள் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். -அன்பு, ஏரியூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 July 2022 3:58 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#3755

பயன்பாடு இல்லாத குடிநீர் தொட்டி

தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் எர்ரனஅள்ளி ஊராட்சி தளவாய் அள்ளி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள மினி குடிநீர் தொட்டி ஒரு வருடத்திற்கும் மேலாக பழுதாகி பயன்பாடு இல்லாமல் காட்சி பொருளாக உள்ளது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் குடிநீருக்காக அவதிப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த குடிநீர் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். -சதீஷ், எர்ரனஅள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 July 2022 3:56 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#3753

ஆபத்தான சாக்கடை கால்வாய்

கழிவுநீர்

தர்மபுரி நகரில் பிடமனேரி ரோடு -அப்பாவு நகர் பிரிவு சாலையில் மாவட்ட விளையாட்டு அரங்கு அருகில் ஆபத்தான நிலையில் சாக்கடை கால்வாய் உள்ளது. இரு சாலைகள் சந்திக்கும் இந்த பகுதியில் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கடந்து செல்கிறார்கள். ஆபத்தான நிலையில் உள்ள இந்த சாக்கடை கால்வாயில் அடிக்கடி இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே இந்த சாக்கடை கால்வாயை மூடி வைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கந்தசாமி, அப்பாவு நகர், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 July 2022 3:53 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#3750

இருளில் மூழ்கிய பிரதான சாலை

மின்சாரம்

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ரோட்டில் வங்கிகள், வணிக வளாகங்கள், பிரபல கடைகள் செயல்பட்டு வருகின்றன. இரவு நேரங்களில் மின்விளக்குகள் எரியாததால் இந்த பிரதான சாலை இருளில் மூழ்கி கிடக்கிறது. வெளியூர்களில் இருந்து வரும் அனைத்து பஸ்களும் இந்த சாலை வழியாகத்தான் பஸ் நிலையம் செல்கிறது. எப்போதும் பரபரப்பாக செயல்படும் இந்த சாலையில் ஒருசில மின்கம்பங்களில் மின் விளக்குகளே இல்லாத நிலையில் உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே நகராட்சி நிர்வாகம் இந்த பிரதான சாலையில் போதுமான மின்விளக்குகளை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 July 2022 3:52 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#3748

பஸ் நிறுத்தம் தேவை

போக்குவரத்து

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர்- திருப்பத்தூர் சாலை, மத்தூர்- தர்மபுரி சாலை மற்றும் ஊத்தங்கரை செல்லும் சாலைகளில் ஆங்காங்கே ஏராளமான ஊர்கள் உள்ளன. இந்த ஊர்களில் பஸ்கள் நின்று செல்கின்றன. ஆனால் பஸ் நிறுத்தம் இல்லை. எனவே மாணவ- மாணவிகள் உள்பட அனைத்து தரப்பினரும் வெயிலுக்கும், மழைக்கும் கூட ஒதுங்க முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் பஸ் நிறுத்தங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். - கண்ணன், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 July 2022 3:51 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#3746

இடிந்து விழும் நிலையில் அரசு குடியிருப்பு

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் காமராஜ் காலனியில் ஆர்.வி.அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம் அருகில் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சொந்தமான பழைய குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்பு கட்டிடங்கள் நீண்டகாலமாக காலியாகவும், இடிந்துவிழும் நிலையிலும் மோசமாக காட்சி அளிக்கின்றன. இவற்றை சீரமைத்தோ அல்லது இடித்துவிட்டு புதிய கட்டிடங்களை கட்டியோ அரசுக்கு வருவாய் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும். - பாபு, ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick