Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
25 July 2022 4:01 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#3996

தபால் அலுவலகத்தில் கூடுதல் ஊழியர்கள்

மற்றவை

எருமப்பட்டி பஸ் நிலையம் அருகே தபால் அலுவலகத்தில் ஆதார் அட்டை பதிவு செய்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகளுக்கு போதிய ஆட்கள் இல்லாததால் காலை 9 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பணிகள் நடைபெற்று வருகிறது. முன்கூட்டியே வந்து டோக்கன் வாங்கிய நபர்களுக்கு மட்டுமே பதிவு செய்யப்படுகிறது. இதனால் தபால் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் பதிவு செய்ய முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். எனவே அஞ்சல் துறை சார்பில் ஊழியரை நியமித்து காலை முதல் மாலை வரை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 July 2022 3:53 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#3994

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் பெரிய மாரியம்மன் கோவில் நுழைவுவாயில் பகுதியில் சமீபகாலமாக தெருநாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. அந்த வழியாக நடந்து மற்றும் இருசக்கரவ வாகனங்களில் செல்பவர்களை தெருநாய்கள் துரத்தி சென்று கடிக்கும் சம்பவங்கள் நடந்துள்ளன. இதனால் பெரிய மாரியம்மன் கோவில் வழியாக செல்ல பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே பொதுமக்கள் நலன்கருதி தெருநாய்களை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராம், சேந்தமங்கலம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 July 2022 3:47 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#3991

பெயர் பலகை வேண்டும்

மற்றவை

சேலம் மரவனேரி கோர்ட் ரோடு பகுதியில் சலாம் காலனி, காந்திநகர் பகுதியில் உள்ள 6 தெருக்கள் பெயர்கள் இல்லாமல் உள்ளது. ஸ்மார்ட் சிட்டியின் மூலம் சேலத்தில் அனைத்து தெருக்களுக்கும் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. மரவனேரி பகுதியில் மட்டும் நீண்ட நாட்களாக பெயர் பலகை வைக்கப்படவில்லை. இ‌‌ங்கு புதிதாக வரும் தபால்காரர் மற்றும் பொதுமக்கள் தெரு பெயர் தெரியாமல் சிரமப்படுகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பெயர் பலகை அமைக்க வேண்டும். -சுரேஷ், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 July 2022 3:46 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#3990

விபத்து ஏற்படும் அபாயம்

மற்றவை

சேலம் மாவட்டம் கொளத்தூர் ஊராட்சி மேட்டூர் முதல் மாதேஸ்வரன் மலை செல்லும் நெடுஞ்சாலையில் கொளத்தூர் சோதனை சாவடியை அடுத்து 100 மீட்டர் தொலைவில் சாலை வளைவில் பாதுகாப்பு வேலி அருகில் பள்ளம் உள்ளது. வாகன ஓட்டிகள் இதன் அருகில் செல்லும்போது எந்த நேரத்திலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இதனை சரி செய்ய வேண்டும். -சி.சென்ன கிருஷ்ணன், சிங்கிரிபட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 July 2022 3:44 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#3988

அதிக வேகம் ஆபத்து

போக்குவரத்து

சேலம் மாநகரில் ஓடும் ஷேர் ஆட்டோக்கள் அதிவேகமாக ெசல்கின்றன. குறிப்பாக அம்மாபேட்டையில் இருந்து வரும் ஷேர் ஆட்டோக்கள் அதிவேகமாக வருவதால் அந்த பகுதியில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து விபத்துகள் ஏற்படாமல் தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். -நாராயணன், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 July 2022 3:42 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#3987

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் அகசிப்பள்ளி தேவசமுத்திரம் பஞ்சாயத்து முல்லை நகர் அக்ரகாரம் பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை அதிக அளவு உள்ளது. சாலையில் செல்பவர்களை துரத்தி துரத்தி கடிக்கிறது. இதனால் சாலையில் செல்லவே அந்த பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர். இந்த நாய்களுக்கு கருத்தடை செய்து தெருநாய் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ேவண்டும். -சுப்ரமணி, தேவசமுத்திரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 July 2022 3:38 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#3986

கால்வாய் அமைக்க கோரிக்கை

கழிவுநீர்

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் கீழ் வீதியில் 150-க்கும் மேற்பட்ட வீடுகளில் கழிப்பறை வசதி இல்லாமல் உள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அனைத்து வீடுகளிலும் கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஜீவன், மத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 July 2022 3:36 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#3985

கால்வாய் அமைக்க கோரிக்கை

கழிவுநீர்

ஓசூர் மாநகராட்சி 31-வது வார்டு உமாசங்கர் நகரில் சாலைகள் குறுகலாகவும், குண்டும், குழியுமாகவும் மோசமான நிலையில் உள்ளது. மேலும் கழிவுநீர் கால்வாய்களும் இல்லாததால் கழிவுநீர் சாலையில் வெளியேறி நடந்து செல்லவும் முடியாத நிலையில் உள்ளது. எனவே, உடனடியாக உமாசங்கர் நகரில் சாலைகளை சீரமைத்தும், கழிவுநீர் கால்வாய்களை அமைத்து தரவும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சேகர், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 July 2022 3:33 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#3982

எரியாத தெருவிளக்கு

மின்சாரம்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி 11-வது வார்டு தீர்த்தகிரி நகரில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பழுதான தெரு விளக்கு மாற்றப்பட்டது. தற்போது இந்த தெருவிளக்கு எரியவில்லை. இதனால் அந்த பகுதி இருளில் மூழ்கியுள்ளது. அந்த பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைகின்றனர். எனவே உடனடியாக மின் விளக்கு எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராகேஷ், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 July 2022 3:31 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#3981

முட்புதர்களை அகற்ற வேண்டும்

முட்புதர்களை அகற்ற வேண்டும்மற்றவை

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியம் அண்ணாமலைஅள்ளி ஊராட்சியில் பாலக்கோடு மெயின் ரோட்டில் இருபுறமும் முட்புதர்கள் காணப்படுகிறது. இந்த பகுதிக்கு பள்ளி வாகனங்கள் காலை, மாலை இருவேளையும் வந்து செல்கின்றன. அப்போது வாகனங்கள் எதிர் எதிரே வரும்போது ஒதுங்க போதிய இடவசதி இல்லை. எனவே அதிகாரிகள் முட்புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -வெங்கடேசன், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 July 2022 3:28 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#3980

வழித்தடம் இல்லாத அரசு பள்ளி

சாலை

ஏரியூர் அருகே பத்திரஅள்ளி ஊராட்சி பூச்சூரில் அரசு உயர்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு செல்லும் வழி மிகவும் கரடுமுரடாக உள்ளது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்களும், பொதுமக்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து முறையான சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.. - சிவா, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 July 2022 4:17 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#3768

பொது கழிப்பிடம் பராமரிக்கப்படுமா?

மற்றவை

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியம் செம்மாண்டப்பட்டி பகுதியில் தேவேந்திரர் தெருவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக பொது கழிப்பிடம் கட்டப்பட்டது. இந்த பொது கழிப்பிடம் உரிய பராமரிப்பின்றி பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன்கருதி பொது கழிப்பிடத்தை பராமரித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். -யோகேஷ், வெண்ணந்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick