Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
26 July 2022 5:48 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#4285

வேகத்தடை அமைக்கப்படுமா?

சாலை

சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த வனவாசி பகுதியில் பள்ளி மற்றும் கல்லூரி செயல்பட்டு வருகிறது. மேலும் வனவாசி பஸ் நிறுத்தத்தில் அதிக அளவில் கடைகளும் உள்ளன. இதனால் அந்த பகுதி வாகனங்கள் நிறைந்த சாலையாக காணப்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் சாலையை கடக்கும்போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே நங்கவள்ளி-ஜலகண்டாபுரம் சாலையில் வனவாசி மேல்ரோட்டில் வேகத்தடை அமைக்க வேண்டும். -அர்ஜூன், வனவாசி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2022 5:47 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#4284

சாலையில் தேங்கும் கழிவுநீர்

கழிவுநீர்

சேலம் தாதகாப்பட்டி 50-வது வார்டு காளியம்மன் கோவில் தெருவில் சாலையில் கழிவுநீர் தேங்கி உள்ளது. மேலும் அந்த சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இது குறித்து பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அங்கு சாலையில் கழிவுநீர் தேங்காதபடி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -ராஜா, தாதகாப்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2022 5:44 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#4281

சாலையை சீரமைக்க வேண்டும்

சாலை

நாமக்கல்லில் இருந்து மோகனூர் செல்லும் சாலையில் ஏரிக்கரை அருகே சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. வளைவு பகுதியில் சாலை பள்ளமாக உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தவறி கீழே விழுவதை காண முடிகிறது. எனவே அந்த இடத்தில் சாலையை சீரமைக்க வேண்டும். ‌ -சசி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2022 5:42 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#4279

சேதமடைந்த மின்கம்பம்

மின்சாரம்

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே குமாரபாளையம் காவிரி ஆற்றுக்கு செல்லும் வழியில் மின்கம்பம் சேதமடைந்து உள்ளது. அந்த மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து ஆபத்தான நிலையில் காட்சி அளிக்கிறது. வேகமாக காற்று அடித்தால் கூட விழுந்துவிடும் நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் அமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ராமசாமி,பாலப்பட்டி,

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2022 5:41 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#4278

ரோந்து வாகனம் இயக்கப்படுமா?

மற்றவை

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் இருந்து அடிவார பகுதிக்கு மலைவாழ் மக்கள் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்ய அதிகளவில் வருகின்றனர். மேலும் கொல்லிமலையை சுற்றி பார்க்க சுற்றுலா பயணிகளும் அடிவார பாதை வழியாக சென்று வருகின்றனர். இந்தநிலையில் மலைப்பாதையில் விபத்துகள் ஏற்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட துறைக்கு தகவல் தெரிவிக்க முடியாத நிலை உள்ளது. எனவே பொதுமக்களி்ன் பாதுகாப்பு கருதி மலைப்பகுதியில் ரோந்து வாகனம் இயக்க நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும். -ஜெயா, கொல்லிமலை, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2022 5:39 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#4277

நோய் பரவும் அபாயம்

மற்றவை

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே அத்திபலகானூர் கிராமத்தையொட்டி கோழிப்பண்ணை உள்ளது. கோழிப்பண்ணையில் இருந்து வரும் ஈக்கள் அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்குள் படையெடுப்பதுடன், உணவு, தண்ணீர் ஆகியவற்றில் விழுகின்றன. இதனால் இந்த பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி அதிகாரிகள் தனிக்கவனம் செலுத்தி கோழிப்பண்ணையில் இருந்து வரும் ஈக்களை கட்டுப்படுத்த வேண்டும். -முனியப்ப தேவேந்திரன், அத்திபலகானூர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2022 5:34 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#4275

கழிவுநீர் கால்வாய் வேண்டும்

கழிவுநீர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை ராஜீவ் காந்திநகரின் ஒரு பகுதியில் மட்டும் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து வரும் கழிவுநீர் மற்ற தெருக்களின் வழியாக செல்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே மற்ற தெருக்களுக்கும் கழிவுநீர் கால்வாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -நரசிம்மன், ராஜீவ் காந்திநகர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2022 5:33 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#4274

பூங்கா அமைக்கப்படுமா?

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பஸ் நிலையத்தையொட்டி நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடம் உள்ளது. அரசு அலுவலர்கள், பயணிகள், பொதுமக்கள் என பலரும் பஸ் நிலையத்தில் நீண்ட நேரம் பஸ்சுக்காக காத்திருக்கிறார்கள். எனவே பஸ் நிலையத்தையொட்டி உள்ள நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் பூங்கா அமைக்கப்பட்டால் பயணிகளுக்கு பொழுது போக்க ஏதுவாக இருக்கும். மேலும் சுற்றுச்சூழலுக்கும் நகரின் வளர்ச்சிக்கும் உகந்ததாக இருக்கும். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அங்கு பூங்கா அமைக்கப்படுமா? -பன்னீர், மத்தூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2022 5:32 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#4273

வேகத்தடை இல்லாததால் விபத்து அபாயம்

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி பகுதியில் கடந்த சில நாட்களாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இருசக்கர வாகன ஓட்டிகள் அதிவேகமாக செல்வதால் அவ்வப்போது பொதுமக்கள் மீது மோதி படுகாயம் அடைந்து விபத்துகள் நடக்கின்றன. இதை தடுக்கும் வகையில் காந்தி சிலை, போலீஸ் நிலையம் முன்பு, குப்பம், கொங்கணப்பள்ளி ஜங்ஷன் செல்லும் சாலை, புதிய பஸ் நிலையம் செல்லும் சாலை, சார்பதிவாளர் அலுவலகம் செல்லும் சாலை ஆகிய பகுதிகளில் வேகத்தடைகள் அமைக்க வேண்டும். -பிரசாந்த், வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2022 5:29 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#4272

சேதமடைந்த பாலம்

சாலை

ஓசூர் பகுதியில் உள்ள தேன்கனிக்கோட்டை சாலையின் குறுக்கே நா.கொண்டபள்ளி ஏரி அருகே 3 ஆண்டுகளுக்கு முன்பு தரைப்பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலம் சேதமடைந்து தரைப்பால சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன. எனவே போர்க்கால அடிப்படையில் பாலத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கே.சாக்கப்பா, இடையநல்லூர், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2022 5:27 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#4271

தெருவிளக்கு வேண்டும்

மின்சாரம்

தர்மபுரி 16-வது வார்டில் திருமண மண்டபம் அருகே சாலையில் இருந்த தெருவிளக்கை அகற்றிவிட்டதால் அங்கு இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பள்ளி குழந்தைகள், பெண்கள், நடைப்பயிற்சி செல்பவர்கள் அச்சப்படுகிறார்கள். மேலும் இந்த பகுதியில் மர்ம நபர்களின் நடமாட்டம் அதிகரித்துவிட்டது. பொதுமக்கள் பாதுகாப்பு கருதி அந்த பகுதியில் மீண்டும் தெருவிளக்கு அமைக்க வேண்டும். -மகேந்திரன், குமாரசாமிபேட்டை, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2022 4:59 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#4265

சுகாதார சீர்கேடு

சுகாதார சீர்கேடுகுப்பை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி பகுதியில் செல்லும், சனத்குமார் நதியில் தினமும் கெட்டுப்போன இறைச்சி கழிவுகள், குப்பை கழிவுப்பொருட்களை கொட்டுகின்றனர். இதனால் அங்கு துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் நோய் பரவும் அபாயம் உள்ளதால் பேரூராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -பாலா, பாலக்கோடு, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick