Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
27 July 2022 5:45 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#4500

பாதியில் நிற்கும் சாலை பணி

சாலை

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சி 3-வது வார்டு பாரதிநகரில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சாலைகள் போடுவதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கியது.. முதல் கட்டமாக ஜல்லி கற்கள் பரப்பப்பட்டன. 6 மாதங்களாக சாலைகள் புதுப்பிக்கப்படாமல் இருப்பதால் இரவு நேரங்களில் அப்பகுதி மக்கள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் வாகனங்கள் செல்வதற்கு மிகவும் கடினமான சூழ்நிலை உள்ளது. எனவே பாரதி நகரில் பாதியில் நிற்கும் சாலைப்பணியை விரைந்து முடிக்க வேண்டும். -முகிலன், ராசிபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2022 5:43 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#4499

பேனர்களை அகற்றலாமே!

மற்றவை

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பஸ் நிலைய நால்ரோடு மற்றும் நகரின் பல்வேறு இடங்களில் இறப்பு, பிறந்தநாள் குறித்த பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். நீண்ட நாட்கள் ஆகியும் அந்த பேனர்கள் எடுக்கப்படாமல் அப்படியே உள்ளது. ஏதும் அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாணிக்கம், பள்ளிபாளையம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2022 4:13 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#4475

வாகன ஓட்டிகள் அவதி

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பழைய பெங்களூரு சாலை அருகே வாசவி தெருவில் வங்கிகள், ஏராளமான வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள் உள்ளன. இதனால் இந்த பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகளவில் இருந்து வருகிறது. ஆனால் இங்குள்ள சாலை குண்டும், குழியுமாகவும், மழைக்காலங்களில் மழைநீர்் தேங்கியும் நிற்கிறது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்லவும், வாகனங்கள் தட்டுத்தடுமாறியும் செல்கின்றன. இந்த சாலையில் பயணிக்கவே வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2022 4:06 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#4473

குண்டும், குழியுமான சாலைகள்

குண்டும், குழியுமான சாலைகள்சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஜெகதேவி ரோட்டில் இருந்து அச்சமங்கலம் செல்லும் தார்சாலை பராமரிப்பு இல்லாமல் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கியும், சேரும் சகதியுமாக உள்ளது. இந்த சாலையில் அச்சமங்கலம், மிட்டப்பள்ளி, பாலினநாயனப்பள்ளி, ராசிபள்ளி, ஏ-கொல்லப்பட்டி ஆகிய கிராம பகுதிகளிலிருந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அடிக்கடி விபத்துக்களும் ஏற்படுகின்றன. சாலையை புதுப்பிக்க நடவடிக்கை எடுப்பார்களா? ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2022 4:00 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#4472

கழிவுநீர் கால்வாய் ஆக்கிரமிப்பு

கழிவுநீர்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் போலீஸ் நிலையத்தில் இருந்து திருப்பத்தூர் கூட்ரோடு வரை சாலையின் இருபுறமும் கழிவுநீர் கால்வாயை ஆக்கிரமித்து அதன்மீது கடைகளும், கால்வாயின் மீது சிமெண்டு தரைதளம் அமைத்தும் அடைத்துவிட்டனர். இதனால் மழைக்காலங்களில் மழைநீர் செல்ல வழி இல்லாமல் சாலையில் மழைநீருடன், கழிவுநீர் கலந்து தேங்கி நிற்கிறது. இதனால் சாலையில் செல்லும் வாகனங்கள் சிரமத்தோடு செல்கின்றன. எனவே கழிவுநீர் கால்வாய் மீது அமைத்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். -பிரபாகரன்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2022 3:58 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#4471

சாலை அமைப்பார்களா?

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேகாரகுப்பம் கிராமத்தில் இருந்து எமக்கல்நத்தம் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் அந்த சாலையோரம் செடி, கொடிகள் வளர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே தார்சாலை அமைத்து, சாலையின் இருபுறங்களிலும் உள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டும். -நடராஜன், பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2022 3:52 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#4470

சுகாதார சீர்கேடு

குப்பை

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே சின்னம்பள்ளி பகுதியில் சாலை ஓரம் கொட்டப்படும் காய்கறி கழிவுகளால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே சாலையோரம் காய்கறி கழிவுகளை கொட்டுவதை தடுக்க வேண்டும். -மணிமாறன், சின்னம்பள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2022 3:44 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#4464

நோய் பரவும் அபாயம்

மற்றவை

தர்மபுரி மாவட்டம் பெரும்பாலையில் பஸ் நிலையம், கடைவீதி, சந்தை மற்றும் அரசு மருத்துவமனை ஆகிய பகுதிகளில் சாலையில் ஆங்காங்கே சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார கேடும், நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே அந்த பகுதியில் கழிவுநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். -காமராஜ், பெரும்பாளையம், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2022 3:40 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#4460

தூர்வார வேண்டிய கால்வாய்

தூர்வார வேண்டிய கால்வாய்மற்றவை

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பேரூராட்சி 7-வது வார்டுக்கு உட்பட்ட மண்ணுடையார் தெருவில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை பிடித்துகொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. சுகாதார சீர்கேடு ஏற்படுவதை தடுத்திட கழிவுநீர் கால்வாயை தூர்வார பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கவுதமன், பாப்பாரப்பட்டி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2022 3:38 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#4458

ஜல்லிகற்கள் பெயர்ந்த சாலை

ஜல்லிகற்கள் பெயர்ந்த சாலைசாலை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியம் மோதுகுலஅள்ளிகிராமம் முதல் கரகத அள்ளி அருந்ததியர் காலனி வரை சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் தார்சாலையில் ஜல்லிகற்கள் பெயர்ந்து மிகவும் மோசமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி பழுது ஏற்பட்டு நடுவழியிலேயே நிற்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து தார்சாலை அமைக்க வேண்டும். - ரவி, பாலக்கோடு

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2022 5:53 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#4288

குடிநீர் வசதி தேவை

குடிநீர் வசதி தேவைதண்ணீர்

சேலம் டவுன் ெரயில் நிலையத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள். பயணிகளின் வசதிக்காக அங்கு 5-க்கும் மேற்பட்ட குடிநீர் குழாய்கள் உள்ளன. இந்த நிலையில் அங்குள்ள குடிநீர் குழாய்கள் பெரும்பாலும் சேதம் அடைந்து காணப்படுகின்றன. இதனால் பயணிகள் குடிநீருக்கு அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சேதம் அடைந்த குடிநீர் குழாய்களை சீரமைத்து பயணிகளின் தாகத்தை தீர்க்க ெரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -யோகேஷ், பேர்லேண்ட்ஸ், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2022 5:49 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#4287

நிழற்கூடம் சீரமைக்கப்படுமா?

மற்றவை

சேலம் மாநகராட்சி பொன்னம்மாபேட்டை கேட் அருகே பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த நிழற்கூடம் சேதமடைந்துள்ளதால் மழை மற்றும் வெயில் காலங்களில் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். பொதுமக்கள் நலன் கருதி அந்த நிழற்கூடத்தை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவார்களா? -ராஜன், பொன்னம்மாபேட்டை, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick