Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
4 Sep 2022 4:39 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#12841

குப்பை கழிவுகள் அகற்றப்படுமா?

குப்பை கழிவுகள் அகற்றப்படுமா?குப்பை

தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், மாவட்ட தீயணைப்பு அலுவலகம், அண்ணாநகர், கருவூல காலனி மற்றும் பிரசித்தி பெற்ற அருளீஸ்வரர் கோவில் போன்ற பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலையில் ஏராளமான குப்பை கழிவுகள் குவிந்து கிடக்கிறது. இதனால் இந்த சாலை வழியாக செல்வோர் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். குறிப்பாக அங்குள்ள கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகம் சுளிக்கும் நிலை ஏற்படுகிறது. அந்த குப்பைகளில் இருந்து வீசும் துர்நாற்றத்தால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குப்பை கழிவுகளை உடனடியாக அகற்ற ஊராட்சி...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Sep 2022 4:17 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#12832

சாக்கடை கால்வாயில் அடைப்பு

சாக்கடை கால்வாயில் அடைப்புகழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு கேசர் குளிரோடு மற்றும் அப்துல்லா சந்து இணைப்பு பகுதியில் சாக்கடை கால்வாய் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவுநீர் செல்லமுடியாமல் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகி தொல்லை அளித்து வருகிறது. தற்போது பெய்து வரும் மழையால் சாக்கடை கால்வாய் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் மழைநீரும் சாக்கடை நீரும் கலந்து வீட்டுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக சாக்கடை கால்வாய் அடைப்பை சரி செய்ய...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Sep 2022 4:16 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#12831

கழிவுநீர் கால்வாய் தேவை

கழிவுநீர் கால்வாய் தேவைகழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சி 2-வது வார்டு இ.பி. காலனி கோட்டை மாரியம்மன் கோவில் அருகே சுமார் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் இல்லாததால் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் தெருக்களில் தேங்கி நிற்கிறது. அதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. பொது மக்களின் நலன் கருதி உடனடியாக கழிவுநீர் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -செந்தில்குமார், மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Sep 2022 4:47 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#12439

ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கும்நீர்

தண்ணீர்

சேலம் ஜங்சன் ரெயில் நிலையம் அருகே போடிநாயக்கன்பட்டி ெரயில்வே சுரங்கப்பாதை சில வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இந்த சுரங்கப்பாதை வழியாக 4 கிராமத்தை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சுரங்கப்பாதையில் 24 மணி நேரமும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -வீரகுமார், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Sep 2022 4:46 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#12438

குண்டும் குழியுமான சாலை

சாலை

சேலம் மாவட்டம் ஒமலூர் தாலுகா ஆர்.சி.செட்டிப்பட்டியில் பஞ்சாயத்து தார்சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சேவியர், ஓமலூர், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Sep 2022 4:45 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#12437

சாலையில் தேங்கும் மழை நீர்

சாலை

சேலம் அழகாபுரம் பேர்லேண்டஸ் பகுதியில் கான்வென்ட் ரோட்டில் 2 பள்ளிகள் உள்ளன. தினமும் ஆயிரக்கணக்கான பள்ளி குழந்தைகள் இவ்வழியாக செல்கின்றனர். மழை காலங்களில் அடிக்கடி இந்த சாலை குண்டும் குழியுமாக மாறி தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் சாலையில் வாகனங்களில் செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். -தீபக்குமார், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Sep 2022 4:44 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#12436

சாக்கடை கால்வாய் வசதி

கழிவுநீர்

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பெருமாகவுண்டம்பட்டி சஞ்சீவிராய பெருமாள் கோவிலுக்கு எதிரே சவுடேஸ்வரி அம்மன் நகருக்கு செல்லும் சாலை சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் அந்த சாலையில் செல்லும் பொது மக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். சில சமயங்களில் விபத்துகளும் ஏற்படுகிறது. மேலும் சாக்கடை கால்வாய் வசதியும் இல்லை. எனவே அதிகாரிகள் இந்த சாலையை சீரமைத்து, சாக்கடை கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -வைஷிகாஸ்ரீ, பெருமாகவுண்டம்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Sep 2022 4:43 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#12435

குடியிருப்புகளுக்குள் புகுந்த சாக்கடைநீர்

கழிவுநீர்

நாமக்கல்லில் இருந்து வரும் கழிவு நீர் அனைத்தும் விசாணம் ரோட்டில் உள்ள வாய்க்கால் வழியாக சென்று வேட்டாம்பாடி ஏரியில் கலக்கிறது. இந்த பாதை தூர்வாரப்படாமல் இருப்பதால் சாக்கடை நீர் வயல்வெளியில் நிரம்பி குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுகிறது. இதுகுறித்து பல முறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இந்த பாதையை தூர்வாரி கழிவுநீர் முறையாக செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -விணோத், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Sep 2022 4:41 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#12434

சீரமைக்க வேண்டிய சாலை

சீரமைக்க வேண்டிய சாலைசாலை

நாமக்கல் மாவட்டம் நாமக்கலில் இருந்து சேந்தமங்கலம் செல்லும் ரயில்வே மேம்பாலம் முடிவில் விசாணம் பிரிவு ரோடு பஸ் நிறுத்தம் அருகே உள்ள சாலையில் ரெயில் நிலையத்தில் இருந்து சரக்கு வாகனம் அதிகமாக செல்வதால் தார் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. மழை காலத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Sep 2022 4:39 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#12433

'தினத்தந்தி'க்கு பாராட்டு

ட்ரெண்டிங்

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் பேரூராட்சி காளிப்பட்டி கிராமத்தில் கந்தசாமி கோவில் அருகில் ராஜாஜி தெருவில் மின்கம்பம் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் கீழேவிழும் அபாயத்தில் உள்ளது என 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதனை தொடர்ந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் புதிய மின் கம்பத்தை அமைத்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு உதவிய 'தினத்தந்தி'க்கும் அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர். -கணேசன், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Sep 2022 4:33 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#12429

சாலை பள்ளங்கள் மூடப்படுமா?

சாலை

தர்மபுரி நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இந்த பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் சரியாக மூடப்படவில்லை. இதனால் அந்த பள்ளங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த பள்ளங்களை உடனடியாக மூடி சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -நந்தகுமார், நெசவாளர் நகர், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Sep 2022 4:32 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#12428

பராமரிப்பு இல்லாத சுகாதார வளாகம்

மற்றவை

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஊராட்சி கோவிலூர் கிராமத்தில் பயன்பாட்டில் உள்ள ஒருங்கிணைந்த மகளிர் மற்றும் குழந்தைகள் சுகாதார வளாகத்தை சுற்றிலும் முட்புதர்கள் அதிகளவு வளர்ந்துள்ளது. இதனால் விஷப் பூச்சிகள், பாம்புகள் நடமாட்டம் உள்ளது. எனவே அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன் முட்புதர்களை அகற்ற வேண்டும். மேலும் பழுதான இரும்பு கதவுகளை சீரமைக்க வேண்டும். -பசுபதி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick