Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
2 Sep 2022 4:28 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#12423

பேவர் பிளாக் கற்கள் அமைக்க வேண்டும்

சாலை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தீர்த்தகிரிநகர் முனியப்பன் கோவில் தெருவில் குடிநீர் குழாய் பதிக்க கடந்த சில மாதங்களுக்கு முன் சாலையில் உள்ள பேவர் பிளாக் கற்களை அகற்றி பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் குடிநீர் குழாய் பதித்த பின் மீண்டும் பேவர் பிளாக் கற்கள் பதிக்கவில்லை. இதனால் இந்த சாலையில் செல்வோர் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே அதிகாரிகள் மீண்டும் பேவர் பிளாக் கற்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஜெயராஜ், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Sep 2022 4:27 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#12422

பூட்டியே கிடக்கும் சுகாதார நிலையம்

மற்றவை

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சாமனூரில் முதல் உதவி சிகிச்சைக்காக ஆரம்பிக்கப்பட்ட துணை சுகாதார நிலையம் பூட்டியே கிடக்கிறது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் அவசர சிகிச்சைக்காக 4 கி.மீ. தொலைவில் உள்ள மாரண்டஅள்ளி ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே இந்த துணை சுகாதார நிலையத்தை சீரமைத்து உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். -சதீஷ், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Sep 2022 4:25 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#12419

நோய் பரவும் அபாயம்

மற்றவை

ஓசூர் மாநகராட்சி 36-வது வார்டில் ஒரு திருமண மண்டபத்தின் பின்புறம் குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் அதிகமாக உள்ளது. எனவே இந்த குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ரமேஷ், விகாஸ் நகர், ஒசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Sep 2022 4:24 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#12418

தார்சாலை அமைக்கப்படுமா ?

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா தளியில் இருந்து காடு கெம்பத்தபள்ளி வரை 15-க்கும் மேற்பட்ட சிறிய கிராமங்கள் உள்ளன. இந்த பகுதிகளுக்கு செல்லும் தார் சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தார் சாலையாக அமைக்க வேண்டும். -ராஜேஷ், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Sep 2022 4:23 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#12417

ஆபத்தான பள்ளம்

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சமீபத்தில் பெய்த கனமழையால் பாகலூர் ரோடு சர்க்கிள், ஏ.வி.ஆர். நகைக்கடை பகுதி, பஸ் நிறுத்தம் அருகே உள்ள சாலையில் மிகப்பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே உடனடியாக இந்த பள்ளங்களை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராமச்சந்திரன், ஓசூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Sep 2022 4:22 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#12416

பஸ் நிறுத்தத்தில் மின்விளக்குகள்

மின்சாரம்

கிருஷ்ணகிரி மாவட்டம் பெலவர்த்தி பஞ்சாயத்து நாகமரத்துப்பள்ளம் பஸ் நிறுத்தத்தில் பல வருடங்களாக மின்விளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் பஸ் நிறுத்தத்திற்கு வரும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி அந்த பஸ் நிறுத்தத்தில் மின்விளக்குகள் அமைக்க வேண்டும். -திருப்பதி, நாகமரத்துப்பள்ளம், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Sep 2022 6:08 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#12245

பயன்பாட்டுக்கு வருமா? பொதுகழிப்பிடம்

மற்றவை

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா பிள்ளாநல்லூர் பேரூராட்சி 8-வது வார்டில் பொது கழிப்பிடம் உள்ளது. இந்த கழிப்பிடம் பராமரிப்பு பணிக்காக கடந்த 2 மாதங்களாக மூடப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் வசிப்போர் மிகவும் சிரமப்படுகின்றனர், எனவே இந்த கழிப்பிடத்தை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்காக கொண்டு வர வேண்டும். -கோபி, பிள்ளாநல்லூர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Sep 2022 6:07 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#12244

வீணாகும் வாகனங்கள்

மற்றவை

நாமக்கல் வெண்ணந்தூர் போலீஸ் நிலையத்தில் வாகன தணுக்கையின் போது பறிமுதல் செய்யபட்ட வாகனங்கள் வைக்கப்பட்டுள்ளன. இவை தற்போது வீணாகி வருகிறது. எனவே இந்த வாகனங்களை உகியவர்களிடம் ஒப்படைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Sep 2022 6:01 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#12243

குவிந்து கிடக்கும் வாகனங்கள்

மற்றவை

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் போலீசார் வாகன தணிக்கையின் போது பிடிபட்ட வாகனங்களை போலீஸ் நிலைய வளாகத்திற்குள் நிறுத்தி வைத்துள்ளனர். அவைகள் பல மாதங்களாக வெயில் மற்றும் மழையால் வீணாகி வருகிறது. எனவே இதனை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -நாதன், சேந்தமங்கலம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Sep 2022 5:56 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#12239

சேறும் சகதியுமான சாலை

சாலை

சேலம் வீரபாண்டி ஒன்றியம் மாரமங்கலத்துபட்டி மற்றும்அழகு சமுத்திரம் கிராமத்தில் முதியோர் ஓய்வூதியம், தேசிய ஊரக வேலைக்காக ஊதியம் வழங்கும் சேவை மையம், இரும்பாலை காந்திநகரில் உள்ளது. இந்த மையத்திற்கு செல்லும் சாலை சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் ஓய்வூதியம் வாங்க வரும் முதியோர்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். -வீராசாமி, இரும்பாலை, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Sep 2022 5:55 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#12238

சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?

கழிவுநீர்

சேலம் மாநகராட்சி 26-வது வார்டு அரிசிபாளையம் ராஜாகண்ணு தெருவில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அதிகாரிகள் இந்த சாக்கடை கால்வாயை தூர்வார விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். -செல்வகுமார், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Sep 2022 5:54 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#12237

தண்ணீர் தேங்கிய பஸ் நிறுத்தம்

சாலை

சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா வெள்ளாளப்பட்டி ஊராட்சியில் பஸ்கள் நிற்கும் இடத்தில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், வேலைக்கு செல்லும் மகளிர் என அனைவரும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த பஸ் நிறுத்தும் இடத்தை சீரமைக்க வேண்டும், -சதீஷ், வெள்ளாளப்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick