Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
1 Sep 2022 5:54 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#12236

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா மெயின் பஜார் தெரு சவுண்டம்மன் கோவில் அருகே தெருநாய்கள் தொல்லை அதிகமாக காணப்படுகிறது. மேலும் தெருவில் செல்பவர்களை துரத்தி துரத்தி கடிக்கின்றன. இதனால் பொதுமக்கள், வெளியே செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். -சேவியர், ஓமலூர், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Sep 2022 4:42 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#12214

தேங்கி நிற்கும் கழிவு நீர்

கழிவுநீர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஜக்கப்பன்நகர் காவலர் குடியிருப்பில் செப்டிக் டேங்க் கழிவுநீர் வெளியேற வழியில்லாமல் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வளாகத்திலேயே தேங்கி நிற்கிறது. பாதாள சாக்கடையுடன் கழிவுநீர் இணைப்பு குழாய்களை முறையாக இணைக்கவில்லை. இதனால் அடைப்பு ஏற்பட்டு செப்டிக்டேங்க் கழிவுநீர் வெளியேறமுடியாத நிலை உள்ளது. எனவே இணைப்பு குழாய்களை முறையாக இணைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -ராமசாமி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Sep 2022 4:41 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#12213

புறவழிச்சாலை அமைக்கப்படுமா?

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள சிப்காட் பகுதிக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் தர்மபுரி முதல் சென்னை வரை செல்லும் மாநில நெடுஞ்சாலையும் போச்சம்பள்ளி வழியாக செல்வதால் நாள்தோறும் போக்குவரத்து நெரிசலால் போச்சம்பள்ளி திணறிவருகிறது. எனவே போச்சம்பள்ளியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புறவழிச் சாலை அமைக்கப்படுமா? -சுப்பிரமணி, போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Sep 2022 4:40 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#12212

பத்திரப்பதிவு செய்ய முடியாமல் தவிப்பு

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு தினமும் பத்திரப்பதிவு மேற்கொள்வதற்காக ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் அந்த அலுவலக கணினியில் அடிக்கடி சர்வர் பழுதாகிறது. இதனால் பொதுமக்கள் உரிய நேரத்தில் பத்திர பதிவு செய்ய முடியாமல் தவிக்கின்றனர். இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கேசவன், சூளகிரி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Sep 2022 4:39 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#12211

குடிநீர் வசதி தேவை

தண்ணீர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ரெட்டிப்பட்டி ஊராட்சி திப்பம்பட்டி கிராமத்தில் 50 வீடுகள் உள்ளன. கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் வரவில்லை. இதனால் அந்த கிராமத்தில் உள்ள பெண்கள் அருகிலுள்ள விவசாய கிணறுகளை தேடிசென்று தண்ணீர் எடுத்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி அந்த கிராமத்திற்கு குடிநீர் வசதி கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -செல்வம், திப்பம்பட்டி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Sep 2022 4:38 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#12210

சேதமடைந்த சாலை

சாலை

தர்மபுரி மாவட்டம் கோணங்கிஅள்ளி ஊராட்சி சி.புதூர் கிராம சந்திப்பு சாலையில் இருந்து அரிச்சந்திரனூர் கிராமம் வரை செல்லும் தார்சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைத்து புதியதாக தார் சாலை அமைக்க வேண்டும். -தேவராஜ், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Sep 2022 4:07 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#12208

உடைந்த குடிநீர் குழாய்

தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் மாரண்ட‌அள்ளி செவத்தம்பட்டி 3-வது வார்டு பஞ்சப்பள்ளி சாலை அருகே குடிநீர் தொட்டியின் குழாய் உடைந்த நிலையில் உள்ளது. இதனால் தண்ணீர் அதிகளவில் வீணாகிறது. எனவே உடைந்த குடிநீர் குழாயை சீரமைத்து குடிநீ்ர் தொட்டியை சுற்றியுள்ள புதர்களையும் அகற்ற வேண்டும். -கோவிந்தன், மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Sep 2022 4:06 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#12206

இருண்டு கிடக்கும் பிரதான சாலை

மின்சாரம்

தர்மபுரி நேதாஜி பைபாஸ் ரோட்டின் நடுவில் நகராட்சி சார்பில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அரசு ஆஸ்பத்திரி முதல் மதிகோன்பாளையம் இணைப்பு சாலை வரை அமைக்கப்பட்டுள்ள இந்த மின் விளக்குகள் இரவு நேரங்களில் முழுமையாக எரியாதாதல் முக்கியசாலை சந்திப்பு இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அடிக்கடி சிறு, சிறு விபத்துகள் ஏற்படுகிறது. எனவே நகராட்சி நிர்வாகம் நேதாஜி பைபாஸ் ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள மின் விளக்குகளை முறையாக பராமரிக்க வேண்டும். -உமாதேவி, நெசவாளர் நகர், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Sep 2022 4:03 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#12203

ஆபத்தான பயணம்

போக்குவரத்து

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஏராளமான மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள், பல்வேறு ஊர்களில் இருந்து காலை, மாலை நேரங்களில் பஸ்களில் வந்து செல்கின்றனர். அவர்களுக்கு போதிய பஸ் வசதி இல்லை. மாணவர்கள் பஸ்சின் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பள்ளி நேரத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும். -சுப்ரியா, ஏரியூர், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Aug 2022 5:43 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#12027

பொதுமக்கள் அவதி

மற்றவை

சேலம் சின்னகொல்லப்பட்டியில் இருந்து கோரிமேடு செல்லும் சாலையின் ஓரத்தில் சாக்கடை கால்வாய் அமைப்பதற்காக குழிகள் தோண்டப்பட்டுள்ளன. ஆனால் பணிகள் முடிக்கப்படவில்லை. இதனால் சாக்கடையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சாலையில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இதனால் பொது மக்களும் அவதியடைகின்றனர். எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி சாக்கடை கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். -ராஜேந்திரன், சின்னகொல்லப்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Aug 2022 5:42 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#12024

கழிப்பறை திறக்கப்படுமா?

மற்றவை

ராசிபுரம் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த கூனவேலம்பட்டி ஊராட்சி பாலப்பாளையம் கிராமத்தில் உள்ள கழிப்பிடம் வர்ணம் பூசுவதற்காக கடந்த ஒரு மாத காலமாக மூடப்பட்டு உள்ளது. தற்்போது மழை காலம் என்பதால் பொதுமக்கள் மற்றும் வயதான பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே கழிப்பிட வளாகத்தை உடனடியாக திறக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சபரி, பாலப்பாளையம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Aug 2022 5:41 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#12022

குண்டும் குழியுமான சாலை

சாலை

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி தாலுகா தேவராயபுரம் ஊராட்சியில் நாமக்கல்லில் இருந்து துறையூர் செல்லும் சாலையில் செல்லிபாளையம் சாலையில் இருந்து வரகூர் வரை செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் வாகனங்களில் செல்வோர் மிகவும் சிரமப்படுகிறார்கள். மேலும் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகனங்களில் செல்பவர்கள் கீழே விழுந்து விபத்தும் ஏற்படுகிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டு்ம். -தினேஷ், எருமப்பட்டி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick