Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
31 Aug 2022 5:39 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#12019

'தினத்தந்தி'க்கு நன்றி

ட்ரெண்டிங்

நாமக்கல் மாவட்டம் மோகனூர் சர்க்கரை ஆலை பெட்ரோல் பங்க் அருகே சீமைக்கருவேல மரங்கள் மற்றும் முட்செடிகள் அதிகளவில் வளர்ந்து இருந்தது. இந்த சீமைக்கருவேல மரங்கள், முட்செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்ககோரி 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக சாலை பணியாளர்கள், சீமைக்கருவேல மரங்களை வெட்டி அகற்றினர். இதனால் மகிழ்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் 'தினத்தந்தி' மற்றும் சாலை பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். -ராஜா, மோகனூர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Aug 2022 5:38 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#12018

சுகாதார சீர்கேடு

சுகாதார சீர்கேடுமற்றவை

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகா பூசாரிப்பட்டி பூ மார்க்கெட்டில் வீணாகும் பூக்களை பூசாரிப்பட்டி சுடுகாட்டில் கொட்டி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஜெயமுருகன், பூசாரிப்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Aug 2022 5:36 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#12017

'தினத்தந்தி'க்கு பாராட்டு

ட்ரெண்டிங்

சேலம் சீலநாயக்கன்பட்டி 60-வது வார்டில் திருச்சி மெயின் ரோட்டில் தட்சிணாமூர்த்தி கோவில் அருகில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக சாலையில் செல்கிறது என 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதைதொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கையில் இறங்கினர். உடைந்த குடிநீர் குழாய் சரிசெய்யப்பட்டது. நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், அதற்கு செய்தி வெளியிட்டு உதவிய 'தினத்தந்தி' க்கும் அந்த பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர். -சூர்யா, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Aug 2022 4:58 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#12010

மின் கம்பத்தை அகற்றலாமே

மின் கம்பத்தை அகற்றலாமேமின்சாரம்

ஏரியூர் அருகே உள்ள காமராஜ் பேட்டையில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் நுழைவுவாயிலின் மைய பகுதியில் மின் கம்பம் அமைந்துள்ளது. இதன் காரணமாக பள்ளிக்குள் அரசு அதிகாரிகளின் வாகனங்கள் செல்ல முடிவதில்லை. அவசர காலத்தில் தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்டவை செல்ல வழி இல்லாமல் இருக்கும் இந்த மின்கம்பத்தை மாற்று இடத்தில் அமைக்க வேண்டும். - சபரிராஜ், பென்னாகரம், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Aug 2022 4:56 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#12009

பழுதடைந்த கட்டிடம்

மற்றவை

நல்லம்பள்ளி அருகே கோவிலூர் கிராமத்தில் அரசின் தொலைக்காட்சி அறை பழுதடைந்து பயன்பாடு இல்லாமல் உள்ளது. இதில் சமூக விரோதிகள் மது அருந்துவது, சூதாட்டம் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த வழியாக செல்லும் பெண்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இந்த பழுதடைந்த கட்டிடத்தை அகற்ற வேண்டும். -உதயா, நல்லம்பள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Aug 2022 4:53 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#12008

பள்ளம் சீரமைக்கப்படுமா?

சாலை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு- தர்மபுரி மெயின் ரோட்டில் பத்திரப்பதிவு அலுவலகம் அருகில் தார் சாலையில் பள்ளம் உள்ளது. இதனால் வாகனத்தில் செல்வோர் அந்த இடத்தில் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். எனவே அதிகாரிகள் இந்த பள்ளத்தை சீரமைக்க வேண்டும். -ரவி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Aug 2022 4:52 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#12007

குண்டும், குழியுமான சாலை

சாலை

ஓசூர் ராயக்கோட்டை சாலையில் பிரம்மமலைக்கு செல்லும் வழியில் குடியிருப்பு பகுதிகளும், கடைகள், சிறிய தொழிற்சாலைகளும் உள்ளன. பவுர்ணமி நாளன்று ஏராளமான பக்தர்கள் பிரம்ம மலையை சுற்றி கிரிவலம் செல்கின்றனர். இந்த நிலையில் ராயக்கோட்டை ரோட்டில் இருந்து பிரம்மமலைக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமான நிலையில் காட்சி அளிக்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் மற்றும் பக்தர்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். -ராஜா,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Aug 2022 4:50 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#12006

அரசு கட்டிடம் பயன்பாட்டுக்கு வருமா?

மற்றவை

ஊத்தங்கரை தாலுகா எக்கூர் கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் கட்டப்பட்டுள்ள மகளிர் திட்ட அலுவலக கட்டிடம் மாடுகள் கட்டும் கொட்டகையாக மாறி உள்ளது. இதனால் விஷ பூச்சிகள் அதிகமாக உள்ள இந்த சாலை வழியாக பொதுமக்கள் செல்ல அச்சப்படுகின்றனர். எனவே இந்த கட்டிடத்தை உடனடியாக சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். -சாமிநாதன், எக்கூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Aug 2022 4:48 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#12005

சேதமடைந்த சாலை

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை ஊராட்சி பாலக்கோடு மெயின்ரோட்டை ஒட்டியுள்ள ரகமத் காலனியில் 3 தெருக்களிலும் சிமெண்டு சாலை உள்ளது. கடந்த 2 வருடங்களுக்கு முன்பு அந்த தெருவில் உள்ள சாலைகள் முழுவதும் பெயர்ந்துள்ளது. இதனால் அந்த தெருக்களில் வாகனங்களில் செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இது குறித்து பல முறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -புருசப்பன், ரகமத்காலனி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Aug 2022 4:42 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#12004

சாலையில் தடுப்புகள் அமைக்கப்படுமா ?

போக்குவரத்து

கிருஷ்ணகிரி நகராட்சி பகுதியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. இங்கு சென்னை, சேலம், பெங்களூரு சாலைகள் உள்ளன. இந்த சாலைகளின் நடுவே ஆங்காங்கே தடுப்புகள் அமைக்கப்படடுள்ளன. ஆனால் ஒரு சில இடங்களில் தடுப்புகள் இல்லை. அந்த இடங்களில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனவே விபத்துக்களை தடுக்கும் வகையில் சாலையில் தடுப்புகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராம்குமார், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Aug 2022 4:40 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#12003

சுகாதார சீர்கேடு

தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் மாரண்ட‌அள்ளி அருகே அத்திமுட்லு கிராமத்தில் குடிநீர் குழாயை சுற்றி கழிவுநீர் சூழ்ந்துள்ளது. இதனால் அங்கு தண்ணீர் பிடிக்க வரும் பொதுமக்கள் துர்நாற்றத்தால் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இந்த குடிநீர் குழாயை சுத்தப்படுத்தி தர அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். -கோவிந்தன், அத்திமூட்லு, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Aug 2022 5:50 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#11822

மின்கம்பத்தில் படர்ந்த செடிகள்

மின்கம்பத்தில் படர்ந்த செடிகள்மின்சாரம்

நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஒன்றியம் பெரமாண்டம்பாளையம் ஊராட்சி முத்தூரிலிருந்து ஆண்டிபாளையம் செல்லும் சாலையில், வாய்க்கால் அருகே உள்ள மின்கம்பத்தில் செடி, கொடிகள் படர்ந்து காணப்படுகிறது. எனவே விபத்துகள் ஏதும் ஏற்படும் முன் இந்த செடி கொடிகளை அகற்றி மின் கம்பத்தை முறையாக பராமரிக்க வேண்டும். -மணி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick