Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
5 Sep 2022 4:21 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#13047

நோய் பரவும் அபாயம்

கழிவுநீர்

ஓசூர் சீதாராம் மேடு அருகே உள்ள ஒரு தனியார் திருமண மண்டப பகுதி சாலையின் நடுவே கழிவுநீர் நீண்ட காலமாக தேங்கி நிற்கிறது. இங்கு ஏராளமான குடியிருப்பகள் உள்ளன. இந்த பிரச்சினை குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கழிவுநீர் தேங்கி நிற்பதால் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே உடனடியாக இந்த பிரச்சினைக்கு அதிகாரிகள் தீர்வு காண வேண்டும். -தாஜுத்தீன், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Sep 2022 4:59 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#12855

எரியாத சிக்னல் விளக்குகள்

மின்சாரம்

சேலம் மாவட்டம் எருமாபாளையம் ஊராட்சி தேசிய நெடுஞ்சாலை காமராஜர் சிலை அருகே உள்ள சிக்னலில் பொதுமக்கள் கடந்து செல்ல கிராஸ் ரோடு அமைந்துள்ளது. இந்த பகுதியில் கடந்த 1 மாதத்துக்கும் மேலாக சிக்னல் விளக்குகள் மற்றும் அந்த பகுதிகளில் சாலை விளக்குகள் எரிவதில்லை. இதனால் அந்த சாலையில் இரவு நேரங்களில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே சிக்னல் விளக்குகளையும், சாலை விளக்குகளையும் சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கஸ்தூரி, எருமாபாளையம், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Sep 2022 4:59 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#12854

நோய் பரவும் அபாயம்

தண்ணீர்

சேலம் கருப்பூர் பேரூராட்சி தட்டாஞ்சாவடி பள்ளம் பழைய பால் சொசைட்டி தெருவில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இங்கு மழைநீர் செல்ல வடிகால் வசதி இல்லை. இதனால் அந்த பகுதியில் கொசு தொல்லையும், நோய் பரவும் அபாயமும் அதிகமாக உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். -பாபுகுமார், கருப்பூர், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Sep 2022 4:58 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#12853

சாய்ந்த நிலையில் மின்கம்பம்

மின்சாரம்

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் தாலுகா எடப்பட்டியில் இருந்து வாழப்பாடி செல்லும் வழியில் நெய்யமலை பஸ் நிறுத்தம் அமைந்துள்ளது. அந்த பஸ் நிறுத்தம் அருகே உள்ள மின்கம்பம் சாய்ந்த நிலையில் கீழே விழும் அபாயத்தில் உள்ளது. இந்த வழியாக தினந்தோறும் ஏராளமான வாகனங்களும் செல்கின்றன. எனவே அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் ஆபத்தான மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -முருகன், எடப்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Sep 2022 4:58 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#12852

'தினத்தந்தி'க்கு பாராட்டு

தினத்தந்திக்கு பாராட்டுட்ரெண்டிங்

சேலம் மாவட்டம் கந்தம்பட்டி ரெயில்வே பாலத்தின் அருகே பைபாசில் இருந்து இளம்பிள்ளை செல்லும் வழியில் சாலையோரத்தில் மழைநீர் செல்ல இரும்பு குழாய்களை கொண்டு மூடி உள்ளனர். இந்த இரும்பு குழாய்கள் சேதமடைந்து உள்ளது என 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியாகி இருந்தது. இதனை தொடர்ந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் தற்போது இந்த இரும்பு குழாய்களை சீரமைத்தனர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட உதவிய 'தினத்தந்தி'க்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். -மணிகண்டன், பெருமாள்,...

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Sep 2022 4:57 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#12851

சுரங்கப்பாதையில் தேங்கும் மழைநீர்

சுரங்கப்பாதையில் தேங்கும் மழைநீர்தண்ணீர்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா தேங்கல்பாளையம் அணைப்பட்டியான் காலனியில் இருந்து மயானம் செல்லும் வழியில் ரெயில்வே சுரங்கப்பாதை உள்ளது. இந்த ரெயில்வே பாலம் கொடம்பிலிருந்து கண்ணாங்குட்டைக்கு செல்லும் ஓடையின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இங்கு மழைக்காலங்களில் தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் மயானத்திற்கு செல்லும் சாலை தடைப்பட்டுள்ளது. எனவே இந்த சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்காமல் இருக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -பழனிவேல், தேங்கல்பாளையம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Sep 2022 4:53 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#12849

அடிப்படை வசதி வேண்டும்

மற்றவை

நாமக்கல்- சேந்தமங்கலம் சாலையில் குட்டை தெருவுக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக மாறி உள்ளது. மேலும் கழிவுநீர் செல்ல கால்வாய் இல்லாததால் சாலையில் ஆறாக ஓடுகிறது. அந்த பகுதியில் தெருவிளக்கு போன்ற எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டு்ம். -விக்னேஷ், சேந்தமங்கலம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Sep 2022 4:52 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#12848

ஆபத்தான மின்கம்பம்

ஆபத்தான மின்கம்பம்மின்சாரம்

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியம் ஆயிபாளையம் பகுதியில் இருந்து தனியார் பாலிடெக்னிக் கல்லூரி வழியாக முனியப்பன் கோவில் செல்லும் சாலையில் மின்கம்பம் சாய்ந்து சாலையில் விழும் நிலையில் இருந்தது. சாய்ந்து விழாமல் இருக்க அந்த பகுதி மக்கள் மின்கம்பத்தை கயிற்றால் இழுத்து கட்டி வைத்துள்ளனர். இதுகுறித்து அத்தனூர் மின்சார துறைக்கு தகவல் தெரிவித்து ஒரு வாரம் ஆகியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு ஆபத்தான மின் கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் அமைக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Sep 2022 4:47 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#12846

குடிநீரை வீணாக்கலாமா?

தண்ணீர்

கிருஷ்ணகிரி நகரில் சாலையோரம் மற்றும் தெருக்களில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக குடிநீர்தொட்டி அமைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் சில இடங்களில் குடிநீர் தொட்டி அமைத்து பல ஆண்டுகள் கடந்துவிட்டதால் தொட்டி சேதமடைந்து குடிநீர் வீணாகுகிறது. இதனால் பொதுமக்களுக்கு கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த குடிநீர் தொட்டிகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். -செழியன், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Sep 2022 4:46 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#12845

குண்டும், குழியுமான சாலை

சாலை

ஓசூர் புதிய ஏ.எஸ்.டி.சி. ஹட்கோ பகுதி, 100 அடி சாலையில், முனீஸ்வர் நகர் செல்லும் பகுதி வரை சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த பகுதியில் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் தட்டுத்தடுமாறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். -சிவகுமார், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Sep 2022 4:45 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#12844

பராமரிக்கப்படாத கழிப்பிடம்

கழிவுநீர்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் கருவூலம் அமைந்துள்ளது. அங்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். இந்தநிலையில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக கழிப்பிடம் கட்டப்பட்டது. தற்போது அந்த கழிப்பிடம் பராமரிக்கப்படாததால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அங்கு வருபவர்கள் மூக்கை பிடித்து கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிப்பிடத்தை பராமரித்து தூய்மையாக வைக்க செய்ய வேண்டும். -முனியப்பன், தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Sep 2022 4:45 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#12843

தெருநாய்களால் மக்கள் அச்சம்

தெருநாய்களால் மக்கள் அச்சம்மற்றவை

ஓசூர் அப்பாவு நகரில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் நடந்துகூட செல்ல முடியவில்லை. குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெண்கள் தெருநாய்களுக்கு பயந்து வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகிறார்கள். மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருநாய்களை பிடித்து செல்ல வேண்டும். -நாகலட்சுமி, ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick