Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
5 Sep 2022 5:54 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#13087

பயணிகள் நிழற்கூடம்

மற்றவை

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பஸ் நிலைய 4 ரோட்டில் மேம்பாலம் கட்டும் பணி நடப்பதால் தற்போது இருந்த நிழற்குடையை எடுத்து விட்டனர். இதனால் பயணிகள் வெயிலில் நின்று பஸ் ஏறும் நிலை உள்ளது. மேலும் சிறுவர்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே அதிகாரிகள் தற்காலிக நிழற்கூடம் அமைக்க வேண்டும். -சிவா, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Sep 2022 5:53 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#13086

சேறும், சகதியுமான பள்ளி வளாகம்

சாலை

மேச்சேரி அருகே கூனாண்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் முன் மழை தண்ணீர் அதிகளவில் தேங்கி சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், பெற்றோர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இதனை சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -தனசேகரன், கூனாண்டியூர், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Sep 2022 5:51 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#13085

நூலகம் திறக்கப்படுமா?

மற்றவை

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு எதிராக உள்ள நூலகம் கடந்த 2 ஆண்டுகளாக மூடப்பட்டிருக்கிறது. பள்ளிக்கு எதிரே நூலகம் இருந்தும் பயனில்லாமல் மாணவர்கள் நூலகத்தில் உள்ள புத்தகங்களை படிக்க முடியாமல் உள்ளது. எனவே சமந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த நூலகத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -திருமலை, மகுடஞ்சாவடி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Sep 2022 5:50 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#13084

சேறும், சகதியுமான சாலை

சாலை

சேலம் வீரபாண்டி தாலுகா பெருமாம்பட்டி ஊராட்சியில் திருமலைகிரியில் இருந்து பெருமாம்பட்டி செல்லும் வழியில் கோவில்காடு பகுதியில் தார் சாலை சேதமடைந்து உள்ளது. மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களில் செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் -வெற்றிவேல்‌‌, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Sep 2022 5:46 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#13083

குப்பை தொட்டி வேண்டும்

குப்பை

சேலம் மாவட்டம் பொன்னம்மாப்பேட்டை அண்ணாநகர் முதல் தெருவில் குப்பை தொட்டி இல்லாததால் குப்பைகள் சாலையோரம் கொட்டப்படுகின்றன. இதனால் அந்த தெருவில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே அதிகாரிகள் அந்த தெருவில் குப்பை தொட்டி வைத்து குப்பைகளை குப்பை தொட்டியில் போட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராகுல், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Sep 2022 4:34 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#13056

சாக்கடை மூடியை சரி செய்வார்களா?

கழிவுநீர்

தர்மபுரி சத்திரம் மேல்தெரு செல்லும் நுழைவு பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயை நகராட்சியினர் இரும்பு மூடியை கொண்டு மூடியுள்ளனர். இந்த இரும்பு மூடி சேதம் அடைந்து உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். ஆபத்தான நிலையில் உள்ள இந்த இரும்பு மூடியை நகராட்சி அதிகாரிகள் சரி செய்வார்களா? -ராஜா, சத்திரம் மேல் தெரு, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Sep 2022 4:33 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#13055

சேதமடைந்த வேகத்தடைகள்

சாலை

தர்மபுரி மாவட்டத்தில் முக்கிய நகரங்களுக்கு செல்லும் சாலைகளில் விபத்தை தவிர்க்கும் வகையில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டன. ஒரு சில சாலைகளில் உள்ள வேகத்தடைகள் சேதமடைந்ததால் வாகனங்கள் வேகமாக சென்று விபத்தில் சிக்குகின்றன. எனவே பொதுமக்கள் பாதுகாப்பு கருதி சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த வேகத்தடைகளை புதுப்பித்து விபத்துகளை தவிர்க்க வேண்டும். -சரவணன், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Sep 2022 4:32 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#13054

குரங்குகள் தொல்லை

மற்றவை

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலகத்திற்கு நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக வந்து செல்கின்றனர். அவ்வாறு வருபவர்களை குரங்குகள் கடிக்க துரத்துகிறது. சில நேரங்களில் இருசக்கர வாகனங்களில் வைத்திருக்கும் பொருட்களை எடுத்துச் செல்கிறது. அலுவலகத்திற்குள் நுழைந்து அலுவலக கோப்புகளை தூக்கி எறிந்து சேதப்படுத்துகிறது. இதனால் அலுவலகத்திற்கு வருவதற்கு பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த குரங்குகளை சம்பந்தப்பட்ட துறையினர் பிடித்து வனப்பகுதியில் விட...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Sep 2022 4:31 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#13053

சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?

கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் வெங்கடசமுத்திரம் ஊராட்சி செங்கல்பட்டி, அண்ணா நகர் பகுதியில் கழிவுநீர் கால்வாயில் கழிவுகள் தேங்கி நிற்கிறது. இதனை ஊராட்சி நிர்வாகம் சுத்தம் செய்வதில்லை. இதனால் குடியிருப்பு பகுதிகளில் ஆங்காங்கே தேங்கி இருக்கும் கழிவு நீரால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடை கால்வாயில் கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -மணி, பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Sep 2022 4:30 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#13052

சாலைகளில் தேங்கிய மழைநீர்

தண்ணீர்

கிருஷ்ணகிரி தேவசமுத்திரம் ஊராட்சி முல்லை நகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் அந்த பகுதி முழுவதும் மழைநீர் வீடுகளை சூழ்ந்து சாலைகளில் தேங்கி உள்ளது. இதனால் இந்த பகுதியில் விஷ பூச்சிகள் தொல்லை அதிகரித்துள்ளது. அந்த பகுதியில் வசிக்கும் பொது மக்கள் அவதி அடைகின்றனர். எனவே இந்த பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மழை நீரை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பாஸ்கர், முல்லை நகர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Sep 2022 4:27 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#13049

குண்டும் குழியுமான சாலை

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் இருந்து ஆந்திர மாநிலம் குப்பம் செல்லும் தார் சாலை முழுவதும் ஜல்லி கற்கள் பெயர்ந்து சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் இப்பகுதியில் அதிக அளவில் வாகனங்கள் வந்து செல்வதால் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இந்த சாலையை சீரமைத்து விரிவுபடுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுரேஷ், வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Sep 2022 4:22 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#13048

கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும்

கழிவுநீர்

பர்கூர் ஒன்றியம் மல்லப்பாடி ஊராட்சி அண்ணா நகர் பகுதியில் 50-கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் முறையான கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படாததால் கழிவுநீர் சாலையோரத்தில் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும். -ரஞ்சித், பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick