Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
6 Sep 2022 5:46 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#13293

குடிநீர் வசதி தேவை

தண்ணீர்

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் பேரூராட்சி காளிப்பட்டி கிராமத்தில் கடந்த 10 நாட்களாக காவிரி குடிநீர் வரவில்லை. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீருக்காக மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே அதிகாரிகள் அந்த பகுதி மக்களுக்கு தினசரி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -சிவா, காளிபட்டி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Sep 2022 5:45 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#13292

நோய் பரவும் அபாயம்

குப்பை

நாமக்கல் மாவட்டம் புதன் சந்தை பகுதியில் உள்ள இறைச்சி வியாபாரிகள் சிலர் கழிவுகளை சந்தை வளாகத்திற்குள்ளே கொட்டி செல்கின்றனர். அந்த கழிவுகளை சாப்பிட சந்தை வளாகத்திற்குள் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் சந்தைக்கு வரும் பொதுமக்கள் மூக்கை பிடித்து கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அங்கு இறைச்சி கழிவு கொட்டுவதற்கு தடை செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பிரபாகரன், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Sep 2022 5:44 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#13291

மழைநீரால் மக்கள் அவதி

மற்றவை

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு எலச்சிபாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 87 கவுண்டம்பாளையம் குமரமங்கலம் புதுதெரு பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் குளம் போல் மழைநீர் தேங்கி நிற்்கிறது. இதனால் இப்பகுதியில் உள்ள கிணறுகளும் நிரம்பி உள்ளன. பெரும்பாலான வீடுகளில் மழைநீர் ஊற்று நீர் போல நிலத்தடியில் இருந்து வந்து கொண்டிருப்பதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர். இரவு நேரங்களில் தூங்ககூட முடியவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Sep 2022 4:30 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#13265

குப்பைகளால் சுகாதார சீர்கேடு

குப்பை

தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை ஊராட்சி அன்னை நகரில் சேலம்- தர்மபுரி பைபாசில் சாலையோரம் குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்கள் அதிகம் உள்ளன. இந்த பகுதியில் குப்பை கழிவுகள் அதிகளவு குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு நிலவுகிறது. எனவே குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மணி, நல்லம்பள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Sep 2022 4:29 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#13261

புதர்கள் அகற்றப்படுமா?

மற்றவை

தர்மபுரி மாவட்டம் மாரண்ட‌அள்ளியில் வெள்ளிச்சந்தை செல்லும் சாலையில் உள்ள சிறுவர் பூங்கா அருகில் உள்ள குடிநீர் தொட்டி புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அங்கு செல்ல அச்சப்படுகின்றனர். எனவே அந்த குடிநீர் தொட்டியை சுத்தம் செய்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுப்பிரமணி, மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Sep 2022 4:23 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#13259

விபத்து ஏற்படும் அபாயம்

போக்குவரத்து

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் இருந்து சேலம், அரூர், தர்மபுரி, பொம்மிடி உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் 100-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் சாலைகளில் அதிவேகமாகவும், அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களையும் பயன்படுத்துகின்றன. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் அச்சமடைந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் அதிக ஒலி எழுப்பும் பஸ் ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஆனந்த், பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Sep 2022 4:21 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#13258

மது அருந்தும் கூடாரமாக மாறிய வாரச்சந்தை

மற்றவை

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி ஊராட்சியில் வடசந்தையூரில் வியாழக்கிழமை தோறும் கால்நடைகள் சந்தை கூடுகிறது. மற்ற நேரங்களில் இந்த சந்தை வளாகத்தில் மதுபிரியர்கள் அமர்ந்து மது குடித்து வருகிறார்கள். மேலும் குடித்து விட்டு பாட்டில்களை அங்கேயே போட்டுவிட்டு செல்கின்றனர். இதனால் அந்த வழியே செல்லும் பெண்கள், பொதுமக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். சந்தை மது அருந்தும் கூடாரமாக மாறியதால் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. எனவே இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -நாசர், பொம்மிடி,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Sep 2022 3:48 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#13251

பழுதடைந்த டிரான்ஸ்பார்மர்

மின்சாரம்

பர்கூரை அடுத்த சிந்தகம்பள்ளி அண்ணாநகர் பகுதியில் மின்சார டிரான்ஸ்பார்மர் பழுதடைந்து 2 கம்பங்களும் சேதமடைந்து உள்ளன. இந்த டிரான்ஸ்பார்மரில் இருந்து விவசாய நிலங்களுக்கும், வீடுகளுக்கும் இணைப்புகள் செல்கின்றன. எனவே அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன் பழுதடைந்த டிரான்ஸ்பார்மரை சீரமைக்க வேண்டும். -ரவி, பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Sep 2022 3:47 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#13250

சாலையில் தேங்கும் மழைநீர்

சாலை

ஓசூரில் இருந்து கெலமங்கலம் செல்லும் சாலையில் அக்கொண்டப்பள்ளி பகுதியில் உள்ள மெயின் ரோட்டில் கடந்த 2 நாட்களாக மழைநீர் தேங்கி கிடக்கிறது. இந்த பகுதியில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. அனைத்து வாகனங்களும் தண்ணீரில் தத்தளித்தவாறு பயணிக்கின்றன. எனவே அதிகாரிகள் இந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண முன்வரவேண்டும். -ரமேஷ், அக்கொண்டப்பள்ளி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Sep 2022 3:45 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#13249

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்திற்கு கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மாநிலங்களில் இருந்தும் பிற மாவட்டங்களில் இருந்தும் பயணிகள் பஸ்களில் வந்து செல்கின்றனர். இந்த பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகள் முறையாக இல்லை. பஸ் நிலையத்திற்குள் உள்ள மின் விளக்குகள் சரியாக எரிவதில்லை. மேலும் ஆங்காங்கே கடைகள் முன்பு வாகனங்களை நடுரோட்டில் நிறுத்திவிட்டு செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகின்றனர். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சலாவுதீன்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Sep 2022 3:44 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#13248

தூா்வார வேண்டிய கால்வாய்

கழிவுநீர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்திற்குள் மழைநீர் தேங்கி குளம் போல் நிற்கிறது. இங்குள்ள கால்வாய் தூர்வாராமல் இருப்பதால் மழைநீர் வெளியேற வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார வளாகத்திற்கு வரும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே மழைநீர் தேங்காமல் இருக்க கால்வாயை முறையாக தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -வாசு, ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Sep 2022 5:55 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#13088

பயணிகள் நிழற்கூடம் சீரமைக்கப்படுமா?

போக்குவரத்து

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே துத்திக்குளம் சுட்டபாறை மேடு பஸ் நிறுத்த பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு பயணிகள் நிழற்கூடம் கட்டப்பட்டது. அது தற்போது சேதம் அடைந்தும், செடி, கொடிகள் முளைத்தும் காணப்படுகிறது. எனவே சேதமடைந்த பயணிகள் நிழற்கூடத்தை சீரமைப்பதோடு, செடி, கொடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -நாராயணன், துத்திக்குளம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick