Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
21 Sep 2022 4:13 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#16426

தார்ச்சாலை அமைக்கப்படுமா?

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் யூனியன் ராயக்கோட்டை ஊராட்சி குரும்பட்டி கிராமத்தில் இருந்து திம்மராயன் கொட்டாய் மற்றும் தூள்செட்டி ஏரி வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் மண் சாலையாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் ஆங்காங்கே மண் அரிப்பு ஏற்பட்டு மேடு பள்ளமாக உள்ளது. இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் சென்று வருவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் பலன் இல்லை. எனவே மண் சாலையை தார்சாலையாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -முருகன், குரும்பட்டி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2022 4:12 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#16425

சாலையில் சிதறும் குப்பைகள்

குப்பை

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் பஸ் நிலையம் அருகே சர்வீஸ் சாலையோரம் குப்பைகள் ஆங்காங்கே மலை போல் கொட்டி வைத்துள்ளனர். அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், குப்பைகள் காற்றில் பறந்து சாலையில் சிதறிக் கிடக்கின்றன. இதனால் நடந்து செல்பவர்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றி தூய்மையாக வைக்க செய்ய வேண்டும். -சீனிவாசன், சூளகிரி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2022 4:09 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#16424

பாழடைந்த நூலகம்

பாழடைந்த நூலகம்மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி பஸ் நிலையத்தில் பாழடைந்த நூலகம் அமைந்துள்ளது. பயன்படாத அந்த நூலகத்தின் கட்டிடம் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. இதுபற்றி பலமுறை மனு புகார் அளித்தும் பலன் இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த நூலகத்தை புதுப்பித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். -சரவணன், தளி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2022 4:07 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#16423

புதிய குடிநீர் தொட்டி தேவை

தண்ணீர்

தர்மபுரி மாவட்டத்தில் ஊருக்கு அருகே குடிநீர் தொட்டிகள் உள்ளன. இந்தநிலையில் அந்த குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. இதனால் குடிநீர் தொட்டிகள் சேதமடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. மேலும் அந்த பகுதியில் தண்ணீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த குடிநீர் தொட்டிகளை அகற்றி புதிய குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும். -ராம்கி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2022 4:06 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#16422

சாலையோர அங்கன்வாடி மையம்

சாலையோர அங்கன்வாடி மையம்மற்றவை

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே காமராஜா பேட்டையில் அங்கன்வாடி மையத்திற்கு 40-க்கும் மேற்பட்ட குழந்தைகள் வருகின்றனர். இந்த அங்கன்வாடி மையம் ஊருக்கு ஒதுக்குப்புறமாக சாலை ஓரத்தில் அமைந்துள்ளது. இந்த அங்கன்வாடி மையத்திற்கு சுற்றுச்சுவர் இல்லாததால் குழந்தைகள் பெரும்பாலும் சாலை ஓரமே விளையாடி வருகின்றனர். தினமும் ஏராளமான வாகனங்கள் இந்த சாலையில் செல்வதால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அங்கன்வாடி மையத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். -அருள், ஏரியூர், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2022 4:03 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#16421

புதுப்பிக்கப்பட வேண்டிய சிமெண்டு சாலை

சாலை

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சி 14-வது வார்டு மசூதி இருக்கும் பகுதியில் அக்ரஹார தெருவில் சிமெண்டு சாலை போடப்பட்டது. சாலையில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்த நிலையில் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் வாகனத்தில் செல்லவும், நடந்து செல்லவும் மிகவும் சிரமப்படுகின்றனர். அதனால் இந்த பகுதியில் சிமெண்டு சாலையை புதுப்பிக்க வேண்டும். -ராஜகோபால், மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2022 4:02 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#16420

எரியாத உயர்கோபுர விளக்கு

எரியாத உயர்கோபுர விளக்குமற்றவை

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி தொப்பூர் போலீஸ் குடியிருப்பு அருகே தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் இரவு நேர வாகன விபத்தை தவிர்க்கும் பொருட்டு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உயர்கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டது. இந்த உயர்கோபுர மின்விளக்கு கடந்த சில மாதங்களாக பழுதடைந்துள்ளது. இதனால் இரவு நேரத்தில் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு சாலை பகுதி இருளில் மூழ்கி கிடக்கிறது. அந்த சாலையை கடக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்பவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழப்பு மற்றும் காயம் அடையும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்....

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2022 5:54 PM GMT
Mr.Nagarajan | சேலம்-தெற்கு
#16250

குப்பை கிடங்காக மாறிவரும் மழைநீர் கால்வாய்

குப்பை கிடங்காக மாறிவரும் மழைநீர் கால்வாய்குப்பை

சேலம் சீரகாபாடி தனியார் மருத்துவ கல்லூரி அருகே கஞ்சமலை அடிவாரத்தில் இருந்து வீரபாண்டி ஏரி வரை மழைநீர் கால்வாய் செல்கிறது. அந்த வாய்க்காலில் மருந்து கழிவுப்பொருட்கள் மற்றும் குப்பைகள், கழிவு பொருட்கள் அதிக அளவில் உள்ளன. இதனால் அந்த பகுதி சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் துர்நாற்றம் அதிகம் வீசுகிறது. மழைக்காலம் தொடங்குவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மழைநீர் செல்லும் வாய்க்காலை தூர்வார வேண்டும். -சுகன்யா, சீரகாபாடி, சேலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2022 5:54 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#16247

கால்வாய் அமைக்க வேண்டும்

கால்வாய் அமைக்க வேண்டும்கழிவுநீர்

சேலம் அஸ்தம்பட்டி அடுத்த பெட்ரோல் பங்க் அருகே கோாிமேட்டில் இருந்து வரும் சாக்கடை நீர் கொல்லன் கொட்டாய் ஓடை வழியாக செல்கிறது. இந்த இடத்தில் ஓடையை தூர்வாராததால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தி ஆகிறது. இதனால் ஆண்டாள் நகர், பாரதி நகர் மக்கள் பல்வேறு நோய்களால் அவதியடைகின்றனர். எனவே இந்த பகுதியில் கழிவுநீர் தேங்காமல் இருக்கவும், கழிவுநீர் கால்வாய் அமைக்கவும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சின்னப்பு, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2022 5:53 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#16245

காலிக்குடங்களுடன் மக்கள் அவதி

தண்ணீர்

சேலம் மாவட்டம் கடம்பூர் உலமேடு தெற்கு வீதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தநிலையில் குடிநீர் குழாயில் தண்ணீர் சரியாக வராததால் மக்கள் 2 கிலோ மீட்டர் தூரம் சென்று குடங்களில் தண்ணீர் எடுத்து வரும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி ஊராட்சி நிர்வாகம் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தகுந்த நடவடிக்கை எடுக்க முன் வருவார்களா? -அன்பு, கடம்பூர், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2022 5:52 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#16243

பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு

பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புபோக்குவரத்து

சேலம் மாவட்டம் ஓமலூர் பஸ் நிலையம் அருகே நிரந்தர காய்கறி சந்தையானது இயங்கி வருகிறது. அப்படி இருந்தும் பஸ் நிலையத்தையே ஆக்கிரமிக்கும் வகையில் நாளுக்குநாள் கடைகளை வைத்து வருகின்றனர். இதனால் டிரைவர்கள் பஸ் நிலையத்திற்குள் பஸ்களை இயக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காய்கறி வியாபாரிகளின் வாழ்வாதாரமும் பாதிக்காத வகையில் பஸ் நிலைய ஆக்கிரமிப்புகளை சரிசெய்ய வேண்டும். -சேவியர், ஓமலூர், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2022 5:51 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#16241

நடவடிக்கை எடுப்பார்களா?

தண்ணீர்

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகே மங்களம் கிராமத்தில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. அங்கு 5 ஆண்டுகளாக குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. தினமும் பெண்கள், குழந்தைகள் என சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தண்ணீரை தேடி 5 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டிய உள்ளது. சிலர் குளிக்கவும், குடிக்கவும் தண்ணீரை விலைக்கு வாங்கும் நிலை உள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த கிராமத்திற்கு...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick