Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
20 Sep 2022 5:50 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#16240

பயன் இல்லாத நிழற்கூடம்

பயன் இல்லாத நிழற்கூடம்போக்குவரத்து

நாமக்கல்லில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் எம்.மேட்டுப்பட்டி கிராமம் உள்ளது. அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் கட்டப்பட்ட நிழற் கூடம் பயனற்ற நிலையில் காணப்படுகிறது. மேலும் நிழற்கூடத்தை சுற்றி செடி, கொடிகள் முளைத்து புதர் மண்டி கிடக்கிறது. இதானல் விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. எனவே செடி, கொடிகளை அகற்றி நிழற்கூடத்தை பராமரித்து பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ரகு, எம்.மேட்டுப்பட்டி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2022 5:49 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#16239

சாக்கடை கால்வாய் வேண்டும்

சாக்கடை கால்வாய் வேண்டும்கழிவுநீர்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே தோக்கவாடி பஞ்சாயத்து ஸ்ரீஅம்பாள் நகரில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் ஓடுகிறது. இதனால் சாலையில் நடந்து செல்பவர்களும், இருசக்கர வாகனத்தில் செல்பவர்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்க முன் வரவேண்டும். -இ.ராஜேஷ், ஸ்ரீஅம்பாள் நகர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2022 5:45 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#16238

புதருக்குள் குடிநீர் தொட்டி

புதருக்குள் குடிநீர் தொட்டிதண்ணீர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வெங்கடேஷ் நகரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக குடிநீர்தொட்டி அமைக்கப்பட்டது. இந்தநிலையில் அந்த குடிநீர் தொட்டியை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து புதர்போல் காட்சி அளிக்கிறது. விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகரித்துவிட்டது. மேலும் அங்கு தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் பிடிக்க வருபவர்கள் அச்சத்துடனே வரும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து செடி, கொடிகளை அகற்றி தூய்மையாக வைக்க செய்ய வேண்டும். -பாலாஜி, ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2022 5:44 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#16237

மண் சாலையாக மாறும் தார்சாலை

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் பாவக்கல் உயர்மட்ட மேம்பாலத்தில் இருந்து சிங்காரப்பேட்டை செல்லும் தார்சாலை தார் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த சாலை ஆங்காங்கே குண்டும், குழியுமாகவும், மண் சலையாகவும் மாறிவருகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமத்தோடு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தார்சாலையை புதுப்பித்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுப்பிரமணி, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2022 5:43 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#16236

தடுப்புச்சுவர் அமைக்கலாமே?

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் கந்திகுப்பம் எலத்தகிரிக்கு செல்லும் சாலையில் உள்ள கந்திகுப்பம் ஏரி கரையின் இருபுறங்களிலும் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே அந்த பகுதியில் ஏரியை சுற்றி தடுப்புச் சுவர் அமைக்கவும், குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். -பிரபு, கந்திக்குப்பம், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2022 5:42 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#16235

குண்டும், குழியுமான சாலை

குண்டும், குழியுமான சாலைசாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் காட்டேரி ஊராட்சி அனுமந்தீர்த்தம் பிரிவு சாலையில் இருந்து லக்கம்பட்டிக்கு செல்லும் தார்சாலையில் தார் பெயர்ந்து காணப்படுகிறது. இந்த சாலையில் ஆங்காங்கே குண்டும் குழியுமாக காணப்படுவதால் இரண்டு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் அடிக்கடி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். வாகனங்களும் அடிக்கடி பழதாகி பஞ்சர் ஆகிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும். -கண்ணாயிரம், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2022 5:18 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#16234

வேகத்தடைகள் வேண்டும்

சாலை

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த ஏரியூரில் சாலையோரம் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. அந்த சாலையில் வாகனங்கள் அதிக வேகத்துடன் சென்று கொண்டிருக்கிறது. இதனால் பள்ளி மாணவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. இந்த விபத்துகளை தடுக்க சாலையில் ஆங்காங்கே வேகத்தடைகள் அமைக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். -த.சந்தோஷ், இந்திரா நகர், ஏரியூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2022 5:17 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#16233

தாமதமாகும் பஸ் நிலைய பணி

மற்றவை

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் புதிதாக பஸ் நிலையம் கட்டப்படும் பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகின்றன. தற்போது கட்டிட பணிகள் தாமதமாக நடக்கின்றன. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். எனவே பஸ் நிலைய பணியை விரைவில் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாணிக்கம், பென்னாகரம், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2022 5:16 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#16231

மயானத்தில் குவியும் குப்பைகள்

மயானத்தில் குவியும் குப்பைகள்குப்பை

தர்மபுரி மாட்டம் தொப்பூர்- பொம்மிடி சாலையோரத்தில் உள்ள மயான வளாகத்தில் ஊராட்சி நிர்வாகம் குப்பை கொட்டி வைக்கும் இருப்பிடமாக வைத்துள்ளது. இதனால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய முடியாமல், கிராம மக்கள் கடும் சீரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குப்பை கழிவுகள் மயானத்தில் டன் கணக்கில் குவித்து வைக்கப்பட்டுள்ளதால் சுகாதார சீர்கேடு மற்றும் இறந்தவர்களை அடக்கம் செய்யும்போது கிராம மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தி, தொப்பூர் மயான வளாகத்தில்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2022 5:12 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#16227

சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?

சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி- பஞ்சப்பள்ளி சாலையில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. அந்த பள்ளியின் நுழைவுவாயிலின் அருகே கழிவுநீர் கால்வாய் செல்கிறது. அந்த கால்வாயில் செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார கேடு ஏற்பட்டுள்ளதால் பள்ளி மாணவிகளுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. அதனால் மாணவிகளின் நலன்கருதி புதர்களை அகற்றி சாக்கடை கால்வாயை தூர்வாரி கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். -கோவிந்தம்மாள், மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Sep 2022 4:53 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#16031

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

நாமக்கல் மாவட்டம் மோகனூர் காவிரி ஆற்றில் இருந்து நாமக்கல் நகராட்சிக்கு குடிநீர் குழாய் மூலம் செல்கிறது. மோகனூர் காவல்நிலையம் முன்பு உள்ள ஏர் வாழ்வு பகுதியில் தண்ணீர் கசிந்து கொண்டே உள்ளதால் காவல்நிலையத்திற்கு முன்பு தண்ணீர் தேங்கி நிற்கிறது. காவல்நிலையம் வரும் பொதுமக்கள் 2 சக்கர வாகனம் ஓட்டிகள், கார் போன்றவை நிறுத்த இடமின்றி அவதியடைகின்றனர். எனவே இதனை சரி செய்ய அதிகாாகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பசுபதி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Sep 2022 4:44 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#16027

பராமரிப்பு இல்லாத குடிநீர் தொட்டி

தண்ணீர்

சேலம் மாவட்டம் கருப்பூர் 5-வது வார்டு பரவைகாடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டி முறையாக பராமரிப்பில்லாமல் சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகிறது. மேலும் இந்த தண்ணீர் தொட்டியில் பல்லி, தவளை, பூச்சிகளும் கிடக்கின்றன. இந்த தண்ணீரை குடிக்கும் பள்ளி மாணவர்களுக்கு நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த குடிநீர் தொட்டியை சுத்தம் செய்து முறையாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ரஞ்சித், சேலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick