Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
19 Sep 2022 4:43 PM GMT
Mr.Nagarajan | சேலம்-தெற்கு
#16026

பொது கழிப்பிடம் திறக்கப்படுமா?

கழிவுநீர்

சேலம் மாவட்டம் சங்ககிரியில் அரசிராமணி பேரூராட்சி 13-வது வார்டு ஒடசக்கரை கூலான்காடு அருந்ததியர் தெருவில் உள்ள பொது கழிப்பிடத்தில் பராமரிப்பு பணிகள் முடிந்து 1 மாத காலமாகியும் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொது மக்கள் திறந்த வெளியில் இயற்கை உபாதைகளை கழிக்கின்றனர். எனவே உடனடியாக இந்த பொது கழிப்பிடத்தை திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஆனந்தகுமார், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Sep 2022 4:42 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#16024

அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மற்றவை

சேலம் ஜங்ஷன் ெரயில்நிலையம் அருகே போடிநாயக்கன்பட்டி ெரயில்வே சுரங்கப்பாதை உள்ளது. இதன் அருகில் ஏரி இருப்பதால் இந்த பாலத்தின் கீழ்ப்பகுதியில் எப்ேபாதும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. தண்ணீரை வெளியேற்றுவதற்காக மின் மோட்டார் பொருத்தியுள்ளனர். ஆனால் இந்த மின் மோட்டார் அடிக்கடி பழுதடைந்து விடுகிறது. இதனால் இந்த சுரங்கப்பாதையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். எனவே சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மணி, ஆண்டிபட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Sep 2022 4:41 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#16022

தார்சாலை அமைக்கப்படுமா?

சாலை

சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் உள்ளது பச்சமலை. இங்கு 10-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இந்த மலை கிராமங்களில் இருந்து மாவட்ட தலைநகரம் சேலம் செல்ல இங்குள்ள பொதுமக்கள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த டாப் செங்காட்டுப்பட்டி என்ற மலைக்கிராமத்திற்கு வந்து அங்கிருந்து தம்மம்பட்டி வழியாகத்தான் சென்று வர வேண்டும். இதில் டாப் செங்காட்டுப்பட்டியில் இருந்து சோபனபுரம் வரையிலான சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைத்து புதிய தார் சாலை அமைக்க வேண்டும். -சரவணன், பச்சமலை, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Sep 2022 4:39 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#16018

சிலிண்டருக்கு அதிக கட்டணம்

மற்றவை

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் தாலுகா பகுதிகளில் வீட்டு உபயோக சிலிண்டர் வினியோகத்தில் 20 முதல் 50 ரூபாய் வரை அதிக கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும். -சிங்காரம், வெண்ணந்தூர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Sep 2022 4:38 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#16017

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து ராசிபுரம் செல்லும் பிரதான சாலையில் ஏ.டி.எம் உள்பட பல்வேறு வணிக நிறுவனங்கள் உள்ளன. அங்கு வரும் பொதுமக்கள் இருசக்கர வாகனங்களை சாலையிலேயே நிறுத்தி செல்வதால் அவ்வழியே வரும் பெரிய வாகனங்கள் போக்குவரத்திற்கு இடையூறு ஆக அமைந்து விடுகிறது. எனவே இருசக்கர வாகனங்களை சாலை ஓரத்தில் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. -நரசிம்மன், சேந்தமங்கலம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Sep 2022 4:30 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#16009

அகற்ற வேண்டிய ஆக்கிரமிப்புகள்

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா முக்கிய சாலையில் பிரிந்து செல்லும் கொங்கணப்பள்ளி சாலையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பும் சாலை ஓரத்தில் ஆக்கிரமித்துள்ள கடைகளால் அந்த பகுதிகளில் தினந்தோறும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி சாலை விரிவாக்கம் செய்து போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும். -ராஜா, வேப்பனபள்ளி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Sep 2022 4:28 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#16007

பாழடைந்த சமுதாயக்கூடம்

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா எக்கூர் கிராமத்தில் சமுதாயக்கூடம் பாழடைந்து காணப்படுகிறது. இந்த கிராமத்தில் உள்ள ஏழை மக்கள் இந்த சமுதாயக்கூடத்தை சிறு, சிறு வீட்டு விசேஷங்களுக்கு பயன்படுத்தி வந்தனர். தற்போது இந்த சமுதாயக்கூடம் பராமரிப்பின்றி பாழடைந்து காணப்படுகிறது. எனவே இந்த சமுதாய கூடத்தை சீரமைத்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -செல்வராஜ், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Sep 2022 4:28 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#16005

குடிநீர் சுத்திகரிப்பு மையம்

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் தாலுகா நாகமங்கலம் ஊராட்சி நாகமங்கலம் கிராமத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பணிகள் முடிக்கப்பட்டு சுமார் 1 வருடத்துக்கு மேல் ஆகியும் இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வராமல் மூடிவைக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக பலமுறை அதிகாரிகளின் கவனத்துக்கு எடுத்து சென்றும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மூடி கிடக்கும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -பெரியசாமி, நாகமங்கலம், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Sep 2022 4:27 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#16004

பள்ளத்தால் விபத்து அபாயம்

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூரில் இருந்து ஓசூர் செல்லும் சாலையில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ள பகுதியில் சாலையின் நடுவே மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதிகுள்ளாகின்றனர். எனவே இந்த பள்ளத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -குணசேகரன், பாகலூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Sep 2022 4:26 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#16002

நடைபாதையில் ஆக்கிரமிப்பு கடைகள்

மற்றவை

தர்மபுரி நகரில் பிடமனேரி ரோடு மாவட்ட விளையாட்டு மைதானத்தின் சுற்றுச்சுவரையொட்டி உள்ள நடைபாதையில் பொதுமக்கள் நடக்க முடியாத அளவுக்கு எண்ணற்ற கடைகள் ஆக்கிரமித்து உள்ளன. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த ஆக்கிரமிப்பு கடைகளால் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் மற்றும் நடந்து செல்வோர் பெரும் சிரமத்திற்கு ஆளாக வேண்டிய நிலை உள்ளது. அந்த கடைகளால் அந்தப் பகுதியில் சுகாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஆக்கிரமிப்பு கடைகளை ஒழுங்குப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -குமார், அண்ணா...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Sep 2022 4:25 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#16001

சுகாதார கேடு

மற்றவை

தர்மபுரி மாவட்டம் மாரண்ட‌அள்ளி அருகே குட்லானஅள்ளி ஊராட்சியில் குடிநீர் குழாய் அமைப்பதற்காக குழி தோண்டப்பட்டது. தற்போது இந்த பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் குழாய் அமைக்க தோண்டப்பட்ட குழியில் கழிவுநீர் தேங்கி அந்த பகுதியில் சுகாதார கேடு ஏற்படுகிறது. மேலும் அப்பகுதி மக்கள் காய்ச்சல், சளி உள்ளிட்ட நோய்களால் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே குடிநீர் குழாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -சரவணன், குட்லான‌அள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Sep 2022 4:24 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#16000

பூட்டி கிடக்கும் சுகாதார வளாகம்

மற்றவை

தர்மபுரி மாவட்டம் எ.ஜெட்டிஅள்ளி ஊராட்சி எர்ரப்பட்டியில் உள்ள மகளிர் சுகாதார வளாகத்தை சுற்றி முட்புதர்கள் முளைத்து புதர் மண்டி காணப்படுகிறது. இந்த சுகாதார வளாகத்திற்கு தண்ணீர் வசதி இல்லாததால் பெண்கள் இதனை பயன்படுத்துவது இல்லை. இதனால் மகளிர் சுகாதார வளாகம் பூட்டியே வைக்கப்பட்டுள்ளது. எனவே இதனை சீரமைத்து முட்புதர்களை அகற்றி சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -நதியா, எர்ரப்பட்டி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick