Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
16 Oct 2022 4:59 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#19766

குடிநீர் தொட்டி சீரமைக்கப்படுமா?

குடிநீர் தொட்டி சீரமைக்கப்படுமா?தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் கொட்டாய்கூர்க்காம்பட்டி முருகன் கோவில் அருகே பொதுமக்கள் பயன்பாட்டுக்காக குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. அந்த குடிநீர் தொட்டி சேதமடைந்து தண்ணீர் வீணாக வெளியே செல்கிறது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே குடிநீர் தொட்டியை சீரமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். -அஜித்குமார், ஏரியூர், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Oct 2022 4:57 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#19765

சீமைகருவேல மரங்களை அகற்ற வேண்டும்

மற்றவை

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகா ஒண்ணப்பகவுண்டனஅள்ளி ஊராட்சி தட்டாரப்பட்டி கிராமத்தில் உள்ள மயானத்தின் நுழைவு வாயிலிலும், நிழற்கூடத்திலும் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. இதனால் மயானத்துக்கு வரும் பொதுமக்கள் நிழற்கூடத்தை பயன்படுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே இந்த சீமைகருவேல மரங்களை அகற்றி தூய்மையாக வைக்க அதிகாரிகள் நடவடிக்கை முன்வருவார்களா? -கண்ணன், தட்டாரப்பட்டி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Oct 2022 4:57 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#19763

சாலையில் பெரிய பள்ளம்

சாலையில் பெரிய பள்ளம்சாலை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பஸ் நிலையத்தில் இருந்து ஓசூர் செல்லும் சாலையில் ஸ்தூபி மைதானம் அருகே சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் விபத்து ஏற்படும் அபாயமும் அதிகமாக உள்ளது. எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பழனி, பாலக்கோடு, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Oct 2022 5:09 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#19529

ஆபத்தான மின்பெட்டி

ஆபத்தான மின்பெட்டிமின்சாரம்

நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஒன்றியம் பேட்டப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மணியங்காளிப்பட்டி, செல்லாண்டியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்தநிலையில் அங்கு சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் நீரேற்று மின் மோட்டார் அரை சிறியதாக கட்டப்பட்டு மின் மோட்டார் சுவிட்ச் பொட்டி வைக்கப்பட்டிருந்தது. இது நாளடைவில் அடிப்பகுதியில் மண் சரிந்து ஒரு புறமாக சாய்ந்து எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது. அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு அதை சீர்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் உரிய...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Oct 2022 5:08 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#19528

ஆக்கிரமிக்கப்பட்ட மழைநீர் வாய்க்கால்கள்

தண்ணீர்

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பகுதியில் மழைநீர் செல்லும் வாய்க்கால்களை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் மழைநீர் செல்ல முடியாமல் வீடுகளில் புகுந்து விடுகிறது. எனவே மழைக்காலங்கள் தொடங்குவதற்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு இப் பகுதிகளில் மழைநீர் செல்லும் வாய்க்கால்களின் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -எக்னாமூர்த்தி, வெண்ணந்தூர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Oct 2022 5:07 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#19526

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை சீரமைக்கப்படுமா?சாலை

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள மரூர் பட்டியில் இருந்து முதலைப்பட்டி புதூர் செல்லும் வழியில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவில் வளைவு பகுதியில் தார்சாலை சேதமடைந்து மோசமாக காணப்படுகிறது. மேலும் சாலையில் பள்ளம் பள்ளமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு செல்கின்றனர். எனவே வாகன ஓட்டிகள் நலன் கருதி சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சந்திரன், மரூர் பட்டி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Oct 2022 5:06 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#19525

கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

போக்குவரத்து

சேலம்-ஆத்தூரில் இருந்து பெரம்பலூர் வரைக்கும் இரவில் பஸ் இயக்கப்படுவதில்லை. மேலும் கெங்கவல்லி, வீரகனூர், பெரம்பலூர் செல்ல அதிகாலை 4 மணிக்குதான் இருக்கிறது. பயணிகள் குழந்தைகளுடன் பஸ் நிலையத்தில் தங்கவேண்டி இருக்கிறது. வெளியூரிலிருந்து வருபவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல பஸ் இல்லாமல் சிரமப்படுகின்றனர். எனவே இரவு நேர பஸ் வசதி ஏற்படுத்த போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பாஸ்கர், ஆத்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Oct 2022 5:04 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#19522

சாலையில் தேங்கும் மழைநீர்

சாலையில் தேங்கும் மழைநீர்தண்ணீர்

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகா தும்பிபாடி கிராமம் முள்ளிசெட்டிப்பட்டி 4-வது வார்டில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. அந்த பள்ளி அமைந்துள்ள சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் மழை நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -பழனிவேல், முள்ளிசெட்டிப்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Oct 2022 5:03 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#19520

'தினத்தந்தி'க்கு நன்றி

ட்ரெண்டிங்

சேலம் மாவட்டம் தாரமங்கலம் நகராட்சி நங்கவள்ளி மெயின் ரோடு தொளசம்பட்டி பிரிவு ரோடு அருகில் சாலையின் நடுவே குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது என்று 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியாகி இருந்தது. இதையடுத்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் குடிநீர் குழாயை சரி செய்து தண்ணீர் வீணாகுவதை தவிர்த்தனர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட உதவிய 'தினத்தந்தி'க்கும் அந்த பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர். -பழனி, தாரமங்கலம், சேலம்.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Oct 2022 5:00 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#19506

பயன்படாத சுகாதார வளாகம்

பயன்படாத சுகாதார வளாகம்கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் முக்கல்நாயக்கன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கவலைக்காரன்கொட்டாய் கிராமத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் மற்றும் மகளிர் சுகாதார வளாகம் உள்ளது. இந்த வளாகம் திறக்கப்பட்டு ஒருசில வருடங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்ட நிலையில், தற்போது வருடக்கணக்காகியும் பயன்படாமல் காணப்படுகிறது. இந்த வளாகத்திற்கு முறையான தண்ணீர் வசதி ஏற்படுத்தி தராததால், சுகாதார வளாகம் விஷப்பூச்சிகளின் இருப்பிடமாக மாறியுள்ளதுடன் கழிப்பறை கோப்பைகள் சிதிலமடைந்து கிடக்கிறது. எனவே தண்ணீர் வசதி ஏற்பாடு செய்து, முறையாக மகளிர்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Oct 2022 4:56 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#19501

பாழடைந்த குடிநீர் தொட்டி

பாழடைந்த குடிநீர் தொட்டிதண்ணீர்

தர்மபுரி மாவட்டம் ஏரியூரில் பஸ் நிலையம், கடைவீதி மற்றும் வங்கிகள் அமைந்துள்ள மிக முக்கியமான பகுதியில் பொதுமக்களின் தேவைக்காக குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த குடிநீர் தொட்டிக்கு குடிநீர் வழங்கும் மோட்டார் பழுதடைந்தது. ஆனால் இதுவரை அந்த மோட்டார் சரி செய்யாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் குடிநீருக்காக கடும் சிரமப்படுகின்றனர். எனவே பழுதடைந்த மோட்டாரை சரிசெய்து குடிநீர் வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -மலர், ஏரியூர், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Oct 2022 4:55 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#19500

சாலையில் தேங்கும் மழைநீர்

சாலையில் தேங்கும் மழைநீர்தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் செம்மாண்டகுப்பம் கிராமத்தில் மழைக்காலங்களில் சாலையில் தண்ணீர் செல்வதற்கு வழியில்லாமல் ஊரின் நடுவில் குளம் போல் தேங்குகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் இந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நோய் பரவும் அபாயம் அதிகமாக உள்ளது. எனவே மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -கதிர், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick