Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
19 Oct 2022 4:49 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#19978

சிமெண்டு சாலை அமைக்கப்படுமா ?

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் நாகமங்கலம் கிராமத்தில் சிமெண்டு சாலை 15 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. தற்போது இந்த சாலை சேதமடைந்து உள்ளது. இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே சாலையை சீரமைத்து சிமெண்டு சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? ராஜா, நாகமங்கலம், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Oct 2022 5:22 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#19782

தரைப்பாலத்தை மூழ்கடித்த வெள்ளநீர்

தரைப்பாலத்தை மூழ்கடித்த வெள்ளநீர்சாலை

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் சின்னப்பள்ளம்பாறை கிராமம் வழியாக பொன்னார்குளம் ஏரியின் உபரி நீர் வெளியேறி செல்கிறது. இந்தநிலையில் வெள்ள நீர்வரத்து அதிகமானதால் அங்குள்ள தரைப்பாலம் மூழ்கியபடி காணப்படுகிறது. எனவே அங்குள்ள விவசாயிகள், பொதுமக்களின் நலன் கருதி தரைப்பாலத்தை மழைநீர் மூழ்காத வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சசிகுமார், சின்னப்பள்ளம்பாறை, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Oct 2022 5:22 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#19781

பூக்கடை வீதி சீரமைக்கப்படுமா?

சாலை

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டவுன் பூக்கடை வீதியில் திருமண மண்டபம், ஜவுளிக்கடைகள், வர்த்தக நிறுவனங்கள், உள்ளன. இந்த வீதியில் இரவு, பகல் பாராமல் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் எப்பொழுதும் வந்து கொண்டே இருப்பார்கள். இங்கு சில ஆண்டுகளுக்கு முன்பு வீதியில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டது. பாதாள சாக்கடை திட்டத்திற்காக பேவர் பிளாக் எடுக்கப்பட்டது. இதனால் பூக்கடை வீதி முழுவதும் குண்டும், குழியுமாக உள்ளன. மழைக்காலங்களில் குண்டும், குழியுமான சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அந்த சேறும், சகதியுமாக மாறி...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Oct 2022 5:20 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#19780

முட்செடிகளை அகற்ற வேண்டும்

முட்செடிகளை அகற்ற வேண்டும்மற்றவை

சேலம் சீலநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் கழிப்பறையை சுற்றி முட்செடிகள் வளர்ந்து உள்ளன. இதனால் விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. மாணவர்கள் கழிப்பறையை பயன்படுத்த அச்சத்துடனே செல்கின்றனர். எனவே மாணவர்களின் பாதுகாப்பு கருதி புதர் மண்டி இருக்கும் செடிகளை அகற்றி கழிப்பறையை புதுப்பிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன் வருவார்களா? -நாகேந்திரன், சீலநாயக்கன்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Oct 2022 5:15 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#19779

சேறும், சகதியுமான சாலை

சேறும், சகதியுமான சாலைசாலை

சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா 8-வது வார்டு டி.எம்.பி. நகர் சின்னயரெட்டி தெருவில் சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். சாலையில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி நிற்பதால் கொசு தொல்லையும் அதிகமாக உள்ளது. எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சீரங்கன், மேட்டூர், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Oct 2022 5:14 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#19778

சுகாதார கேடு

சுகாதார கேடுகுப்பை

சேலம் ஜாகீர் அம்மாபாளையம், சின்ன அம்மாபாளையம், ஜாகீர் ரெட்டிபட்டி ஆகிய 3 ஊர்களை இணைக்கும் இடத்தில் இறைச்சி கழிவுகளை கொட்டி செல்கின்றனர். இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியே செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். அந்த பகுதியில் சுகாதார ்கேடும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இங்கு இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜா, ஜாகீர்அம்மாபாளையம், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Oct 2022 5:08 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#19775

தாமதமாகும் அங்கன்வாடி பணி

மற்றவை

சேலம் மாவட்டம் வீரபாண்டி யூனியன் கலைஞர் நகர் பகுதியில் பள்ளி எதிரில் புதிதாக அங்கன்வாடி மையம் கட்டும் பணி தொடங்கி நடந்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக பணி நடைபெற்று வந்த நிலையில் தற்போது அந்த பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. அங்கன்வாடி மையம் பழைய ஓட்டு வீடு கட்டிடத்தில் இயங்கி வருகிறது. எனவே விரைந்து பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா? - ச.ராஜேஷ்குமார், வீரபாண்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Oct 2022 5:05 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#19772

பஸ்கள் நின்று செல்ல வேண்டும்

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி நேரங்களில் மாணவ, மாணவிகள் பஸ்களில் சென்று படித்து வருகின்றனர். இந்தநிலையில் குறிப்பிட்ட இடங்களில் ஒரு சில டவுன் பஸ்கள் நிறுத்தங்களில் நிறுத்தாமல் செல்கின்றன. இதனால் மாணவர்கள் சரியான நேரத்திற்கு பள்ளிக்கு செல்ல முடிவதில்லை. எனவே மாணவர்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ் நிறுத்தங்களில் மாணவர்களை ஏற்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராமு, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Oct 2022 5:04 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#19771

அடிப்படை வசதி தேவை

கழிவுநீர்

கிருஷ்ணகிரி தேவ சமுத்திரம் ஊராட்சி முல்லைநகர் அக்ரஹாரம் பகுதிகளில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பது வாடிக்கையாக உள்ளது. இந்த பகுதிகளில் லேசான மழை பெய்தால் கூட வீட்டைச்சுற்றி மழைநீர் சூழ்ந்து விடுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் மழைக்காலங்களில் மிகுந்த தொல்லைக்கு உள்ளாகின்றனர். மேலும் மழைக்காலங்களில் தெரு விளக்குகளும் சரியாக எரிவதில்லை. சாக்கடை கால்வாய் வசதி உள்பட எந்த வசதியும் இல்லாததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Oct 2022 5:03 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#19770

பஸ் நிலையத்தை ஆக்கிரமித்த வாகனங்கள்

பஸ் நிலையத்தை ஆக்கிரமித்த வாகனங்கள்போக்குவரத்து

ஓசூர் பஸ் நிலையத்தில் தினந்தோறும் ஏராளமான பயணிகள் வந்து செல்கிறார்கள். இந்தநிலையில் பயணிகள் உட்காரும் இடத்தில் மோட்டார் சைக்கிள்கள் வரிசையாக நிறுத்து வைக்கப்பட்டுள்ளன. இதனால் பயணிகள், வயதானவர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் நாளுக்குநாள் மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தும் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பயணிகள் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே பஸ் நிலையத்தில் மோட்டார் சைக்கிள்களை நிறுத்துவதை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுதாகர், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Oct 2022 5:02 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#19768

ஆபத்தான கட்டிடம்

ஆபத்தான கட்டிடம்மற்றவை

கிருஷ்ணகிரி அருகே ஆலப்பட்டி காலனியில் அங்கன்வாடி கட்டிடம் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் ஆபத்தாக உள்ளது. இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா? -முனுசாமி, ஆலப்பட்டி காலனி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Oct 2022 5:00 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#19767

குரங்குகள் தொல்லை

மற்றவை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா சிக்கமாரண்டஅள்ளி ஊராட்சியில் குரங்குகள் தொல்லை அதிகரித்து வருகிறது. குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்துகிறது. மேலும் சாலையில் வாகனங்களில் செல்பவர்களை துரத்துவதால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே இந்த குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மணி, சிக்கமாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick