Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
19 Oct 2022 5:22 PM GMT
Mr.Nagarajan | சேலம்-தெற்கு
#20014

எரியாத மின்விளக்குகள்

மின்சாரம்

சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா முத்தம்பட்டி சாலையில் உள்ள மின்விளக்கு கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக எரியவில்லை. இதனால் அந்த பகுதியில் செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் திருட்டு அச்சமும் அதிகமாக உள்ளது. எனவே இந்த மின்விளக்கை எரிய செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மணிகன்டன், ஓமலூர், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Oct 2022 5:21 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#20013

பயனற்ற குப்பை வண்டி

மற்றவை

சேலம் மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு குப்பை அள்ள மோட்டார் வாகனம் கொடுக்கப்பட்டது. அந்த மோட்டார் வாகனம் பழுதடைந்து பயன்படாமல் உள்ளது. இதனால் தூய்மை பணியாளர்கள் கைவண்டியை உபயோகப்படுத்தி வருகின்றனர். எனவே இந்த வாகனத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். -மணிகண்டன், ஆண்டிபட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Oct 2022 5:20 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#20012

ஆபத்தான கழிவுநீர் கால்வாய்

கழிவுநீர்

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே துத்திக்குளம் அண்ணா சிலை அருகில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தம் அருகே உள்ள கழிவு நீர் கால்வாய் மூடப்படாமல் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அங்கு வரும் பொதுமக்கள் துர்நாற்றத்தால் அவதியடைகின்றனர். மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த கழிவு நீர் கால்வாயை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் -சந்தோஷ், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Oct 2022 5:19 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#20011

மதுபிரியர்கள் ஆக்கிரமித்த நிழற்கூடம்

மற்றவை

நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுகா பாலப்பட்டியில் இருந்து வள்ளிபுரம் செல்லும் சாலையில் பாலப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்குள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்கூடம் உள்ளது. இங்கு இரவு நேரங்களில் நிழற்கூடத்தில் மதுபிரியர்கள் மது அருந்திவிட்டு பாட்டில்களை அங்கேயே போட்டுவிட்டு செல்கின்றனர். இதனால் பயணிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுப்ரமணி, பாலப்பட்டி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Oct 2022 5:16 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#20010

குண்டும், குழியுமான சாலை

சாலை

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் சப்பையாபுரம் பஸ் நிறுத்தம் அருகே உடைந்த காவிரி குடிநீர் குழாயை சரி செய்ய குழி தோண்டப்பட்டது. இந்த குழியை மூடிய பிறகும் இதுவரை சாலை அமைக்கப்படவில்லை. இந்த சாலை குண்டும், குழியுமாக உள்ளது. சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் தட்டுத் தடுமாறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி புதிய தார் சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ரஞ்சிதா, அலவாய்ப்பட்டி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Oct 2022 4:56 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#19990

தெருவிளக்குகள் எரியுமா?

மின்சாரம்

தர்மபுரி டவுன் பஸ் நிலையம் அருகில் அண்ணாதுரை ரோட்டில் ஏராளமான வணிக வளாகங்கள், கடைகள், மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. எப்போதும் பரபரப்பாக இருக்கும் இந்த தெருவில் விளக்குகள் எரியாததால் இரவு நேரத்தில் அந்த வழியாக செல்வோர் அச்சப்படுகின்றனர். எனவே இந்த தெரு விளக்குகள் எரிவதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? -கண்ணன், அண்ணாதுரை சாலை, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Oct 2022 4:55 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#19987

தரமற்ற குடிநீர் குழாய்

தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் புட்டிரெட்டிப்பட்டி ஊராட்சியில் 15 -வது நிதி குழு மானிய நிதியில் இருந்து ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக அமைக்கப்படும் குடிநீர் குழாய்கள் தரமற்ற முறையில் அமைக்கப்படுகிறது. இதனால் குடிநீர் குழாய்கள் அமைத்த சில நாட்களிலேயே சேதமடைகிறது. எனவே தரமான முறையில் குடிநீர் குழாய்களை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -பழனிவேல், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Oct 2022 4:54 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#19986

சுற்றுசுவர் அமைக்கப்படுமா?

மற்றவை

தர்மபுரி மாவட்டம் மானியதஅள்ளி ஊராட்சி ஜருகு பெரிய ஏரி பகுதியில் மயானம் உள்ளது. தற்போது பெய்து வரும் தொடர் மழைக்கு ஏரி முழுமையாக நிரம்பியுள்ளது. இதனால் மயானம் மழைநீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இயற்கை மரணம் அடைவோரை அடக்கம் செய்ய முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் அவதிகுள்ளாகி வருகிறார்கள். எனவே மயானத்தை சுற்றியும் சுற்றுச்சுவர் அமைத்து மழைநீர் புகாதவாறு பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -கிரி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Oct 2022 4:53 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#19985

சீரமைக்க வேண்டிய குடிநீர் தொட்டி

தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி எம்.செட்டி அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த குடிநீர் தொட்டியின் சுவர் இடிந்த நிலையில் தண்ணீர் வீணாகிறது. இந்த தொட்டியை சரி செய்ய பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே குடிநீர் தொட்டியை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாரியப்பன், எம். செட்டி‌அள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Oct 2022 4:52 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#19983

சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள்

மற்றவை

கிருஷ்ணகிரியில் சென்னை சாலை, பெங்களூரு சாலை உட்பட நகரின் பல இடங்களில் சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் தாலுகா அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் மாடுகள் அதிக அளவில் சுற்றித் திரிகின்றன. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே மாடுகளை சாலைகளில் மேய விடுபவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சதீஷ், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Oct 2022 4:51 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#19981

மின்கம்பத்தை அகற்ற வேண்டும்

மின்சாரம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா மகனூர்பட்டி ஊராட்சி விசுவாசம்பட்டி கிராமத்தில் மின்கம்பம் நடுவீதியில் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு சாலையின் ஓரத்தில் மின்கம்பம் அமைக்க வேண்டும். -அண்ணாமலை, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Oct 2022 4:50 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#19979

மதுபிரியர்கள் தொல்லை

மற்றவை

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகே மதுபான கடையில் மது வாங்கி வந்து அருகே உள்ள காலி இடத்தில் மது குடிக்க மது பிரியர்கள் அதிகளவில் கூடுகின்றனர். குடித்து விட்டு காலி பாட்டில்களை உடைத்துவிட்டு செல்கின்றனர். இதனால் அந்த வழியே செல்லும் பயணிகள், பொது மக்கள் ஒருவித அச்சத்துடன் செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஆறுமுகராஜ், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick