Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
23 Oct 2022 4:14 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#20228

நோய் பரவும் அபாயம்

குப்பை

நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுகா எஸ்.வாழவந்தி செல்லாண்டியம்மன் கோவில் முன்பு தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் இந்த பகுதியில் கொசு உற்பத்தி ஆகி நோய் பரவும் அபாயம் அதிகமாக உள்ளது. மழை காலங்களில் அடிக்கடி இதுபோல் தண்ணீர் தேங்குவதால் சாலையும் சேதமாகிறது. எனவே இந்த தண்ணீரை அகற்றி, தண்ணீர் தேங்காதவாறு சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சிவா, மோகனூர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Oct 2022 4:13 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#20226

ஆபத்தான டிரான்ஸ்பார்மர்

மின்சாரம்

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரில் இருந்து ஆட்டையாம்பட்டி செல்லும் மெயின் ரோட்டில் மின்னக்கல் பிரிவு அருகே ஆபத்தான நிலையில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. தாழ்வான பகுதியில் உள்ள இந்த டிரான்ஸ்பார்மர் மழை காலங்களில் தண்ணீரில் மூழ்குகிறது. இதனால் மின் விபத்துகள் ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது. எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன் இதனை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -அருள்மார், வெண்ணந்தூர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Oct 2022 3:22 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#20215

மூடப்படாத கிணறு

மற்றவை

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே நாகமரை ஊராட்சி நெருப்பூர் அரசு தொடக்கப்பள்ளி முன்பு அரசு பொது கிணறு உள்ளது. அரசு பள்ளியின் நுழைவுவாயில் எதிரில் இருக்கும் இந்த கிணறு மூடப்படாமல் திறந்தவெளியில் உள்ளது. இதன் காரணமாக பள்ளி மாணவர்கள் இந்த கிணற்றை எட்டி பார்க்கும் போது தவறி உள்ளே விழுந்துவிடும் அபாயம் உள்ளது. எனவே இந்த கிணற்றை பாதுகாப்பாக மூடி வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். -சந்தோஷ், ஏரியூர், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Oct 2022 3:15 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#20214

ஆபத்தான பள்ளம்

சாலை

தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் நுழைவுவாயில் பகுதியில் பயணியர் நிழற்கூடத்திற்கு முன்பகுதியில் ஆபத்தான பள்ளம் உள்ளது. இங்கு அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. எனவே இந்த பள்ளத்தை உடனடியாக சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் -காவியஸ்ரீ, பென்னாகரம், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Oct 2022 3:13 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#20213

விளையாட்டு அரங்கில் தெருநாய்கள் நடமாட்டம்

மற்றவை

தர்மபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் 10-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றி வருகின்றனர். இவை அங்கு விளையாடும் விளையாட்டு வீரர்களுக்கும், நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களையும் துரத்துகிறது. இதனால் அங்கு வரும் பொது மக்களும் அச்சப்படுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இந்த தெருநாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். -கண்ணன், குமாரசாமிப்பேட்டை, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Oct 2022 3:12 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#20211

கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படுமா ?

கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியில் எம்.செட்டி‌அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளிச்சந்தை செல்லும் சாலையில் தனியார் பள்ளி முன் உள்ள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு நோய் பரவும் அபாயமும் அதிகமாக உள்ளது. எனவே இந்த கழிவுநீர் கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -குணசேகரன், மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Oct 2022 2:53 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#20205

புதர் மண்டிய கழிவுநீர் கால்வாய்

கழிவுநீர்

கிருஷ்ணகிரி நகராட்சி கோ-ஆப் காலனி 3-வது கிராஸ்க்கு உட்பட்ட கழிவுநீர் கால்வாய் பல மாதங்களாக தூர்வாராமல் புதர்மண்டி கிடக்கிறது. மழைக்காலங்களில் மழைநீர் கழிவுநீருடன் கலந்து சாலையில் செல்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் அதிகமாக உள்ளது. எனவே இந்த கழிவுநீர் கால்வாயை உடனடியாக தூர்வார நடவடிக்கை எடுக்கப்படுமா? -பார்த்திபன், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Oct 2022 2:52 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#20204

தாழ்வாக செல்லும் மின்கம்பி

மின்சாரம்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் இருந்து கொண்டப்பநாயனப்பள்ளி செல்லும் சாலையில் தேர்முட்டி என்னும் இடத்தில் மின்கம்பிகள் தாழ்வாக செல்கிறது. இதனால் வாகனங்கள் செல்லும் போது விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே இந்த மின்கம்பிகளை சரி செய்து உயர்த்தி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கேசவன், பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Oct 2022 2:51 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#20202

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வெங்கடேஷ் நகரில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. சாலையில் நடந்து செல்பவர்களையும், வாகனங்களில் செல்பவர்களையும் துரத்துவதால் அவர்கள் விபத்துகளில் சிக்குகிறார்கள். எனவே இந்த தெரு நாய்களை பிடித்து செல்ல மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பாலாஜி, வெங்கடேஷ் நகர், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Oct 2022 2:50 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#20200

குண்டும், குழியுமான சாலை

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஆர்.சி. தேவாலயம் முதல் ெரயில்வேகேட் வரை உள்ள ரிங் ரோடு சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஒட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் அடிக்கடி கீழே விழுந்து அடிபடுகிறார்கள். எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -நாகராஜ், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Oct 2022 5:24 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#20016

குடிநீர் குழாய் இணைப்பு வேண்டும்

தண்ணீர்

சேலம் மாவட்டம் காடையம்பட்டி தாலுகா வே.கொங்கரப்பட்டி கிராமத்தில் பல ஆண்டுகளாக குடிநீர் குழாய் இணைப்பு இல்லாததால் அந்த பகுதி மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். மேலும் அங்குள்ள தரைமட்ட குழாயில் தரையில் அமர்ந்து டப்பரவில் பிடித்து குடத்தில் தண்ணீர் பிடிக்கும் நிலை உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் குழாய் கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கைலாஷ், காடையம்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Oct 2022 5:23 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#20015

எரியாத மின்விளக்குகள்

மின்சாரம்

சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகா இருப்பாளி வார சந்தை அருகில் உள்ள உயர் கோபுர மின்விளக்கு பழுதடைந்த உள்ளது. இதனால் இப்பகுதி இருளில் மூழ்கியுள்ளது. வியாபாரிகள், பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த உயர்கோபுர மின்விளக்கை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கார்த்தி, எடப்பாடி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick