Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
26 Oct 2022 4:06 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#20448

சாலையில் பெரிய பள்ளம்

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூரில் இருந்து பேரிகை செல்லும் சாலையில், முகுலபள்ளி கேட் அருகே நடுரோட்டில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்லும் நிலையில், பள்ளம் இருப்பதை தெரியாமல் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே இந்த பள்ளத்தை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -எம்.சீனிவாசன், முகுலபள்ளி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Oct 2022 4:06 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#20447

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை பேரூராட்சியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. இரவு நேரத்தில் பஸ் நிலையத்தில் இருந்து வீட்டிற்கு செல்பவர்களை துரத்தி துரத்தி கடிக்கின்றன. கூட்டம் கூட்டமாக சுற்றித்திரியும் அந்த தெருநாய்களால் காலையில் நடைபயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்களுக்கு மிக தொல்லை தருகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி தெருநாய்களை பிடித்து செல்ல வேண்டும். -விஸ்வநாத், தேன்கனிகோட்டை, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Oct 2022 4:05 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#20446

வேகத்தடை அமைக்கப்படுமா?

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே எச்சம்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் எச்சம்பட்டி, குரும்பட்டி, ஜோடுஆலமரம், ஜீவாநகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள் தர்மபுரி செல்லும் மெயின்ரோட்டை கடந்து தான் பள்ளிக்கு சென்று வருகின்றனர். இந்த வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே இப்பகுதியில் இருபுறமும் வேகத்தடை அமைக்க வேண்டும். -முருகன், ராயக்கோட்டை,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Oct 2022 4:05 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#20444

சாலையோரம் குவியும் குப்பைகள்

சாலையோரம் குவியும் குப்பைகள்குப்பை

தர்மபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் பேரூராட்சி பகுதிகளில் சேகரிக்கும் குப்பைகள் மற்றும் கழிவுகளை குப்பை கிடங்கில் கொண்டு போய் கொட்டாமல் ஏற்காடு செல்லும் சாலை ஓரங்களில் கொட்டுகின்றனர். இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் அங்கு துர்நாற்றம் வீசி பொதுமக்கள் கடுமையாக காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்கு ஆளாகின்றனர். பொதுமக்கள் நலன் கருதி பேரூராட்சி நிர்வாகம் இந்த குப்பைகளை அகற்றி குப்பை கிடங்கில் கொட்ட நடவடிக்கை எடுப்பார்களா? -பழனிதுரை, பொம்மிடி,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Oct 2022 4:03 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#20443

சாலையை புதுப்பிக்கலாமே!

சாலையை புதுப்பிக்கலாமே!சாலை

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சி மெயின் ரோடு பழைய பஸ் நிலையத்தில் இருந்து நான்கு ரோடு வரை உள்ள பகுதியில் குடிநீர் குழாய் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. அந்த பணிகள் முடிந்தும் இதுவரை கால்வாய் சரியாக சீரமைக்காததால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர். மேலும் குடிநீர் குழாய் அமைக்கும் பணி முடிந்த நிலையிலும் சாலை சீரமைக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை பள்ளத்தை சீரமைத்து சாலையை புதுப்பிக்க முன் வரவேண்டும். - சம்பத், மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Oct 2022 4:02 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#20442

பஸ் நிலையத்தில் இருக்கைகள்

போக்குவரத்து

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, சேலம், அரூர் ஆகிய பகுதிகளுக்கு தினந்தோறும் 50-க்கும் மேற்பட்ட பஸ்கள் சென்று வருகின்றன. இந்த பஸ்களில் சென்று வர சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் இந்த பஸ் நிலையத்திற்கு தினந்தோறும் வருகின்றனர். அவ்வாறு வரும் மக்களுக்கு பஸ் நிலையத்தில் உட்கார இடம் இல்லாமல் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். எனவே பயணிகள் பஸ் நிலையத்தில் உட்கார நாற்காலிகளை ஏற்படுத்தி தர பேரூராட்சி நிர்வாகம்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Oct 2022 4:02 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#20441

ஆக்கிரமிப்பால் பயணிகள் அவதி

போக்குவரத்து

தர்மபுரி புறநகர் பஸ் நிலையத்தில் அரூர் பஸ்கள் நிற்கும் இடத்தின் அருகே பயணிகள் நடைபாதையை ஆக்கிரமித்து நாற்காலிகள் போடப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் கடும் சிரமப்பட்டு செல்கின்றனர். எனவே பயணிகள் நலன் கருதி நகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி பயணிகள் சிரமம் இன்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். -பூதேவி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Oct 2022 4:20 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#20237

சேறும், சகதியுமான சாலை

சாலை

சேலம் மாவட்டம் நிலவாரப்பட்டி சவுடாம்பிகா நகரில் மஞ்சள் குடோன் அருகில் உள்ள சாலை சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் வாகனங்களில் செல்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -செல்வகுமார், சீலநாயக்கன்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Oct 2022 4:19 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#20235

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

சேலம் மாவட்டம் ஓமலூரிலிருந்து மேச்சேரி செல்லும் பிரதான சாலையில் இடைவிடாது போக்குவரத்து நெரிசல் இருந்து கொண்டே இருக்கிறது. இப்பகுதியில் தாசில்தார் அலுவலகம், போலீஸ் நிலையம், அரசு மருத்துவமனை, கால்நடை மருத்துவமனை, பத்திரப்பதிவு அலுவலகம், வங்கிகள், திரையரங்கம் ஆகியவை நிறைந்துள்ளதால் பொதுமக்கள் எந்நேரமும் பயன்படுத்தும் பிரதான சாலையாக இது உள்ளது. எனவே இந்த சாலை பணியை விரைவு படுத்த சமந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கிஷோர், ஓமலூர், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Oct 2022 4:18 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#20233

ஆபத்தான மின்கம்பம்

மின்சாரம்

சேலம் சிவதாபுரம் 22-வது வார்டில் உள்ள சாக்கடை கால்வாயின் நடுவே மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. மழை காலங்களில் ஏதேனும் விபத்துகள் ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது. அந்த பகுதி வழியாக பொது மக்கள் அதிக அளவில் செல்வதால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன் இந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பெருமாள், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Oct 2022 4:17 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#20232

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

சேலம் தாதகாப்பட்டியில் உள்ள அம்பாள் ஏரி ரோடு மற்றும் தாதகப்பட்டியில் உள்ள சாலைகள் பாதாள சாக்கடை பணிக்காக பல மாதங்களுக்கு முன்பு தோண்டப்பட்டன. பின்னர் அவை சீரமைக்கப்பட வில்லை. இதனால் சாலையில் நடந்து செல்பவர்களும், வாகனங்களில் செல்பவர்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே குழிகளை மூடி, சாலைகளை சீரமைக்க வேண்டும். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -மணிகண்டன், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Oct 2022 4:16 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#20230

குப்பைகள் அகற்றப்படுமா?

குப்பை

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள முத்துகாப்பட்டி மெயின் ரோட்டில் சிலர் குப்பைகளை கொட்டி வந்தனர். அதை தடுக்கும் விதமாக ஊராட்சி பெண் உறுப்பினர்கள் அந்த இடத்தில் கோலம் போட்டு சுத்தம் செய்தனர். ஆனால் மீண்டும் அந்த இடத்தில் குப்பை கொட்டப்படுகிறது. எனவே இங்கு குப்பைகள் கொட்டப்படாமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -அருள் ராஜேஷ், முத்துகாப்பட்டி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick