Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
30 Oct 2022 3:51 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#20637

கழிவுநீர் கால்வாய் தேவை

கழிவுநீர் கால்வாய் தேவைகழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி கொரவாண்ட‌அள்ளி சாலையில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பள்ளம் வெட்டி அதில் கழிவுநீர் செல்ல வழிவகை செய்தனர். இந்த பகுதியில் சிறுவர்கள் அதிகம் விளையாடுகிறார்கள். அவ்வாறு சிறுவர்கள் விளையாடும் போது பள்ளத்தில் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -கணேசன், மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Oct 2022 3:49 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#20636

விதிமுறைகளை மீறும் வாகனங்கள்

போக்குவரத்து

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாயில் உள்ள சேலம்- தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் நாள்தோறும் வாகனங்களை தனியார் பஸ்கள் முந்தி செல்கின்றன. இதனால் அப்பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் இரு சக்கர வாகன ஓட்டிகளும் இந்த பகுதியில் செல்லும் போது கடும் சிரமப்படுகின்றனர். எனவே விபத்துகளை தடுக்க விதிமுறைகளை மீறி செல்லும் வாகனங்கள் மீது போக்குவரத்து துறை போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பழனிவேல், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Oct 2022 3:47 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#20635

ஆபத்தான பள்ளம்

ஆபத்தான பள்ளம்சாலை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு மாரியப்பசெட்டி தெருவில் சாக்கடை கால்வாயின் மேல் அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் பாலம் கடந்த 6 மாதங்களுக்கு முன் சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே ஆபத்தான பாலத்தை சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -சந்தோஷ், பாலக்கோடு, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Oct 2022 3:45 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#20633

சேதமடைந்த பள்ளி சுற்றுச்சுவர்

சேதமடைந்த பள்ளி சுற்றுச்சுவர்மற்றவை

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே ராமகொண்டஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட புதுப்பால சமுத்திரத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் உள்ள சுற்றுச்சுவர் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன் பள்ளி சுற்றுச்சுவரை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - செல்வபதி, ஏரியூர், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Oct 2022 4:21 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#20466

மூடப்படாத குழிகள்

மூடப்படாத குழிகள்சாலை

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் அக்னி மாரியம்மன் கோவில் முன்புறம் உள்ள சாலையில் குடிநீர் குழாயை சீரமைப்பதற்காக குழி தோண்டப்பட்டது. இந்தநிலையில் குழாய் சீரமைக்கும் பணிகள் முடிந்தும் இதுவரை அந்த குழி மூடாமல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் கோவிலுக்கு வருகின்றவர்களும், பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே குழியை உடனடியாக மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாதேஸ்வரன், பள்ளிபாளையம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Oct 2022 4:20 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#20465

ஆபத்தான பள்ளம்

ஆபத்தான பள்ளம்சாலை

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே வலையபட்டி வள்ளுவர் நகரில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பயன்படாமல் இருந்த ஒரு வட்டக்கிணறு மூடப்பட்டது. இந்தநிலையில் சில மாதங்களில் மூடப்பட்ட கிணறு வட்டமான அளவில் பெரிய பள்ளம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அந்த பகுதியில் குழந்தைகள், கால்நடைகள், இருசக்கர வாகனங்கள், செல்லும் போது தவறி விழுந்து விடுகின்றனர். அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கிணற்றை முழுமையாக மூட வேண்டும். -கவின், வலையபட்டி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Oct 2022 4:19 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#20463

புதருக்குள் பூங்கா

புதருக்குள் பூங்காபூங்கா

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே பச்சுடையாம்பட்டி ஊராட்சி மெயின் ரோட்டில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பாக அம்மா பூங்கா அமைக்கப்பட்டது. அந்த பூங்காவில் நடை பயிற்சி, பொழுதுபோக்கு உள்பட பல்வேறு வகையில் மக்களுக்கு பயனுள்ளதாக இருந்து வந்தது. ஆனால் தற்போது பூங்கா பராமரிப்பு இன்றி செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காட்சி அளிக்கிறது. எனவே பூங்காவை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கொண்டு வருவார்களா என அந்த பகுதி மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர். -மகாலட்சுமி, பச்சுடையாம்பட்டி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Oct 2022 4:18 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#20461

தடையில்லாமல் டிக்கெட் வழங்கப்படுமா?

மற்றவை

சேலம் பழைய சூரமங்கலம் கூட் ஷெட் அருகே ரெயில் டிக்கெட் புக்கிங் மையம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மற்றும் ரெயில் பயணிகள் டிக்கெட் முன் பதிவு செய்தும், முன்பதிவில்லா ரெயில் டிக்கெட் எடுத்து பயன்பெற்று வருகின்றனர். இந்த மையத்தில் அடிக்கடி மின்சாரம் தடை மற்றும் டிக்கெட் வழங்கும் எந்திரம் பழுதாகி விடுகிறது. இதனால் அங்கு ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய வருபவர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் டிக்கெட் எடுக்காமல் திரும்பி செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட சேலம் ரெயில்வே கோட்ட...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Oct 2022 4:18 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#20459

வேகத்தடைக்கு வர்ணம்

சாலை

சேலத்தில் இருந்து கோரிமேடு வழியாக செட்டிச்சாவடி பகுதிக்கு திடக்கழிவு மேலாண்மை மையத்திற்கு சேலம் மாநகராட்சி உட்பட்ட பகுதியிலிருந்து கனரக வாகனங்கள் மூலம் குப்பைகள் சேகரித்து கொண்டு வரப்படுகின்றன. இந்தநிலையில் அந்த பகுதிகளில் உள்ள சாலைகளில் பல்வேறு இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு வேகத்தடை இருப்பது தெரிவதில்லை. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வேகத்தடைக்கு வர்ணம் பூச வேண்டும். -மாரியப்பன், சேணை கவுண்டனூர், சேலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Oct 2022 4:16 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#20456

பயன்படாத குடிநீர் குழாய்

பயன்படாத குடிநீர் குழாய்தண்ணீர்

சேலம் ஒன்றியம் ஆண்டிப்பட்டி ஊராட்சியில் லட்சுமி நகர், நாடார் தெரு ஆகிய வீதிகளில் பொதுமக்களின் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க இரும்பு குடிநீர் குழாய் அமைக்க பணிகள் நடந்தது. இந்தநிலையில் குடிநீர் குழாய் அமைத்து 8 மாதம் ஆகியும் பயன்பாட்டுக்கு கொண்டுவரவில்லை. இதனால் இரும்பு குழாய் துருப்பிடித்து காணப்படுகிறது. மேலும் மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். -மணிகண்டன், ஆண்டிப்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Oct 2022 4:15 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#20455

சாலை வசதி தேவை

சாலை

சேலம் மாவட்டம் மேச்சேரி ஒன்றியம் எம்.என்.பட்டி கிராமம் கோவிலூர் காலனியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அந்த பகுதிக்கு சாலை வசதி ஏற்படுத்தி தரவில்லை. இதனால் ரெயில்வே பாலம் வழியாகத்தான் செல்கின்றனர். மழைக்காலங்களில் பாலத்தின் இருபுறமும் தண்ணீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தொளசம்பட்டி முதல் மேச்சேரி வரை உள்ள தார் சாலையோடு இணைத்து அந்த பகுதிக்கு இணைப்பு சாலை அமைத்து கொடுக்க வேண்டும். -சி.முத்துசாமி,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Oct 2022 4:07 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#20450

தூய்மை இல்லாத குடிநீர்தொட்டி

தண்ணீர்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பேரூராட்சி 15-வது வார்டு கரீம் சாகிப் தெருவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக புதியதாக 2 குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அந்த குடிநீர் தொட்டியை சுற்றிலும் கட்டிட கழிவுகள் மற்றும் குப்பைகளை கொட்டி வைத்துள்ளனர். இதனால் குடிநீர் பிடிப்பதில் பொதுமக்களுக்கு மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீர் தொட்டியை சுற்றி உள்ள கழிவுகளை அகற்றி தூய்மையாக வைக்க வேண்டும். -மணி, பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick