Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
2 Nov 2022 4:18 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#20867

சுற்றுச்சுவர் இல்லாத பள்ளி

சுற்றுச்சுவர் இல்லாத பள்ளிமற்றவை

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே நாகமரை அரசு நடுநிலைப்பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அந்த அரசு பள்ளிக்கு அமைக்கப்பட்ட சுற்றுச்சுவர் சேதமடைந்து இடிந்து விழுந்து விட்டது. அதனை தொடர்ந்து நீண்ட நாட்களாக சுற்றுச்சுவர் இல்லாமல் உள்ளது. பென்னாகரம் நாகமரை பிரதான சாலையோரம் அமைந்துள்ள இந்த பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லாமல் ஆபத்தான முறையில் அமைந்துள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும். -செந்தில்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Oct 2022 4:39 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#20665

ஆபத்தான மின்கம்பம்

மின்சாரம்

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக்கு செல்லும் 51-வது கொண்டை ஊசி வளைவில் சாலை ஓரத்தில் மின் கம்பம் சேதமடைந்து சாய்ந்த நிலையில் உள்ளது. எனவே ஆபத்தான இந்த மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும். அல்லது புதிதாக மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -விஷால், கொல்லிமலை, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Oct 2022 4:38 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#20664

கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும்

கழிவுநீர்

நாமக்கல் நகராட்சி 17-வது வார்டு லட்சுமி நகரில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால் பொதுமக்கள் அவதியடைகின்றனர். இந்த பகுதியில் இருந்த வெளியேறும் கழிவுநீர் சாலையில் செல்வதால் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்று நோய் பரவும் அபாயம் அதிகமாக உள்ளது. எனவே இப்பகுதியில் முறையான கழிவுநீர் கால்வாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜா, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Oct 2022 4:37 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#20663

பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்படுமா?

மற்றவை

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தில் நிழற்கூடம் இல்லை. இதனால் மழைகாலங்களில் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே பொது மக்களின் நலன்கருதி இந்த பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? -வாசகி, அலவாய்ப்பட்டி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Oct 2022 4:35 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#20662

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

சேலம் அமானி கொண்டலாம்பட்டி காட்டூர் சாமி நகர் சிலோன் காலனி பகுதியில் தெருநாய்கள் அதிகமாக காணப்படுகிறது. இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் சாலைகளில் நடந்து செல்வோரை துரத்துவதால் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். மேலும் வாகனங்களில் செல்வோரை துரத்துவதால் அவர்கள் கீழே விழுந்து அடிபடுகின்றனர். எனவே இந்த தெருநாய்களை பிடித்து செல்ல மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -தியாகராஜன், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Oct 2022 4:34 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#20661

குப்பைகளை அகற்ற வேண்டும்

குப்பைகளை அகற்ற வேண்டும்குப்பை

சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா காமலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆர்.சி. செட்டிப்பட்டி அரசு நிதியுதவி பெறும் நடுநிலைப்பள்ளிக்கு பின்புறம் பல மாதங்களாக குப்பைகள் தேங்கி காட்சியளிக்கிறது. இதனால் அங்கு கொசுக்கள் உற்பத்தியாகி, பள்ளி மாணவர்களுக்கு டெங்கு, மலோியா போன்ற நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -கேசவன், ஓமலூர், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Oct 2022 4:33 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#20660

சேதமடைந்த குடிநீர் குழாய்

சேதமடைந்த குடிநீர் குழாய்தண்ணீர்

சேலம் மாவட்டம் மேச்சேரி தாலுகா பானாபுரம் கிராமத்தில் தைலகவுண்டன் வளைவில் குடிநீர் குழாய் (அடிபம்பு) சேதமடைந்து உள்ளது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொது மக்கள் குடிநீருக்காக கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே அதிகாரிகள் இந்த குடிநீர் குழாயை சரி செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -சேகர், மேச்சேரி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Oct 2022 4:29 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#20658

சேதமடைந்த கட்டிடம்

சேதமடைந்த கட்டிடம்மற்றவை

சேலம் சூரமங்கலத்தில் உள்ள உழவர் சந்தையில் தினமும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காய்கறிகள் வாங்க வந்து செல்கின்றனர். இந்த உழவர் சந்தையை ஒட்டியுள்ள மாநகராட்சி கட்டிடம் பழுதடைந்து கான்கிரீட் பெயர்ந்து விழுந்து வருகின்றன. இந்த கட்டிடத்தையொட்டி காய்கறிகள் வாங்க வரும் பொதுமக்கள் மிகவும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும் இதன் அருகே காய்கறி விற்பவர்கள் பயத்துடன் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த கட்டிடத்தை சீரமைக்க வேண்டும். -முருகேசன், சூரமங்கலம்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Oct 2022 3:57 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#20641

சேதமடைந்த சாலை

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா மருதாண்டபள்ளி ஊராட்சிக்குட்பட்ட மில்லத் நகரில் உள்ள சாலை சேதமடைந்துள்ளது. இந்த சாலையை சீரமைத்து சிமெண்டு சாலையாக அமைத்து தர வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இந்த சாலையை சீரமைத்து புதிய சிமெண்டு சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சிவம், சூளகிரி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Oct 2022 3:56 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#20640

சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

தண்ணீர்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா மல்லப்பாடி ஊராட்சியில் கரிய கவுண்டர் தெருவில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி 15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. தற்போது அவற்றின் தூண்கள் சேதமடைந்து உள்ளது. மேலும் நீர்த்தேக்க தொட்டிக்கு செல்லும் ஏணியின் படிகளும் துருப்பிடித்து விழுந்து விட்டதால் தொட்டியை சுத்தம் செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ரவி, பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Oct 2022 3:55 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#20639

குப்பைகள் அகற்றப்படுமா?

குப்பைகள் அகற்றப்படுமா?குப்பை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா காரப்பட்டு ஊராட்சியில் திருப்பத்தூர் செல்லும் சாலையோரம் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். -கண்ணன், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Oct 2022 3:53 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#20638

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

ஓசூர் விகாஸ் நகர் பகுதியில் உள்ள அனைத்து தெருக்களிலும் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோரை துரத்துவதால் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் தெருநாய்களை பிடித்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுப்பிரமணியன், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick