Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
12 Oct 2022 4:55 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#19498

பாதியில் நிற்கும் கழிவுநீர் கால்வாய் பணி

பாதியில் நிற்கும் கழிவுநீர் கால்வாய் பணிகழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் பாலக்கோடு சாலையில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி பல மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால் பணிகள் முடிக்கப்படாமல் அரைகுறையாக நிறுத்தப்பட்டது. இதனால் இந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். -கண்ணன், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Oct 2022 4:52 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#19495

வேகத்தடை அவசியம்

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஒன்றியம் ராயக்கோட்டையில் இருந்து பாலக்கோடு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் எச்சம்பட்டி பஸ் நிறுத்தம் உள்ளது. இதன் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் தனியார் பால் கொள்முதல் நிலையம் உள்ளது. தினமும் நூற்றுக்கணக்கான பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் இந்த நெடுஞ்சாலையை கடந்து தான் செல்லவேண்டும். இதனால் இங்கு அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள், பள்ளி மாணவர்களின் நலன் கருதி பள்ளிக்கூடத்துக்கு வடக்கு, தெற்கு இருபுறமும் வேகத்தடை அமைக்க வேண்டும் என...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Oct 2022 4:51 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#19494

சாலையில் தேங்கும் கழிவுநீர்

சாலை

ஓசூர் மாநகராட்சி 28-வது வார்டுக்குட்பட்ட கடவுள் நகர் பகுதியில், 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதிக்கு செல்லும் சாலையில், மழைநீர் மற்றும் கழிவுநீர் வெளியேற வழியின்றி சாலையின் நடுவே குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண முன்வர வேண்டும் -சி.ராமாஞ்சி, ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Oct 2022 4:51 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#19493

செயல்படாத சிக்னல்

போக்குவரத்து

ஓசூர் மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து போலீசரால் சிக்னல் விளக்குகள் வைக்கப்பட்டுள்ளன. அவை இதுநாள் வரை செயல்பாட்டுக்கு வரவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு செல்கின்றனர். எனவே 24 மணி நேரமும் சிக்னல் உபயோகத்தில் இருந்தால் போக்குவரத்து சீர்படும். போலீசார் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுவதில் உள்ள சிக்கல் குறையும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போக்குவரத்து சிக்னலை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். -சாயிநாத், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Oct 2022 4:50 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#19491

பஸ் இயக்க வேண்டும்

போக்குவரத்து

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே அரசம்பட்டியில் இருந்து பாரூர்- கிருஷ்ணகிரி சாலையில் சிறுபாலம் அமைக்கும் பணி கடந்த 6 மாதங்களாக தாமதமாக நடந்து வருகிறது. இதனால் நாகரசம்பட்டியில் இருந்து தர்மபுரி வரும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் பஸ் இல்லாமல் சிரமப்படுகிறார்கள். எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் அந்த வழியாக பஸ் இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுரேஷ், போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Oct 2022 5:47 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#19276

மின்விளக்கு அமைக்க வேண்டும்

மின்சாரம்

சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் இருந்து மேட்டூர் செல்லும் நெடுஞ்சாலையில் தொளசம்பட்டி பிரிவில் அரசு பெண்கள் ஆதிதிராவிடர் நல விடுதி உள்ளது. இந்த விடுதியின் முன்பகுதி சாலையில் எந்தவொரு மின்விளக்கு வசதியும் இல்லை. இதனால் அப்பகுதி இருளில் மூழ்கியுள்ளது. இரவு நேரங்களில் மது அருந்துவது போன்ற சமூக விரோத செயல்களில் சிலர் ஈடுபடுகின்றனர். எனவே அப்பகுதியில் மின்விளக்கு அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பாஸ்கர், தாரமங்கலம், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Oct 2022 5:46 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#19275

சாக்கடை கால்வாய் அமைக்கப்படுமா?

சாக்கடை கால்வாய் அமைக்கப்படுமா?கழிவுநீர்

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சி 13-வது வார்டு புதூர் தெருவில் கடந்த 5 வருடங்களாக சாலையில் சாக்கடை நீர் தேங்கியுள்ளது. மழைகாலங்களில் மழைநீருடன் கழிவு நீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மலேரியா போன்ற காய்ச்சலால் அவதியடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாக்கடை கால்வாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -இந்திராணி, பெத்தநாயக்கன்பாளையம், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Oct 2022 5:45 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#19274

பராமரிப்பு இல்லாத குடிநீர் தொட்டி

பராமரிப்பு இல்லாத குடிநீர் தொட்டிதண்ணீர்

சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா ஓலைப்பட்டி கிராமம் பாரப்பட்டியில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி கடந்த 7 மாதமாக முறையான பராமரிப்பின்றி உள்ளது. இந்த தொட்டியில் இருந்து குடிநீரை பயன்படுத்துவதால் முதியவர்கள், குழந்தைகளுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது. எனவே இந்த குடிநீர் தொட்டியை சுத்தம் செய்து தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -முருகேசன், பாரப்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Oct 2022 5:44 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#19273

'தினத்தந்தி'க்கு பாராட்டு

ட்ரெண்டிங்

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே வெண்டாங்கியில் ஒரு பயணிகள் நிழற்கூடத்தில் வைக்கோல் போர் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இது குறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதைதொடர்ந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் வைக்கோல் போர்களை அகற்றி நிழற்கூடத்தை சுத்தம் செய்தனர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும் அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். -ராஜ்குமார், சேந்தமங்கலம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Oct 2022 5:43 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#19272

'தினத்தந்தி'க்கு பாராட்டு

மற்றவை

சேலம் மாவட்டம் தொளசம்பட்டி அருகே ஒப்பாறைப்பட்டி கிராமத்தில் பஸ் நிறுத்தம் அருகே மின் கம்பிகள் மரத்தை உரசியவாறு செல்வதால் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியாகி இருந்தது. இதனை தொடர்ந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் தற்போது அந்த மரக்கிளையை அகற்றி உள்ளனர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்திக்கு உதவிய 'தினத்தந்தி'க்கும் அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். -எம்.முருகேசன், ஒப்பாறைப்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Oct 2022 5:41 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#19271

சேதமடைந்த வழிகாட்டி பலகை

மற்றவை

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் இருந்து பரமத்திவேலூர் செல்லும் சாலையில் மணப்பள்ளி அருகே தீர்த்தம்பாளையம் பிரிவு ரோட்டில் வழிகாட்டி பலகை வைக்கப்பட்டிருந்தது. இந்த வழிகாட்டி பலகை தற்போது சேதமடைந்துள்ளது. இதனால் வெளியூரில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் திசை தெரியாமல் தடுமாறுகின்றனர். எனவே இந்த வழிகாட்டி பலகையை சீரமைத்து உரிய இடத்தில் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -ராஜசேகரன், மோகனூர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Oct 2022 5:40 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#19270

மக்கள் பயன்பாட்டுக்கு வருமா?

கழிவுநீர்

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகே ஓ.சவுதாபுரத்தில், பொது மக்கள் பயன்பாட்டுக்காக. சில ஆண்டுகளுக்கு முன் கழிப்பிடம் கட்டப்பட்டது. இதை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் சரியான பராமரிப்பில்லாமல் கழிப்பிடம் சேதமடைந்து பூட்டப்பட்டது. இதனால் மக்கள் திறந்தவெளி பகுதியை கழிப்பிடமாக பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கழிப்பிடத்தை சீரமைத்து திறக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -ராஜேஷ், வெண்ணந்தூர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick