Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
9 Oct 2022 5:02 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#19261

சாலையில் தேங்கும் மழைநீர்

சாலையில் தேங்கும் மழைநீர்தண்ணீர்

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் தாலுகா சோனாரஅள்ளி கூட்ரோடு சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சிப்காட் பகுதியில் இரு சக்கர வாகனங்களில் வேலைக்கு செல்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சாலையில் நிற்கும் மழைநீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா? -சதீஷ், மத்தூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Oct 2022 4:59 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#19260

அடிப்படை வசதிகள் வேண்டும்

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் உள்ள சாலைகள் முற்றிலும் பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இப்பகுதிகளில் ஆங்காங்கே குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சாக்கடை கால்வாய்களும் முறையாக பராமரிக்கப்படாமல் தேங்கி கொசுக்களும் அதிகரித்துள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இந்த பகுதிகளில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Oct 2022 4:58 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#19259

சுகாதாரம் இல்லாத கழிப்பிடம்

சுகாதாரம் இல்லாத கழிப்பிடம்கழிவுநீர்

ஓசூரில் தாலுகா அலுவலகம், நீதிமன்றங்கள், அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் உள்ளிட்டவை ஒரே வளாகத்தில் அமைந்து உள்ளன. இங்கு உள்ள பொது கழிப்பிடம் முட்புதர்களால் ஆக்கிரமித்து சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகிறது. எனவே இந்த பொது கழிப்பிடத்தை சுத்தம் செய்து சுகாதாரமாக வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படுமா? -அரவிந்த், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Oct 2022 4:56 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#19258

பயன்பாட்டுக்கு வராத குப்பை தொட்டி

பயன்பாட்டுக்கு வராத குப்பை தொட்டிகுப்பை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா கெங்கபிராம்பட்டி கிராமத்தில் குப்பை வண்டிகள் பயன்படாமல் பழுதான நிலையில் உள்ளது. எனவே இந்த குப்பை தொட்டிகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -வெங்கடேஷ், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Oct 2022 4:55 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#19257

கால்வாய் தூர்வாரப்படுமா?

கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா எர்ரணஅள்ளி ஊராட்சியில் பொதுபணித்துறை கால்வாய் மூலம் பல்வேறு ஏரிகளுக்கு உபரிநீர் செல்கிறது. இந்த கால்வாய் எர்ரணஅள்ளி ஊராட்சியில் இருந்து பேளாரஅள்ளி ஊராட்சி தாமரை ஏரி வரை சுமார் 2 கி.மீ. தூரம் செல்கிறது. இடைப்பட்ட இந்த இடத்தில் ஆக்கிரமிப்புகளாலும், தூர்வாரப்படாமல் இருப்பதாலும் உபரி நீர் ஆங்காங்கே குடியிருப்பு மற்றும் விவசாய நிலத்தில் புகுந்து விவசாய பயிர்களை நாசம் செய்கிறது. எனவே இந்த கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ரவி, எர்ரணஅள்ளி,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Oct 2022 4:54 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#19256

ஆபத்தான கிணறு

மற்றவை

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே பத்திரஅள்ளி ஊராட்சி பூச்சூரில் ஏரியூர்- மேச்சேரி சாலையின் ஓரம் உள்ள கிணறு மூடப்படாமல் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த கிணற்றை மூடி போட்டு மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -குமரன், பூச்சூர், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Oct 2022 4:53 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#19255

ஊருக்குள் வராத பஸ்கள்

போக்குவரத்து

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பகுதிகளில் இரவு நேரங்களில் ஊருக்குள் வராமல் வெள்ளிச்சந்தை பகுதியில் இருந்து மாரண்டஅள்ளிக்கு சில பஸ்கள் வருவதில்லை. இதனால் வெளியூர் சென்று திரும்பும் பயணிகள் இரவு நேரங்களில் பஸ் வசதி இல்லாமல் அவதியடைகின்றனர். எனவே அனைத்து பஸ்களும் ஊருக்குள் வந்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சரவணன், மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Oct 2022 4:52 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#19254

தாழ்வாக தொங்கும் மின்கம்பிகள்

மின்சாரம்

தர்மபுரி மாவட்டம் எ.ஜெட்டிஅள்ளி ஊராட்சி கோடியூர் கிராமத்தில் இருந்து தேங்காமரத்துப்பட்டி கிராமத்திற்கு செல்லும் சாலையின் குறுக்கே தாழ்வாக மின்கம்பிகள் தொங்குகின்றன. இதனால் இந்த சாலை வழியாக பள்ளி, கல்லூரி வாகனங்கள், டிராக்டர்கள் உள்பட பல்வேறு வாகனங்கள் செல்லும் போது மின் கம்பிகள் மீது உரசி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே விபத்து ஏற்படும் முன் சாலையின் குறுக்கே தாழ்வாக செல்லும் மின் கம்பியை சரி செய்ய வேண்டும் என அப்பகுதி வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். -ஜெகன், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Oct 2022 5:14 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#19011

வேகத்தடைக்கு வர்ணம் அவசியம்

சாலை

ராசிபுரத்தில் இருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் கவுண்டம்பாளையம் மின்வாரிய அலுவலகம் உள்ளது. இங்குள்ள பஸ் நிறுத்தம் அருகில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. வேகத்தடையில் வெள்ளை கோடு இல்லாததால் பகல் நேரத்திலும் கூட வேகத்தடை இருப்பது வாகன ஓட்டிகளுக்கு தெரியாமல் விபத்துக்கு உள்ளாகின்றனர். அதேபோல் இரவு நேரங்களிலும் வேகத்தடை மீது வெள்ளை கோடு இல்லாததால் இரண்டு சக்கர வாகன ஓட்டிகளும், ஆட்டோ மற்றும் லோடு ஆட்டோ போன்றவைகளும் விபத்துக்குள்ளாகின்றன. இதனால் பலர் காயம் அடைகின்றனர். எனவே விபத்தை தடுக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Oct 2022 5:13 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#19009

சேதமடைந்த சாக்கடை கால்வாய்

சேதமடைந்த சாக்கடை கால்வாய்கழிவுநீர்

நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஒன்றியம் பரளி ஊராட்சி மேல் பரளியில் இருந்து கீழ்பரளி செல்லும் குறுக்கு சாலையில் கழிவுநீர் சாக்கடை கால்வாய் செல்கிறது. அந்த சாக்கடை கால்வாயின் சிமெண்டு மூடி சேதமடைந்து உள்ளது. இதனால் 2 இடங்களில் இடிந்து சேதாரமாகி உடைந்து பெரிய ஓட்டை ஏற்பட்டு உள்ளது. இரவு நேரங்களில் செல்வோரும், புதியதாக வருபவரும் திடீரென குழிக்குள் விழும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட துறையினர் அதை சரி செய்ய வேண்டும். -ராசப்பன், அணியாபுரம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Oct 2022 5:12 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#19008

மீன்பிடி குத்தகை ஏலம் விடப்படுமா?

மற்றவை

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரை அடுத்த ஓ.சவுதாபுரம் பகுதிக்கு உட்பட்ட சேமூர் ஏரி உள்ளது. இந்த ஏரியில் மீன்பிடி குத்தகை ஏலம் விடப்படாமல் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மீண்டும் மீன்பிடி குத்தகை ஏலம் நடைமுறைக்கு கொண்டு வரப்படுமா? என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -வசந்தகுமார், ஓ.சவுதாபுரம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Oct 2022 5:11 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#19007

செடி, கொடிகள் அகற்றப்படுமா?

செடி, கொடிகள் அகற்றப்படுமா?கழிவுநீர்

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தாலுகா கொசவன்குட்டை கிராமத்தில் சாக்கடை கால்வாயில் செடி, கொடிகள் முளைத்து புதர் மண்டி கிடக்கிறது. இதனால் கழிவுநீர் செல்லாமல் தேங்குவதால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார கேடும் ஏற்படுகிறது. எனவே இந்த சாக்கடை கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -இளவரசன், கொசவன் குட்டை, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick