Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
5 Oct 2022 5:10 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#19005

வாகன ஓட்டிகள் அவதி

வாகன ஓட்டிகள் அவதிபோக்குவரத்து

சேலம், நெய்க்காரபட்டி, கொண்டலாம்பட்டி, கந்தம்பட்டி ஆகிய பகுதிகளுக்கு மத்தியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையின் மேம்பாலத்தின் அருகே குப்பைகள் குவிந்து கிடக்கிறது. அதை சிலர் தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் அதில் வரும் புகையின் காரணமாக முன் செல்லும் வாகனங்கள் தெரிவதில்லை. மேலும் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதால் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பைகளை எரிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுக்கின்றனர். -மு.ரமேஷ், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Oct 2022 5:09 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#19002

கழிவுநீர் கால்வாய் தூர்வார வேண்டும்

கழிவுநீர்

சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகா இருப்பாளி வாரச்சந்தை அருகில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் மழைநீர், கழிவுநீர் குட்டை போல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதாரக் சீர்கேடு ஏற்படுவதுடன் பொது மக்களுக்கு தொற்று நோயும் ஏற்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சாக்கடை கால்வாயை தூர்வாரி கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-பன்னீர்செல்வம், இருப்பாளி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Oct 2022 5:07 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#19000

சுகாதார கேடு

கழிவுநீர்

சேலம் அமானி கொண்டலாம்பட்டியில் காட்டூர் ஏரி உள்ளது. பழைய பஸ் நிலைய பகுதியில் இருந்து வரும் கழிவுநீர் காட்டூர் ஏரியில் கலக்கிறது. இதனால் ஏரி தண்ணீர் முழுவதும் கெட்டு அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார கேடும் ஏற்படுகிறது. சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால் கழிவுநீர் ஏரியில் கலக்கிறது. எனவே இங்கு சாக்கடை கால்வாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -மோகன், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Oct 2022 5:06 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#18998

தாமதாகும் சாக்கடை கால்வாய் பணி

தாமதாகும் சாக்கடை கால்வாய் பணிகழிவுநீர்

சேலம் பெரியபுதூரில் சாக்கடை கால்வாயை பெரிதாக்கும் பணிகள் தாமதமாக நடந்து வருகிறது. இதனால் சாலையில் ஆங்காங்கே சாக்கடை நீர் குளம்போல் தேங்குவதால் அந்த பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் அதிகமாக உள்ளது. எனவே இந்த சாக்கடை கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். -ரவி, பெரிய புதூர், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Oct 2022 2:49 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#18916

அகற்ற வேண்டிய ஆக்கிரமிப்புகள்

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த சவுட்டஹள்ளி ஊராட்சியில் ராமர்பட்டினத்தில், வருவாய்துறைக்கு சொந்தமான காடுகளை அழித்து சுமார் 100 ஏக்கருக்கு மேல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அது குறித்து புகார் செய்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராமமூர்த்தி, ராமர்பட்டிணத்தில், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Oct 2022 2:48 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#18915

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

மின்சாரம்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் மஜித்கொல்லஅள்ளியில் இருந்து ஐகுந்தம் கொத்தபள்ளிக்கு செல்லும் சாலையில் மின் கம்பிகள் மிகவும் தாழ்வான பகுதியில் செல்கிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகனஓட்டிகள் மிகவும் அச்சத்துடன் செல்கின்றனர். எனவே இந்த மின் கம்பிகளை உயர்த்தி கட்ட வேண்டும். -மணிகண்டன், பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Oct 2022 2:47 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#18914

பழுதடைந்த மீட்டர் பெட்டி

மின்சாரம்

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் சாலமரத்துப்பட்டி ஊராட்சி ஓலப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் மின்சார வயர்கள் சேதம் அடைந்து சுவற்றில் மின்சாரம் பாய்கிறது. மேலும் மின்சார மீட்டர் பெட்டி பழுதடைந்த நிலையில் உள்ளது. மாணவர்கள் அச்சத்துடன் இருந்து வருகின்றனர். இதுகுறித்து பலமுறை சொல்லியும் சரி செய்யவில்லை. எனவே மாணவர்கள் பாதுகாப்பு கருதி உடனடியாக விபத்து ஏற்படும் முன்பு மின்சார வயர்களை சரி செய்ய வேண்டும். -சுதாகர், மத்தூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Oct 2022 2:47 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#18913

காம்பவுண்டு சுவர் அமைக்கப்படுமா?

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் இருந்து கல்லாவி வழியாக தர்மபுரி செல்லும் சாலையில் கல்லூர் கிராமம் உள்ளது. இந்த கிராம மக்களுக்கு சுடுகாடு கல்லாவி சாலை ஓரத்தில் அமைந்துள்ளது. இதனால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய வருபவர்கள் சாலையோரம் அமர்ந்து உள்ளனர். இதனால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சுடுகாட்டிற்கு காம்பவுண்டு சுவர் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -சுகுமார், கல்லூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Oct 2022 2:46 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#18911

பயன்படாத கிணறு

மற்றவை

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த பூதநத்தம் ஊராட்சியில் குண்டல்மடுவில் திறந்தவெளி கிணறு உள்ளது. இந்த கிணறு அரசு பள்ளி அருகில் அமைந்துள்ளது. தற்போது தண்ணீர் இல்லாமல் காணப்படும் இந்த கிணற்றில் பள்ளி குழந்தைகள் தவறி விழ வாய்ப்பு உள்ளது. எனவே ஏதும் அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு பயன்பாடு இல்லாமல் உள்ள கிணற்றை ஊராட்சி நிர்வாகம் மூட வேண்டும் அல்லது கிணற்றுக்கு இரும்பு மூடி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -பழனி, பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Oct 2022 2:46 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#18909

வெளியேற்ற வேண்டிய கழிவுநீர்

வெளியேற்ற வேண்டிய கழிவுநீர்கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி எம்.செட்டி‌அள்ளி ஊராட்சி பகுதியில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் நீண்ட நாட்களாக மழை நீர் தேங்கி நிற்கிறது. இதில் கொசுக்கள் அதிகம் உற்பத்தி ஆகிறது. அதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் அபாயம் உள்ளதால் சாக்கடை கால்வாயில் தேங்கி நிற்கும் கழிவுநீரை வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். - வெற்றி, மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Oct 2022 2:45 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#18908

கிணற்றில் குப்பைகள் கொட்டலாமா?

கிணற்றில் குப்பைகள் கொட்டலாமா?குப்பை

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் ஒன்றியம் தென்கரைகோட்டையில் மசூதி அருகே திறந்தவெளி கிணறு உள்ளது. இதில் அந்த பகுதி மக்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அந்த கிணற்றை தூர்வார வேண்டும் அல்லது இரும்பு மூடி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -குமரவேல், தென்கரை கோட்டை, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Oct 2022 6:03 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#18772

ஆபத்தான கட்டிடம்

மற்றவை

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரை அடுத்த ஆலம்பட்டி பஞ்சாயத்து அலுவலக கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் மீது செடிகள் முளைத்து, சேதமடைந்து இடியும் நிலையில் ஆபத்தாக உள்ளது. எனவே இந்த செடிகளை அகற்றி கட்டிடத்தை சீரமைத்து முறையாக பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -கார்த்திக், ஆலம்பட்டி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick