Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
25 Dec 2022 4:29 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#24346

பூட்டியே கிடக்கும் வணிக வளாக கடை

மற்றவை

தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டார வளர்ச்சி அலுவலக கட்டுப்பாட்டில் வணிக வளாகம் உள்ளது. அதில் ஒரு கடை கடந்த 4 ஆண்டுகளாக செயல்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் அந்த கடையின் மூலம் அரசுக்கு வர வேண்டிய வருவாய் தடைப்பட்டுள்ளது. எனவே மூடி கிடக்கும் கடையை உடனடியாக திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -திருவேங்கடம், அரூர், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Dec 2022 4:28 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#24345

குண்டும், குழியுமான சாலை

சாலை

ஓசூர்- பெங்களூரு நெடுஞ்சாலையில் உள்ள தர்கா ஏரி அருகே சர்வீஸ் சாலையில் இருந்து நியூ அட்கோ பகுதிக்கு செல்லும் 100 அடி சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைகின்றனர். மேலும் சிறு சிறு விபத்துகளும் நடந்த வண்ணம் உள்ளன. எனவே உடனடியாக சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -முரளி, ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Dec 2022 4:27 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#24344

ஆபத்தான உயர்கோபுர மின்விளக்கு

மின்சாரம்

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் நகர மைய பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இந்த உயர்கோபுர மின் விளக்கை பராமரித்த பணியாளர்கள் ஆபத்தான முறையில் மின்விளக்கை பாதியிலேயே தொங்கும்படி விட்டு சென்று விட்டனர். இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர். எனவே ஆபத்தான உயர்கோபுர மின்விளக்கை சரி செய்ய மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -ராகவன், வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Dec 2022 4:26 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#24343

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ரவுண்டானா 4 சாலையானது பெங்களூரு, புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை மற்றும் சேலம், வேலூர் செல்லும் சாலையை இணைக்கும் மைய பகுதியாக உள்ளது. இதனால் அப்பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. எனவே ரவுண்டானா பகுதியில் போக்குவரத்தை சீர் செய்ய காலை மற்றும் மாலை நேரங்கள், பள்ளி நேரங்களில் போக்குவரத்து போலீசாரை நியமிக்க வேண்டும். -அண்ணாமலை, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Dec 2022 4:25 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#24342

பூங்காக்கள் மேம்படுத்தப்படுமா?

பூங்கா

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி பகுதியில் அம்மன் கோவில் அருகே மாநகராட்சி பூங்கா மற்றும் தனியார் லேஅவுட்களில் உள்ள சில பூங்காக்கள் அடிப்படை வசதியின்றி உள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள், சிறுவர்கள் பூங்காவை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பூங்காக்களை மேம்படுத்துவார்களா? -கலாவதி, மத்திகிரி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Dec 2022 4:33 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#24093

மீண்டும் பஸ் இயக்க வேண்டும்

போக்குவரத்து

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தாலுகா சிவியாம்பாளையம் கிராமத்தில் ஏராளமானோர் நாமக்கல்லுக்கு கூலி வேலைக்கு சென்று விட்டு இரவு நேரத்தில் வீடு திரும்புகின்றனர். கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பஸ்கள் இதுவரை இயக்கப்படவில்லை. அவ்வப்போது பஸ் வசதி இல்லாததால் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். சிலர் நடந்தே வீட்டிற்கு வரும் சூழ்நிலை உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி இரவுநேர பஸ் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். -மணி, சிவியாம்பாளையம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Dec 2022 4:33 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#24092

காவிரி ஆற்றில் கலக்கும் சாய கழிவுநீர்

கழிவுநீர்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பஸ் நிலைய பகுதியில் உள்ள ஒரு சாக்கடை கால்வாயில் இருந்து செல்லும் சாயப்பட்டறை கழிவுநீரானது நேரடியாக காவிரி ஆற்றில் கலக்கிறது. இதனால் காவிரி ஆற்றில் தண்ணீர் மாசடைந்து துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து சாக்கடை கால்வாயில் சாய கழிவுநீரை திறந்து விடும் சாயப்பட்டறைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். -சபரி, பள்ளிபாளையம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Dec 2022 4:32 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#24091

பழுதடைந்த சாலை

சாலை

நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஒன்றியம் என்.புதுப்பட்டியில் இருந்து குரும்பபட்டி செல்லும் சாலை மழையின் காரணமாக மிகவும் மோசமாக பழுந்து அடைந்துள்ளது. இந்த சாலையில் பள்ளி மாணவர்கள் செல்வதற்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் மற்றும் பொதுமக்கள் செல்வதற்கு மிகவும் பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. பொதுமக்கள் நலன் கருதி நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும். -எம்.பிரபாகரன், குரும்பபட்டி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Dec 2022 4:32 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#24089

பராமரிப்பு இல்லாத பள்ளி

மற்றவை

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் நவணி தோட்டகூர்பட்டி ஊராட்சி புதுச்சத்திரம் பகுதியில் செயல்படும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி வளாகம் பராமரிப்பு இன்றி காணப்படுகிறது. மாணவ, மாணவிகள் பயன்படுத்தும் கழிவறைகள் தூய்மையின்றி உள்ளது. மேலும் செடி, கொடிகள் வளர்ந்து விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. எனவே பள்ளி மாணவர்களின் நலன் கருதி தக்க நடவடிக்கை எடுத்து பள்ளியை தூய்மையாக வைக்க வேண்டும். -வெற்றி, நவணி தோட்டகூர்பட்டி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Dec 2022 4:31 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#24088

ஆற்றில் ஆபத்தான பயணம்

ஆற்றில் ஆபத்தான பயணம்மற்றவை

சேலம் மாவட்டம் ஓமலூர் தொகுதி தும்பிபாடி ஊராட்சி கெண்டபெரியான் வலசு பகுதியில் சாலையில் சரபங்கா நீர் ஓடுகிறது. சாலையே தெரியாத அளவுக்கு நதிநீர் தேங்கி இருப்பதால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி குழந்தைகள் ஆபத்தான நிலையில் நடந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நதியில் தேங்கியிருக்கும் நீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பார்களா? -சிவா, கெண்டபெரியான் வலசு, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Dec 2022 4:30 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#24087

பயன்படாத சமுதாய கூடம்

பயன்படாத சமுதாய கூடம்மற்றவை

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே பெரிய ஏரி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் சுமார் 8 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். ஊராட்சியில் விவசாயிகள் விவசாயக் கூலி தொழிலாளர்கள்அதிகமாக வசிக்கின்றனர். இந்த கிராமத்தில் சமுதாய நலக்கூடம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்தது. தற்போது தேவையற்ற பொருட்களை உள்ளே போட்டு மூடி வைத்துள்ளனர். இந்த சமுதாயநலக்கூடம் பயன்படாமல் மூடியே கிடைக்கிறது. அதனை சுற்றிலும் பல்வேறு செடி, கொடிகள் முளைத்து, பயன்படாத பொருட்கள் அதன் அருகில் போடப்பட்டு மூடிக் கிடக்கின்றன. எனவே சமுதாய...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Dec 2022 4:30 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#24085

பயணிகள் இருக்கை அவசியம்

மற்றவை

சேலம் பஸ் நிலையத்தில் இருந்து தமிழகத்தில் அனைத்து பகுதிகளுக்கும் சென்று வர 24 மணி நேரமும் பஸ்கள் சென்று வருகிறது. இதனால் சேலம் பஸ் நிலையம் எப்போதும் பரபரப்பாக பயணிகள் கூட்டத்துடன் காணப்படும். இந்நிலையில் பஸ் நிலையத்தில் உள்ளே பயணிகள் அமர இட வசதி இல்லை. அனைத்து இடங்களிலும் கடைகள் ஆக்கிரமித்து பயணிகளை மிகவும் சிரமப்படுகின்றனர். குழந்தைகளுடன் வெளியூர் செல்லும் பயணிகள் மிகவும் சிரமப்பட வேண்டிய உள்ளது. எனவே சேலம் பஸ் நிலையத்தில் பயணிகள் அமர இருக்கை தயார் செய்து தர மாநகராட்சி நடவடிக்கை எடுக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick