Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
28 Dec 2022 4:17 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#24554

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

ஓசூர் தின்னூர் பகுதியில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி உள்ளது. அங்குள்ள குழாய்களில் தண்ணீர் கசிந்து வீணாக வெளியேறி வருகிறது. இதனால் அந்த பகுதி பொது மக்கள் குடிநீருக்காக கடும் சிரமப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குழாய்களை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. -நாகராஜ், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Dec 2022 5:37 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#24364

வேகத்தடைக்கு வர்ணம் பூச வேண்டும்

போக்குவரத்து

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் பொன்குறிச்சி அருகே தரைப்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பாலத்தின் அருகில் இருபக்கமும் வேகத்தடை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேகத்தடை மீது வெள்ளை கோடு போடப்படவில்லை. இதனால் அந்த வழியாக வரும் வாகனங்களுக்கு வேகத்தடை இருப்பது தெரியாமல் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வேகத்தடை மீது வெள்ளை வர்ணம் பூச வேண்டும். -பழனி, ராசிபுரம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Dec 2022 5:35 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#24363

பராமரிப்பில்லாத அரங்கம்

மற்றவை

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் விசேஷ நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு செம்மேட்டில் உள்ள வல்வில் ஓரி சிலைக்கு எதிரில் வல்வில் ஓரி அரங்கம் கட்டப்பட்டது. அந்த அரங்கத்தில் அவ்வப்போது பெரிய அளவிலான கூட்டங்கள் மற்றும் விசேஷ நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் அது திறந்த வெளி அரங்கமாக காணப்படுவதால் அங்குள்ள சில சமூக விரோதிகள் அரங்கத்திற்குள் சிறுநீர் கழித்தும், குப்பைகளை போட்டும் அசுத்தம் செய்து வருகின்றனர். எனவே அந்த அரங்கத்தை சீரமைத்து முறையாக பராமரிக்க வேண்டும். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Dec 2022 5:34 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#24362

கழிவுநீரால் துர்நாற்றம்

கழிவுநீர்

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் 4-வது வார்டு வெட்டுகாடு பகுதியில் உள்ள சாலைகளில் சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. எனவே தேங்கி நிற்கும் கழிவுநீரை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சதாசிவம், வெண்ணந்தூர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Dec 2022 5:32 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#24361

குப்பைகள் அகற்றப்படுமா?

குப்பை

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அடுத்த அணியாபுரம் பஸ் நிலையத்தில் இருந்து தோளூர் செல்லும் சாலையில் அணியாபுரத்தில் உள்ள காலனி பகுதியில் சாலையோரத்தில் குப்பை கொட்டி கிடக்கிறது. அதனால் துர்நாற்றம் வீசுகிறது. அதுமட்டுமின்றி பலமாக காற்று வீசும் போது காற்றில் குப்பைகள் பறந்து வாகனத்தில் செல்பவர்கள் மீது கண்களில் பட்டு விடுவதால், சாலையில் செல்லும் பயணிகள் பெரிதும் பாதிப்படைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினால் குப்பையை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -அன்பழகன், லத்துவாடி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Dec 2022 5:31 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#24360

தாமதமாகும் சாக்கடை கால்வாய் பணி

கழிவுநீர்

சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள நெய்க்காரப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட நெடுந்தார் காடு பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் தற்போது வரை இந்த பணி முடிக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் நடமாடக்கூட கடும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த சாக்கடை கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பார்களா? -சிவா, கொண்டலாம்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Dec 2022 5:30 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#24359

நோய் பரவும் அபாயம்

மற்றவை

சேலம் அம்மாப்பேட்டை பெரியார் நகர் வைத்தி உடையார்காடு தெருவில் உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க வேண்டும். -கண்ணன், அம்மாபேட்டை, சேலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Dec 2022 5:29 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#24358

சுகாதார சீர்கேடு

குப்பை

சேலம் நெடுஞ்சாலை நகர் கங்கை தெருவில் சாக்கடை கால்வாய் கழிவுகளை எடுத்து சாலையின் ஓரத்தில் குவியல், குவியலாக அப்படியே போட்டுவிட்டு மாநகராட்சி ஊழியர்கள் செல்கிறார்கள். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் சாக்கடை கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். -உஷா, நெடுஞ்சாலை நகர், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Dec 2022 5:28 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#24357

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

மற்றவை

சேலம் சத்திரம் சீதாராமன் செட்டி ரோட்டில் புதிதாக அமைக்கப்பட்ட சாலை மற்றும் நடைபாதையில் கடைகளை வைத்து நடைபாதை மற்றும் சாலையை முற்றிலும் ஆக்கிரமித்து உள்ளனர். இதனால் சாலையில் செல்லும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே அதிகாரிகள் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா? -ராஜேஷ், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Dec 2022 4:32 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#24349

சுரங்கப்பாதையை விரிவுபடுத்த வேண்டும்

மற்றவை

தர்மபுரி அரசு கலைக்கல்லூரி பின்புறம் ெரயில்வே சுரங்கப்பாதை உள்ளது. இந்த சுரங்கப்பாதையை கடந்து தான் பெருமாள் கோவில்மேடு, பட்டாளம்மன் கோவில், வெண்ணாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு குடியிருப்பு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் தடங்கம் கிராமத்தில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றங்களுக்கு செல்லும் முக்கிய வழியாக உள்ளது. ஆனால் இந்த சுரங்கப்பாதை சிறிய அளவில் உள்ளதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இந்த சுரங்கப்பாதையை விரிவபடுத்தி கார் மற்றும் பள்ளி, கல்லூரி வாகனங்கள் சென்று வரும்படி ரெயில்வே...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Dec 2022 4:31 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#24348

பஸ் நிலைய பணி விரைந்து முடிக்கப்படுமா?

போக்குவரத்து

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் புதிய பஸ் நிலைய கட்டுமான பணி கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. கட்டுமான பணி தொடங்கி நீண்ட நாட்களாகியும் தற்போது வரை முடிக்கப்படாமல் உள்ளது. இதனால் பென்னாகரம் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே விரைவாக பஸ் நிலைய பணியை முடிக்க வேண்டும். -சதீஷ்குமார், பென்னாகரம், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Dec 2022 4:30 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#24347

பராமரிப்பு இல்லாத அரசு அலுவலகம்

மற்றவை

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பஸ் நிலையம் அருகே வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகம் முறையான பராமரிப்பு இல்லாததால் பழுதடைய தொடங்கி உள்ளது. மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. சுவர்களின் சில இடங்கள் பெயர்ந்து கீழே விழுகிறது. எனவே பழுதடைந்த வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை முறையாக பராமரித்து சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். -பார்த்திபன், மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick