Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
28 Dec 2022 5:49 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#24588

பராமரிப்பு இல்லாத தொலைநோக்கு கருவி இல்லம்

மற்றவை

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் அங்குள்ள புகழ்பெற்ற அறப்பளீஸ்வரர் கோவில், நீர்வீழ்ச்சிகள், பூங்கா, படகு சவாரி போன்ற பல்வேறு பகுதிகளை கண்டு ரசித்து வருகின்றனர். சோளக்காட்டில் பயணியர் தங்கும் விடுதி வளாகத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பாக தொலைநோக்கு கருவி இல்லம் கட்டப்பட்டது. அந்த இல்லம் தற்போது பராமரிப்பின்றி பாழடைந்து காணப்படுகிறது. எனவே இந்த தொலைநோக்கு கருவி இல்லத்தை சீரமைத்து, திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். -ஜேம்ஸ், சோளக்காடு,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Dec 2022 5:48 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#24587

தெருவிளக்குகள் அமைக்கப்படுமா?

மின்சாரம்

எடப்பாடி தாலுகா ஆவனிப்பேரூர் கீழ்முகம் கிராமம் போடிநாயக்கன்பட்டி புறவழிச்சாலையில் தெருவிளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் பொதுமக்கள் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்ல அச்சப்படுகின்றனர். எனவே இந்த சாலையில் ெதருவிளக்குகள் அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா? -ஹரிகிருஷ்ணன், எடப்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Dec 2022 5:47 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#24585

குப்பைகளால் சுகாதார சீர்கேடு

குப்பை

ஓமலூர் தாலுகா சாமிநாயக்கன்பட்டி ஊராட்சி திருவேங்கட நகரில் சில வீடுகளின் முன்பும், சாலையோரமும் குப்பைகளை கொட்டுகிறார்கள். இதனால் அந்த பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்ற வேண்டும். -சேகர், ஓமலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Dec 2022 5:46 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#24584

சாலையில் தேங்கும் மழைநீர்

தண்ணீர்

எடப்பாடி காவலர் குடியிருப்பு நுழைவு பகுதியில் உள்ள பிரதான சாலையில் மழை காலங்களில் தண்ணீர் குட்டை போல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் கொசு உற்பத்தியாகி தொற்று ஏற்படுகிறது. மேலும் வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கோபால், எடப்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Dec 2022 5:45 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#24583

குப்பைகள் அகற்றப்படுமா?

குப்பை

சேலம் சித்தனூரை அடுத்துள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகில் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. மேலும் அருகே குடியிருப்பவர்கள், வாகனங்களில் செல்வோர், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் மிகுந்த சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த குப்பைகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -மங்களம் ராஜா, வட்டமுத்தாம்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Dec 2022 4:25 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#24561

சேதமடைந்த கட்டிடம்

மற்றவை

தர்மபுரி மாவட்டம் இண்டூர் ஊராட்சிக்குட்பட்ட பழைய இண்டூர் கிராமத்தில், தமிழ்நாடு கதர் வாரியம் மூலம் பாய் தயாரிக்கும் 2 கட்டிடங்கள் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த கட்டிடங்களில் கோரப் பாய்களை கைகள் மூலம் தயார் செய்து விற்பனை செய்து வருகின்றனர். தற்போது இந்த இரு கட்டிடங்களின் தரைகள் மற்றும் மேற்கூரைகள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் தொழிலாளர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த கட்டிடங்களை சீரமைக்க பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -சந்தோஷ்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Dec 2022 4:24 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#24560

திறந்த கிடக்கும் சாக்கடை கால்வாய்

கழிவுநீர்

தர்மபுரி சின்னசாமி நாயுடு தெருவில் உள்ள புறநகர் பஸ் நிலையத்தில் தெற்கு புற நகராட்சி கடைகளுக்கு முன்பு உள்ள சாக்கடை கால்வாயில் மூடப்பட்டிருந்த சிமெண்டு சிலாப்புகள் சேதமடைந்து திறந்துகிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் கால்வாயில் அடிக்கடி விழுந்து காயமடைகின்றனர். எனவே ஆபத்தான நிலையில் திறந்து கிடக்கும் சாக்கடை கால்வாயை மூடுவதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கண்ணன், சின்னசாமி நாயுடு தெரு, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Dec 2022 4:23 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#24559

பயணிகள் நிழற்குடை சீரமைக்கப்படுமா?

போக்குவரத்து

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் தர்மபுரி-பொம்மிடி செல்லும் சாலையில் கோழிப்பண்ணை பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தில் உள்ள பயணிகள் நிழற்குடை இடிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. இதனால் இந்த பஸ் நிறுத்தத்தில் பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் வெயில், மழை காலங்களில் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பயணிகள் நிழற்குடையை சீரமைப்பார்களா? -மாது, மோளையானூர், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Dec 2022 4:22 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#24558

தாமதமாகும் சாக்கடை கால்வாய் பணி

கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சி.எம்.புதூரில் கழிவு நீர் கால்வாய் அமைப்பதற்காக குழி தோண்டப்பட்டது. ஆனால் கால்வாய் அமைக்கும் பணி மிகவும் தாமதமாக நடைபெறுகிறது. அதனால் இந்த பகுதியில் செல்லும் வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -சக்திவேல், சி.எம்.புதூர், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Dec 2022 4:21 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#24557

சுகாதாரமற்ற கழிவறை

கழிவுநீர்

ஓசூரில் தாலுகா அலுவலகம், நீதிமன்றங்கள் உள்ளிட்டவை ஒரே வளாகத்தில் அமைந்துள்ளன. இங்குள்ள கழிவறையை சுற்றி முட்புதர்கள் சூழ்ந்துள்ளன. மேலும் கழிவறையும், சுகாதாரமின்றி உள்ளதால் பொதுமக்கள் பயன்படுத்தாத நிலையில் உள்ளது. எனவே இந்த கழிவறையை முறையாக பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பிரபாகரன், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Dec 2022 4:19 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#24556

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

ஓசூர் ராமநாயக்கன் ஏரிக்கரையில் ஓம்சக்தி கோவில் அருகில் வளைவாக உள்ள பாலத்தின் மீது கார்களை நீண்ட வரிசையில் நிறுத்திவிடுகிறார்கள். இதனால் அந்த வளைவில் கனரக வாகனங்கள் வரும் போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே போக்குவரத்துக்கு இடையூறாக கார்கள் நிறுத்தப்படுவதை தடுக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா? -ரவிச்சந்திரன், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Dec 2022 4:18 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#24555

சிறுவர் பூங்கா மேம்படுத்தப்படுமா?

பூங்கா

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்சிக்குட்பட்ட இந்திரா நகரில் உள்ள சிறுவர் பூங்காவில் பள்ளி மாணவ-மாணவிகள், இளைஞர்கள் உடற்பயிற்சி செய்வதோடு, குழந்தைகள் விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். தற்போது இந்த பூங்கா சேதமடைந்து, விளையாட்டு கருவிகள் அனைத்தும் உபயோகப்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே விளையாட்டு கருவிகளை சீரமைத்து சிறுவர் பூங்காவை மேம்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சுதாகரன், ஊத்தங்கரை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick